விழிகளின் பின்னே விழித்திருக்கும் ஓர் வசந்தம்
வீழ்ந்துகிடக்கும் நெஞ்சதிற்கே சொந்தம்
விழியே வழியாக விரிகிறது
உள்ளே உன் முகம் தெரிகிறது
மயிலின் இறகாய் கண்மை
மயங்கிக் கிடக்கிறது பெண்மை
இரவில் என் எண்ணங்களின் மொழி
கண்ணீராக வழிகிறது
என்னைப்பார்த்து நிலவும்
சோகம் பொழிகிறது
தனிமையில் நான்
என்னுள் தொலையும் வேளைகளில்
அலையாக வந்து
ஆட்கொள்ளுகிரது உன் நினைவு
பிறைகளின் நடூவேயும் நிறைவாய் நீ
என்னுள் நிறைகிறாய் முழுமதியாக
வலிகளின் உச்சத்தில் உன் பெயர்
உச்சரிப்பில் என்னை மறக்கிறேன்
விடுதலையாகஉன்னை உணர்கிறேன்
மீட்டெடுப்பாய் என்னை நீ என்று
உன்னோடு உறையும் வேளைகளில்
உயிர்தெழுகிறது
என்னுள் உரையும் ம் கானல் வரிகளும்
காதலின் கவிதைகளும்
உன்னுடனே உயிர்திருக்கிறேன்
மற்றவேளைகளில் மரத்துபோகிறேன்
கண்ணுக்குள் உன்னைதேடுகிறேன்
கனவிலேநான் வாழ்கிறேன்
விதையாய் நான் விருட்ச்சமாக நீ
பாதையாக நான் பயணமாக நீ
உயிராகநான் உடலாக நீ
கதையாக நான் காவியமாக்கினாய் நீ
உன் செல்ல சிணுங்களில் தொடங்குகிறது
ஊடலின் உருவாக்கம்
முடிகிறது கூடலின் குதூகலங்களில்
வழக்கம் போலவே காதலுடன்
No comments:
Post a Comment