எனது கவிதைகள் .
தொலைதூர
இருண்ட பயணத்தில்
சில வெளிச்சபுள்ளிகள்
சிலருக்கு மின்மினியாய்
சிலருக்கு மின்னலாய்
சிலருக்கு மின்சாரமாய்
சிலருக்கு மட்டுமே
சம்சரமாய்........
காலதாமதமாக வந்த
பேருந்து ரசிக்க வைத்தது
முன்பே வந்திருந்த
முழுநிலவை .....
இல்லாதபோதும்
இருத்தலை உணர்த்தும் பொல்லாத
இல்லாள்
நீ
இமைக்கு நடுவே
நீ
இருந்தாலே
இனிமை
தொலைவில் இருந்தால்
உன்னிடம் விரைய வைக்கிறாய்
அருகில் இருந்தால் உன்னோடு
உறைய வைக்கிறாய்
எப்போதும் என்னை கரைய வைக்கிறாய்
வாழ்க்கை முழுதும்
உன்னுடன்
மறைய வைக்கிறாய் ......
நீ
எங்கோ இருந்தாய்
உன்னை தேடி
நான் வரவில்லை
வந்துதான் உணர்ந்தேன்
என்
உயிர் இருப்பதை ...
என்
எண்ணங்கள்
எங்கிருந்தாலும்
என் விரல்கள்
தேடுவது என்றும்
உன்
எண்(ணங்) களைதான் .....
பெரிய முள்ளாய்
உன்னை சுற்றி சுற்றி
வந்தேன்
காயபடுதினாய் என்னை
சின்ன முள்ளாய்......
ஒவ்வொரு நொடியும்
என்னுள் நகர்கிறாய்
வலம் (வரும்)
இடமாய் ......
பழகிய இடங்களை
பார்க்க நேர்ந்தது
காலம் கலைக்காத
உன் மூச்சு காற்று
மட்டும்
காத்திருந்தது
என் இதயம் புகும்
ஆவலோடு .....
உன் சிரிக்கும்
முகத்தினில்
இதழோரம்
லேசாக சுழியும்
அந்த சுழிவுக்கு
அர்த்தம் புரிந்தபோது
அதில் விழுந்தேன்
நிரந்தரமாகவே .......
கிழிந்த என்
இதயத்தை உற்றுப்பர்கிறேன்
உன் வார்த்தை நகங்களின்
ஒப்புதல் வாக்குமூலம் .......
பார்த்து வைத்திருந்த
அத்தனை ஒத்திகைகளும்
பயனற்றுப்போயின
பாவை நீ
வந்தவுடன் பழக்கமான
வார்த்தைகளும்
கைவிட்டு போயின
எப்படி சொல்வதென்று முகம்
வெளிர உதடு துடிக்க
என் உடல் மொழி
உணர்த்த முற்படும்போது
முதல் பிரசவ அவஸ்தை யாய்
இருந்தது
மண் பார்த்து மரம் பார்த்து
சுவர் பார்த்து செய்த
ஒத்திகை யாவும் உன் கண்
பார்த்தவுடன்
காணமல் போனதடி
கண்ணீர் மட்டுமே
மிட்சமடி .......
No comments:
Post a Comment