Wednesday, 24 June 2015

தாத்தாவப்பாத்தேன்னு
அம்மாகிட்டசொல்லாதம்மா
அம்மாஒன்னத்திட்டும்
எங்களைப்பாத்தா
ஒங்க அம்மாக்குப்புடிக்கல
ஒங்களை நல்ல
பள்ளிக்கொடத்துல
சேத்துருக்காங்க அவங்க
எங்களைப்பார்த்தா
உங்கபள்ளிக்கொடத்துல
உள்ளவிடமாட்டாங்க
நீங்களாவது நல்லாஇருங்க
எங்கபுள்ளைங்கன்னு
சொன்னா கேவலமா
இருக்கும் அதுநாலதான்
எங்கவாசம்படாம
வளக்குறாங்க...
நல்லதுதான் நீங்களாவது
மத்தவங்கமாதிரி
கெளரவமா இருங்க
நாங்கதூரத்துலைருந்து
பாத்துசந்தோசப்படுறோம்......
Like · Comment ·   · 97274
மயன் வீட்டுக்குவந்தேன்
போன்கூடபோட்டு
சொன்னேன்
மருமகதான் எடுத்துச்சு
இன்னிக்கிகாலங்காத்தால
வந்துகாத்துக்கிடக்கேன்
சாயங்காலமாயிபோச்சு
இன்னங்காணாம்
நேத்துராத்திரி சாப்பிட்டது
காலயில ஒருகாப்பித்தண்ணி
குடிச்சது,,பசி வயத்த
பிசையுது..கண்னுமயங்குது
ஆனா இவகளக் காணோம்
நான்வரேன்னுசொன்னத
மறந்துட்டாங்களா இல்ல
அதுநாலதான் வராம
இருக்காங்களான்னு
தெரியல.கையிலும்
காசுஇல்ல....ஒன்னுமில்ல
என்னபன்றதுன்னும்
தெரியல.........
Like · Comment ·   · 42101
பஸ்டாண்டுலநா
வடைவிப்போம்
மகதான் கொண்டுபோய்
விக்கும்
என்னால நடக்கமுடியல
மாவாட்டி வடசுடுவேன்
அன்னாடம் வடசுட்டு
வித்துவர்ற காசுலதான்
வண்டிஓடுது
ஆனா மனசுக்குக்
கஸ்டமாஇருக்கு
அந்தபுள்ளபள்ளிகொடத்துக்கு
அனுப்பமுடியல
வடவிக்கவே நேரம்
சரியாப்போகுது
என்னபண்ணப்போகுது
எனக்கப்புறம் அந்த
பிள்ளன்னு நினைச்சா
அழுகையாவருது
Like · Comment ·   · 4510
கெடக்குது அதுனால
இந்தப்பக்கம்
நடவுநடக்குது
ஓருநாளைக்கிகூலி
200ரூவா குடுப்பாக
அதுல கங்காணிகமிசன்
போக 170ரூவாகெடைக்கும்
அதவச்சித்தான் கஞ்சி
குடிக்கனும் புள்ளகளை
படிக்கவைக்கனும்
வேலை இல்லாதநாளஓட்டனும்
அவருபோனப்பபுறம்
எல்லாமேஎன் தலையிலதான்
அதையேநினைச்சுஅழுதுட்டெ
இருந்தாஆரூஊத்துவா கஞ்சி.......
அந்த சாரு பார்சல
அப்புடியேபிரிக்காம
குடுக்கும்போதே நினைச்சேன்
இது பிரியாணியாத்தான்
இருக்கும் நு
பிரிச்சிப்பாத்தா
சிக்கன்பிரியாணிதான்
இதுமாதிரி பிரியாணிய
கடைலபாத்ததோடசரி
திண்ணதில்ல ஆனா
ஆசையாஇருக்கும்
ஆனா காசுக்கு எங்கபோறது
இப்புடியாராவது
குடுத்தான் உண்டு
நல்லாத்தானிருக்கு
ஆனாகொஞ்சம் பழசுபோல
எங்களுக்கு இதுவே அதிகம்
குப்பையிலபோடாம
கையிலகுடுத்தாரே
நல்லமனுசன்நல்லாருக்கனும்
இல்லன்னா குப்பத்தொட்டில
எதுமேலவுழுகுமோ
நாய்கிட்டசண்டபோட்டுல்ல
எடுத்தாரணும்.........

