Saturday, 20 June 2015

வயலுகாஞ்சுகிடக்கு
வண்டிமாடுஎனக்கெதுக்கு
வைக்கோல் போரில்
வைக்கோலில்ல
வாங்கிபோடவசதியுமில்ல
புல்லறுத்துப்போடலாம்னா
புல்லிருந்தஎடமெல்லாம்
பிளாட்போட்டுக்கிடக்கு
புண்ணாக்குவாங்கி
வைக்கலாம்னா
நாட்டார்கடைமூடிகிடக்கு
கழனித்தண்ணிவைக்கலாம்னா
குக்கர்வந்து கெடுத்துப்புடுச்சு
அடகு வைக்கலாம்னா
வண்டிக்குதரமாட்டாங்களாம்
காரு பைக்குக்குத்தான்தருவாகளாம்
காத்துஒன்னுதான் 
சும்மாகிடைக்குது
அதையும் எப்போ 
விக்கபோறாய்ங்களோ
Like · Comment · 

No comments:

Post a Comment