Tuesday, 19 February 2013

இழந்த சாம்ராஜ்யம்


.வறண்ட ஆற்றுப்படுகையில்வாசமிழந்து கிடக்கிறது
நீரின் சாம்ராஜ்யம்
ஒரு பேரரசின் வீழ்ச்சியின்
படிமங்களை விளம்பரப்படுத்திக்கொண்டே
...
அதைச்சார்ந்திருந்த விளை நிலங்கள்
பிறிதொரு ஆளுமைக்குள்
அடங்கி விட்டன

நீரின் வீர் பராகிரமங்கள்
கல்வெட்டுக்களாய்
வழிநெடுக பாறைகளில்
தன்னை கரைத்த கதைகளை
சொல்லியபடி..

பேரரசின் மிச்சங்கள்
நாற்றமெடுக்கும் குட்டைகளாய்
சாயக்கழிவுகளுடன்
மீண்டெழும் சாம்ராஜ்யக் கனவுகளுடன்

அதற்கு
ஆறுதல் சொல்லியபடியே
தவளைகளும் நத்தைகளும்.....


No comments:

Post a Comment