வீட்டுலைருக்குற
மொத்தபாத்திரத்தையும்
வயித்தையும்
கழுவிகவுத்தாச்சு
பானையிலதண்ணி
புடிச்சு வைச்சாச்சு
அம்மா அப்பா
வந்துதான் சமைக்கணும்
ரேசன்கடையில
அரிசிவாங்கப்போனாக
சும்மாகாசில்லாம
குடுக்குறாகலாமே
அதவாங்கிப்பாதிய
கடைலகுடுத்தா
பலசரக்குகுடுப்பாகலாம்
அதான் வாங்கபோயிருக்காக
அந்த அரிசி பாதிநாள்கூடவராது
அம்மாதான் வீடுகளுக்கு
வேலைக்கிப்போய்
ஏதாவதுகொண்டாரும்
அப்பாதொணைக்கிபோகும்
அப்பாவுக்குத்தான் 
வேலசெய்யமுடியாதே
உடம்புசரியில்லவேல
செஞ்ச எடத்துல ஆசிட்
பட்டு கண்ணுபோச்சே,,,,,,,,,
முகத்தில்மொய்க்கும்
ஈயை விரட்ட ஈன்றவளில்லை
அழாதேஎன்றுவிழிநீர்துடைக்க
அப்பாஇல்லை
பசிக்குதாஎன்றுகேட்டு
பசியாற்றப்பாட்டி இல்லை
ஆறுதல்சொல்ல
அக்கபக்கம் யாருமில்லை
கண்ண்டும் காணாமல்செல்பவர்
மனிதரில்லை
கண்ணைமுடியிரூக்கும்
கடவுளே நீயுமா இல்லை....

மருமக சமைக்குது
கூடமாட ஏதாவது
ஒத்தாசையாஇருந்தாத்தான்
நல்லது பாவம்
பச்சஒடம்பு..
இருடி நான் சமைக்கிறேன்னா
வேணாமத்த உங்களுக்கு
என்னாத்துக்கு சிரமம்
நானே சமைக்கிறேன்
நான் சமைச்சாத்தான்
புள்ளைகளுக்கு புடிக்கும்
நீ அதே புளிக்கொழம்புதான்
வைப்ப புள்ளக திங்காதுன்றா
என் மகனுக்கு என்சமயல்தான்
புடிக்கும்...உசுறு
ஆனா இவ விடமாட்டேன்றா...
சரி...என்னாத்தப்ண்ணுறது
கலிகாலத்துல......

நீயெல்லாம்
ஒருமனுசனாயா
புள்ளங்க வீட்டுலபசியில 
அழுதிட்டேதுடிச்சிட்டு
கிடக்குறது
ஒனக்குத்தெரியாதா
சம்பாதிக்கத்துப்பில்ல
ஏங்கிட்ட அரிசி
வாங்கியாறென்னு
காசவாங்கியாந்து
குடிச்சிப்புட்டு இப்புடி
தெருவில உளுந்து
கெடக்குறீயே
இதேபொழப்பா
வைச்சிருக்குற
உன்ன மிதிச்சே
கொன்னா என்ன
வெண்ணித்தண்ணியெ
வெளியே பானையில
காயவைச்சு
எண்ணைய பூண்டுமெளகு
போட்டு சூடாக்கி 
வெயிலுவரதுக்குமுன்னாடி
மனைப்பலகையில
ஒக்காரவைச்சி உச்சந்தலயில
எண்ணவைவச்சி
ஒவ்வொரு எலும்பா
புடிச்சிவிட்டு
அக்கக்காநீவிட்டு
வெக்கபப்படுறமாதிரி
டவுசர்கலட்டிவிட்டு
விடாமஎண்ணதேச்சி
கண்ணுலகூடஎண்ண
ஊத்தி கரைச்சிவைச்ச
சீக்காபோட்டுகதறக்கதற
தேய்ச்சுவிட்டுபக்குவமான
சூட்டில பாகமுழுசும் 
எண்ணபோக
தேச்சுகுளிப்பாட்டி
கடன்வாங்கி வைச்ச
கறிக்கொழம்பு ஊத்தி
தட்டுநிறயசோறுவைச்சு
சாப்புடுகண்ணு 
எலும்பும்தோலுமாஇருக்கனு
சொல்லும்போது
உன்னையும்மீறி
உன்கண்ணுகலங்குமே அம்மா
நீபோனப்புறம் 
எண்ணதேய்ச்சிகுளிக்கிறதே
இல்ல ஏன்னா உன் நினைவுவில்
வரும் கண்ணீரைக்
கட்டுப்படுத்தமுடியல
Like · Comment · 

Saturday, 20 June 2015

நாற்றை அள்ளி
தருகிறதே ஓர்
மனிதநாற்று.......
