வலிகள் தான் எனக்குச்சொன்னது
உன்னை நேசிக்கும் அளவை
விழிகள் அதை அளந்தன
வழியும் நீரை வைத்து
கவிதையும் காதலும் கைகோர்க்கிரது
காலங்கள்தாண்டி கலந்திருக்க
விரல்களும் விரல்களுடன் மொழிபெயர்க்கிறது
இதயத்தின் மொழிகளை கண்களைப்போலவே
உன் ஒவ்வொரு செயலும்
என்னை வசியம் செய்கிறது
எனக்கிடப்ட்ட கோடுகளை தாண்டும் படி
மாயக்கலைகளில் மன்னன் நீ மயக்கும் முடிவுடன்
என் கண்களுக்குள்ளே கனவுகள் விதைக்கிறாய்
கள்ளத்தனமாக இது எது மாதிரியான திருட்டு
கொள்வதற்க்கு பதில் விதைப்பது
என்னை அறீயாமலே சிதறி விடுகின்றன
என் முறுவல் முத்துக்கள்
உன்னை கண்டதும் என்னால்
மறைக்கவியலாமலே......
உன்னோடு உறையும் வேளைகளீல்
என்னுள் கரைகிறேன் என்னை மறந்து
என்னுள் உறங்கும் படிமானங்களை
தவறவிடுகிறேன் என்னில் நிறைந்து
உன் பார்வையின் அர்த்தங்களில்
பரவசமடைகிறேன்
பழுதுகளற்று பயணப்படுவதால்
பசப்புகளுடன் சமரசம் மறுப்பதால்
உன் புன்னகை சாம்ராஜ்யத்தின் எல்லைகள்
என் இதயம் முழுவதும் ஆக்கிரமிப்பில்
என் எல்லைகளை உடைத்தபடி
பரவிக்கிடக்கிறது என்னை அடிமையாக்கி
No comments:
Post a Comment