Tuesday, 5 February 2013


வெற்றிடம் என்னை வேதனைப்படுத்துகிறது 
உன் பகிர்வுகளை பறைசாற்றுகிறது
கண்களை நனைய வைத்து 
காதலை நினைவுருத்துகிறது...

வாழ்வின் அர்த்தங்களை புரிதல்களுக்கு 
நடுவே இருத்திப்பார்க்கிறேன்.
அதன் ஒவ்வொரு பக்கத்திலும்
 நீயே வியாபித்து இருக்கிறாய் 
உன் இருத்தல்களில்தான் 
என் இதயம் இயங்குகிறது

இருளாகச் சூழும் உன் நினைவுகள் 
வெளிச்சபுள்ளிகாலாய் நீ வரும் கனவுகள் 
என் இதயத்தில் மென் அதிர்வுகள் 
அதனாலே கவிதைப் புனைவுகள்

 என் காதல் குதிரை கட்டவிழ்ந்து பறக்கின்றது
கண்முன்னே நீ காட்சியாய் வரும்போது 
எனது கட்டுக்களுக்குள்ளே நீ இருக்கும்போதே
என் கனவு களைகின்றது கண்ணீர் நிறைகின்றது

No comments:

Post a Comment