நாளைதினத்தை
விதைக்கும்கன்று
வேடிக்கைபார்க்கும்
மரங்களுக்கு
புரிந்தால் நன்று
வயித்துப்பசியாத்த
டீயாத்துறேன்
பலருக்குசாப்பாடேடீதான்
நான் உட்பட.....
Like · Comment · 
மனுசங்களே
உங்கஏமாத்துவேல
எனக்குத்தெரியாதா....
வயல்லரெண்டுபேரும்தான
ஒன்னாஒழைச்சோம்
நீ நெல்லஎடுத்துகிட்டு
எனக்கு வைக்கோலக்குடுதீங்க
திரும்ப நெல்ல அரைச்சி
அரிசியநீங்கஎடுத்துட்டு
உமியஎனக்குக்குடுத்துட்டீங்க
திரும்பசாதம் வடிச்சு 
சோத்தை நீங்கஎடுத்துகிட்டு
கஞ்சிய எனக்கு குடுத்தீங்க
ஆனா கடைசில
நீங்கதான் ஏமாந்தீங்க
உங்களுக்கு சுகரு பிரஸ்ஸரு
கிடச்சது பரிசா
எனக்கு அதுகிடைக்கல
ஆரோக்கியம் கிடைச்சது
அந்தபால்லயும் பங்குக்கு
வந்துட்டீங்க...
இந்தமுறைநான் ஏமாறல
கன்னுக்கு ஒதுக்கிட்டுதான்
ஒங்களுக்கே பால்குடுத்தேன்....
அதை உறிஞ்சவும் மிசின்
கொண்டுவந்துட்டீங்களே
நல்லவங்களே,,,,,,,,,,,,
Like · Comment · 
பாட்டிபிள்ளயாருக்கு
கொடவிக்கிறீயே
பத்துரூபாகொட5ரூவாக்கு
தறேன்றீயே அவருக்கு
கொடைவிக்கிறதுக்கு
நீ வெயில்லகெடக்குறீயே
அப்பட்டகேட்டு 10ரூவா
வாங்கித்தாறேன்
நீகுடவாங்கிபுடிசிட்டு
நிழல்ல உக்காருபாட்டி
எனக்கே வெயில் தாங்கல
உனக்கு ரொம்பவலிக்கும்.....
Like · Comment · 
இந்தவீட்டுலஎனக்கு
எடம்பத்தல
அதுனாலநான்
தனியாஒருவீடுகட்டுவேன்
அங்க என்செல்லபொம்மைக்கு
தனியாஒருஅறை
அதுக்குவிளயாட்டுபொம்மை
எல்லாமேஇருக்கும்
அங்கநாங்கவெளயாடுவோம்
எங்காம்மாவுக்கு
நல்லகட்டில் இருக்கும்
வெறுந்தரையில
படுக்கவேண்டியதில்ல
என்னவெளயாட்டுல
சேத்துக்காத அந்தசீனு
அந்தவீட்டுக்கு வரப்புடாது
சொல்லிபுட்டேன் ஆமா......
Like · Comment · 
அப்பா ஆசுபத்திரிக்கி
போயிருக்காரு
ஆளாஎன்னவைச்சிட்டு
அவருக்கு முடியல
ரொம்ப இருமுறாரு
யாவாரம் பாதிக்கப்படாதுல
அதான் ஒத்தாசையா
இருக்கக்கத்துகிறேன்
நான் கடயபெருசாக்கி
பெரியஓட்டலாக்கி
நிறயாசம்பாதிச்சு
அப்பாவை ஒக்காரவைச்சு
சாப்பாடுபோடுவேன்
நல்லதுணிமணிவாங்கிதருவேன்
அதுக்குத்தான் நான்
பள்ளிகொடம் போகல
போகவும்மாட்டேன்
அங்கஎல்லாரும் என்னய
டீகடைகாரன்மகன்
கிளாஸைகழுவுன்னுசொல்றாங்க......
Like · Comment · 
இன்னிக்கிபள்ளிக்கொடம்
லீவு விட்டுட்டாங்களாம்
யாரோ செத்துபோய்ட்டாங்களாம்
கொடியெல்லாம் எறக்கிருக்காங்க
எனக்கு இன்னிக்கி சாப்பாடுபோச்சு
சத்துண்வுதான் சாப்பாடே
எதுனாலயாவது பள்ளிக்கொடம்
லீவுவிட்டா என்வயறுதான்
காஞ்சுபோகுது
ஏற்கனவே ஞாயித்துக்கெழம
ஏன் வருதுன்னு இருக்கு
இப்புடி யாராவது திடீருண்ணு
மண்ண அள்ளி போட்டுடுறாங்க...
என் சாப்பட்டுல...........
