கொலுசு அணிந்து
நடக்காதே
உன் கொலுசொலி
தகர்க்கிறது என்
கொள்கைகளை
நெற்றியில் துளிர்க்கும்
நீரை புறங்கையால் துடைக்காதே
நெருப்பாககொதிக்கிறது
நெஞ்சம்............
குனிந்து கோலமிடாதே
கோலங்கள்
நாணிநெழிகின்றன
பிடிபடாமல்.........
உன் கூந்தலை
சரியவிடாதே
சரிக்கிறது என்
சத்தியங்களை..........
No comments:
Post a Comment