எனது கவிதைகள்
பிரபஞ்சதின்அடர் இருளாக
உன் அன்பு
யுகங்கள் கடந்து
காத்திருக்க
அவ்வப்போது வரும்
நட்சத்திர ஒளிக்கீற்றாய்
உன் நினைவுகள் பயனிதிருக்க
காலங்கள் கடந்து
பயணப்படும் ஒளி
மயமான உறவுகள்
நம்மைபோலவே.........நீயும் நானும்
நிலவும் தென்றலும்
ஒளியும் இருளும்
மலரும் மணமும்
மலையும் அருவியும்
விளக்குக்கும் ஒளியும்
இணந்தே பிரிகிறோம்
மனமில்லாமல்....
ஒய்ந்து அமர்கிறேன் உன்னில் என்னைத்தேடி
என்னைச்சுற்றி பரவுகிறாய்
காற்றாககையில் பிடிபடாமல்
ஒளியாக என்னுள் பரவி
விடுவிக்கிறாய்
இருளின் பிடியிலிருந்து
உன்னில் கரைகிறேன்
நான் என்னை மறந்து
கண்மூடும்வேளைகளில்
நெருங்குகிறாய் கனவின் நிழலாக
கண்திறந்தால் விலகுகிறாய் நிஜமாக
விழிதிறக்கமனமில்லாது விழிமூடியே
உன்னினைவில் மயங்குகிறேன
உன் அதரக்குவியலில்மூழ்கி
அள்ளிஎடுக்கிறேன் முத்துக்களை
முத்தெடுக்கும் வேளைகளில்
உன் முகபாவங்களில் மூழ்கிவிடுகிறேன்
முத்தங்களை மறந்து
விருட்ச்சமாக விரிகிறேன் விழுதுகளோடு
உன் விழியில் வழியும் காதல்கண்டு
உனக்கு நிழல் தரும் பொருட்டு
என் விழிக்குள் நீ பயணம் செய்கிறாய்
இதயம் நோக்கி தூரங்கள் பற்றிய பிராஞ்யை இல்லாமல்
ஏற்கனவே உன் இதயதை நான் அடைந்த நிலையில்
உன்னை அடைந்தமகிழ்வில்
உன்முன் மண்டியிடுகிறேன்
உலகின் அத்தனை மகிழ்வையும்
முகத்தில் தாங்கி
உன் மார்மீது நான் சாய்கிறேன் மயங்கி
மறுஜென்மமும் உன்னுடந்தான்
என்ற மயக்கதில்
உன் குழந்தையின் அன்னையாக
உன் மனதின் உயரங்களில் நான் உயரப்பறக்கிறேன்
உன்னதங்களில் என்னை இழக்கிறேன்
உருவமற்ற அரூபமாகிறேன்
என்னுள் நானே தோலைகிறேன்
தகிப்புகளுடன் நான்
தனலாகிப்போனேன்
தண்ணீர் தொடா
கனலாகிப்போனேன்
புனலாக உன்னை
எதிர் பார்த்து
காய்ந்த மணலாகிப்
போனேன்.......
என்னை தனியேவிட்டுப்
பிரிந்து சென்ற பறவையே
உனக்கு ஆயிரம்
இறகுகள் இருக்கலாம்
ஆனால் என்னுயிர்ப்
பறவை எனக்கென
இருந்த ஒன்றே ஒன்று
நீ மட்டும் தான்
உதிர்து நீ சென்றாலும்
உன் பெயரை மட்டுமே
உச்சரித்துக்கிடக்கும்
இறகு நான்..................
தேனீர் கோப்பையில் விழுந்த
உன் நினைவுகள் காயாத ஈரத்துடன்
கவிதையாக.
இரவெல்லாம் இமைகள் மேல்
கனவுகளாய் விழிதிறந்தால்
இதயம் முழுதும்
உன் நினைவுகளாய் .........நிழழாக நீயும்
நிஜமாக நானும்
கவிதையாகநீய்ம்
கனவாக நானும்.......
காலங்கள் தாண்டி......
கடலைப்பிரிந்த மழையானேன்
காற்றைப்பிரிந்தஉயிரானேன்
உடலைபிரிந்த நிழழானேன்
இதயம் பிரிந்த துடிப்பானேன் .........
.இமைகளுக்கு
நடுவே நீ
இருந்தால் மட்டுமே
இநீமை
No comments:
Post a Comment