உன் செல்லக்கடிகளில் சிக்குண்டு
சிறைபட்டுக்கிடக்கிறது
எனது உயிரும் உணர்வுகளும்
விடுதலை விருப்பமின்றி
உனது களவாடல்களை யாரிடமாவது
சொல்லத்துடிக்குது மனது
ஆனால் தடை போடுகிரது வெட்கம்
என்ன திறமை உனக்கு திருட்டுப்பயலே
உன் ஒற்றைப்புன்னகையில் என்னைச்சாய்க்கிறாய்
ஒரவிழிப்பார்வையில் உள்ளத்தைத் தைக்கிறாய்
விலகி இருந்தே விசமம் செய்கிறாய்
விண்ணில் என்னை பறக்கவைக்கிறாய்..
உன் முன்னால் கைகலால் முகம்மறைத்து வெட்கம் கொள்கிறேன்
நீ என் கைபிரித்து முகம் காண்பாய் என
என்னை தோல்விஅடையச்செய்கிறாய்
உன் சிரிப்பால் நானே கைதிறந்து பார்க்கும்ப
எனது கவிதையின்
அகமும் புறமும்
ஆதியும் அந்தமும்
சந்தமும் சப்தமுமாய்
யாதுமாகி நின்றாய் நீ
இதயம் உள்ளே இருக்கும் உன்னை
இருவிழிகொண்டு தேடுகிறேன் பேதை நான்
கண்களுக்குத்தெரியவில்லை
கண்ணீரை நிறுத்தும் வழி
காற்றின் சீற்றங்களுக்குள்ளே சிறைபட்டுக்கிடக்கிறது
உன் மூச்சுகாற்று மரங்கள் அதை சுரம் பிரித்தவுடன்
மறுபடி உன்னை நாடி வரும்
உன்சுவாசக்காற்றாய் என்னைப்போலவே
விழி இமைக்குக்கும் ஒவ்வொரு
மணித்துளியிலும் விலகுவதைத்தாங்காது
இமைக்காது நோக்குகிறேன்
இனியவளே உன் முகத்தை.
No comments:
Post a Comment