Like · Comment · 
சாமி என்ன
எதுக்குஎன்னபடைச்ச
உனக்குப்பொழுதுபோகலயா
என்னப்பெத்தவங்களுக்கு
வேறவேலைஇல்லயா
கஸ்டப்படுறது தலைவிதின்னா
எனக்கு என்னகெதி
யாருக்கு என்ன
கெடுதல்செஞ்சேன்
எனக்குக்கெடுதல்
பண்ணவங்ககூட
நல்லாத்தானேஇருக்காங்க
என்னையமட்டும் ஏன்
இப்புடிவைச்ச..
தெருநாய்க்குக்கூட பாதுகாக்க
ஆளிருக்கு அரசாங்கம் இருக்கு
எனக்கு யாரிருக்கா
கஸ்டப்படுறவங்களுக்கு
நீ இருக்கன்னு சொல்றாங்களே
உண்மையில் இருக்கயா...........
Like · Comment · 
வெள்ளனாவே வேலையெல்லாம்
வெரசாவே முடிசிட்டு
நல்லதுணிமணியெல்லாம்
நாளைக்கா எடுத்துவச்சிட்டு
பாத்திரபண்டமெல்லாம்
கழுவி அடுக்கிட்டு
மருதாணிபுளிவைச்சி
அரச்சிட்டு எல்லாரும்
ராத்திரி படுக்கப்போறப்ப
அழகாகையில் வச்சி 
அசங்காமப்படுப்போம்
தூக்கத்துல அரிச்சி 
கலஞ்சிடாமை இருந்தா
காலயிலதீவாளிக்கு
புதுப்பாவாடைதாவணிபோட்டு
கையெல்லாம் செவந்து
கன்னமும் செவந்துகெடக்கும்
நல்லாசெவந்தாத்தேன்
நல்லபுருசன் கெடப்பானாம்
பாட்டி பக்குவமா சொல்லிச்சு
இப்போ கையப்பாத்தாலும்
கன்னம் செவக்குது.......
முருதாணிபோட்டவன்ன
இந்தபொண்ணுகதான்
என்ன அழகு 
வெகத்திலசிரிக்கிறப்ப
இப்போகூட சிலிர்க்குது
Like · Comment · 
அழுக்குதுணிதினமெடுத்து
ஆத்தோரம் வெள்ளாவிவைச்சு
அதிகாலயிலதொவச்சி
ஆத்துமணல்லகாயப்போட்டு
அழகாதெய்ச்சுஅடுக்கி
அவங்கவுங்கவீட்டுலகுடுப்போம்
அஞ்சோபத்தோதினம்
ஆகாரத்தோட கிடைக்கும்
ஆத்துமணலும் கொள்ளைபோச்சு
ஆத்துதண்ணியும்சாக்கடையாச்சு
அத்தனபேர்பொழப்பும் நாறிப்போச்சு
வீடுவீடுக்குவாசிங்மிசின் வந்துடுச்சு
வாசிங்பவுடர்கம்பெனிவளர்ந்துபோச்சு
துவைக்கிறபொழப்புதெய்ஞ்சுபோச்சு
நாள்பூராம்தேய்க்கிறேன்ரோடோரத்தில
தேய்ச்சே தேஞ்சுபோறம் நாட்டோரத்தில
(நிழற்படம்உதவிஃப்ராளீன்மதுரை)
Like · Comment · 
அம்மாவும் அப்பாவும்
வேலைக்குபோயிருக்காங்க
பனியன் கம்பெனிக்கு
அவங்கவர10மணியாகிடும்
நான் அதுக்குள்ளபடிச்சிட்டு
வீட்டுப்பாடம் எழுதிட்டு
இருக்குறத சாப்புட்டு
தூங்கிடுவேன் அம்மா
வந்து ஏதாவது சமைச்சிட்டு
என்னயசாப்புடஎழுப்பும்
ஆனாஎனக்குத்தெரியாது
நிதானமிருக்காது
காலையிலஎழுந்துபாத்தா
அப்பாவேலைக்குபோயிருப்பாரு
அப்பா என்கூட
பேசமுடியலன்னு
வருத்தபட்டாருன்னு
அம்மா அழும் அப்புறம்
வேலைக்கிபோய்டும்
நான் படிச்சிவேலக்கிபோய்
ரெண்டுபேரையும் உக்காரவைச்சி
சாப்பாடுபோடுவேன் அதுக்கு
நல்லாப்படிப்பேன்...........
Like · Comment · 
ஆழமாகத்தோண்டிக்
கொண்டிருக்கிறோம்
நாள்முழுதும்..எங்கள்
வயிற்றைநிரப்ப..
Like · Comment ·