Tuesday, 28 July 2015


என்விழிவழியாக 
விதைத்துவிட்டாய் 
இதயத்தில் 
முளைக்கும் வண்ணம் 
இதயத்தில் முளைத்து 
என்னுயிரை 
வளைத்துவிட்டாய் 
உதிரத்துளிகளில் 
உன் உயிர்கலந்து 
உதிரத்தின் நிறத்தை
மாற்றிவிட்டாய் 
எனது சிந்தனையில் 
உன்நினைவை வைத்து 
சிறையெடுத்துவிட்டாய்
எனது கவிதை வரிகளில் 
எழுத்துக்களைத்திருடிவிட்டு
உன்முகங்களைப்
பதிவுசெய்தாய்..
என்கனவெல்லாம்
ஆக்கிரமித்தாய் 
விழிகளைத்திறக்காமல்
கனவிலே அழுத்திவைத்தாய் 
இன்னும் என்னை
என்ன செய்யப்போகிறாய் .......

எனது சிறகுகளின்
பலவீனத்தை எப்படி
உணர்ந்தாய்
என்விழிகளின்
தனிமை க்கதறலை
எப்படிநாடிபிடித்தாய்
சிறகுகள் பிய்ந்து
பறக்கவியலாது
பதறும் என் சோகத்தை
எப்படிஉன் வரிகளில்
பூக்களாக்கி 
மாலைதொடுத்தாய்
எனதுவிழிதுடைக்கும்
விரல்களை 
இத்தனைநாளாய்
எங்குவைத்திருந்தாய்
எனது மனபாரங்களை
இறக்கிவைக்கும்
மேகமாக எப்படி
எனக்குத்தெரியாமல் 
மாறினாய் 
என் கதறலுக்கு
கண்ணீர்சிந்தும்
மழைமேகமாக எப்படி 
உருவெடுத்தாய்....
அழவைக்காதேடா......

உன் தோளைச்சற்றுகொடு
நான்சாய்ந்து கொள்ள 
ஆறுதலாக 
என்னைத்தட்டிக்கொடு 
மனம் விட்டு அழுதுகூட 
ரொம்பநாளாகிவிட்டது
சற்று அழுதுதீர்க்கிறேன் 
என் சோகங்களைச்சொல்லி
என் விழிநீர்துடைத்து 
ஆறுதலாக 
என் விழிகளில் முத்தமிடு
தோள்தொட்டு மனபாரம்நீக்கு 
இதற்குத்தான் காத்திருந்தேன் 
யுகம் யுகமாய் 
இருண்டுகிடக்கும் 
என் வாழ்க்கைக்கு 
உன் ஒளிக்கதிர்களைப்பாய்ச்சு 
ஓடி ஒளியட்ட்டும் 
அந்த அடர் இருள்......
எங்கிருந்தாய் இத்தனைநாளாய் 
என்னை இன்று ஆட்கொள்ள
என் தவம் ஈடேற,,,,,
தேடுதல்களில் தொலைகிறது
வாழ்க்கைஎனும்பயணம் 
தொலைத்தவையெல்லாம் 
தொலைத்தவையாகவே 
திரும்பக்கிடைக்காத 
சாபங்களுடன் 
ஏமாற்றங்களே வாழ்க்கையாகி
எதிலும் பற்றற்று 
விதி முடிதலை
விரைவில் தேடும் 
விளிம்பில் தொங்கும்
இறுதிக்கட்டத்தில் 
பற்றி மேலேஇழுக்கும் கரங்கள் 
பற்றினை பற்றவைக்கின்றன
விதியைப்பற்றிய 
மறுபரிசீலனைகள்தேடுதலில் 
பிழைத்துக்கொள்
என்று உன்னிடம் 
சொல்லத்தான் அனுப்பினான் 
உன்னைப்படைத்தவன் 
என்று செய்திசொல்லி மறைகிறது ..
இப்போது வாழ்ந்தே ஆவதற்கான 
சாத்தியக்க்கூறுகள் 
கிழக்கில் 
வெளுக்கத்தொடங்குகின்றன
அப்போது அம்மா என்றழைத்து 
வந்து கட்டிகொள்கிரது 
என் வாழ்வின் அர்த்தம்.......

அழகாய் பசுமையாய்
பச்சைக்குழந்தையாய்
பார்க்கும் பார்வையாய்
பரந்தவெளியாய்
விரிந்துகிடக்கும் அண்டமாய்
விழுந்துகொண்டிருக்கும் அருவியாய்
விழிகளாய்
விண்ணில் மேகமாய்
விரைந்து நீர்கேட்க்கும் தாகமாய்
வெளிச்சமாய்...வெளிச்சம் 
விரட்டிய இருளாய்
அனைத்தூயிர்களின் மேலும்
அருளாய் வாழ்வின் பொருளாய்
ஆதார இயக்கமாய் இருக்கும்
அமைதிதான் கடவுளின் வடிவம்


என் இதய அறைகளின்
இருண்டபக்கங்களுக்கு
உன் வெளிச்சப்
பார்வைகள்தான்
விளக்கம்கொடுத்து 
மகிழ்ச்சி
வெள்ளை அடித்தது
உன் உருவமே அதில்
ஓவியமாகஉருவானது
எந்தபக்கத்தை புரட்டினாலும்
உன் முகமே 
முறுவளிக்கிறது
வேறு எதையும் காண
இயலவில்லை.
என்பார்வைக்கோளாறா
இல்லை உண்மையே
அதுதானா புரியாமல்
தவிக்கிறேன் தூக்கம்
தொலைக்கிறேன்
தலையணை நனைக்கிறேன்......
விழிகளைதுடைக்ககூட
மனமில்லாமல்.........ஆசையாஇருக்கு
அங்கேபோக
அக்கம்பக்கம் இருக்குற
பிள்ளைங்கள்ளாம்
சந்தோசமாகபோறாங்க
அப்பாஅம்மாகூட
புத்தகப்பையத்தூக்கிகிட்டு
ஆனா அம்மாவேலைக்கு
போறதால தங்கச்சிய
பாத்துக்க ஆளுவேணும்னு
வீட்டுலயே இருக்க
சொல்லிட்டாங்க
அந்தபிள்ளைங்களப்
பாக்கும்போது
ஒரே அழுகையா வரது.......
சின்னசின்னப்பூக்களாக
சிரிப்பை பூக்கவைத்தாய் உன்
கொழுந்து இலைகளின் நடுவே
வெள்ளைமுத்துகளால்
கன்னத்திலே குழிவைத்து
எனக்கு குழிபறித்தாய்
நான் காதலுடன் அதில்விழ
விழிகளில் வலைவிரித்தாய்
இந்தப்பறவை பூப்பறிக்க
வரும்வேலையில் 
நன்றாக சிக்கும்படி
இவ்வளவுதேவையில்லை
என்னைபிடிக்க 
உன் அழகுக்கவிதை
ஒன்றுபோதும்உடனே
என்னை பிடிக்க.........

அம்பதுபைசாவஎடுத்துகிட்டு
அலைஞ்சுஅந்தஆளைக்கண்டு
பிடிச்சு வாங்கிகொடுத்த
கடிகாரம்ஆசை ஆசையா நீ
அதுல மோதிரம்
கழுத்துசெயிணுஇப்புடி
என்னவேணுமானாலும்
செஞ்சுதருவாரு
அந்த ஜவ்வுமிட்டாய்காரரு
எனக்கு என்னவேணுமானாலும்
வாங்கிக்கசொன்ன பையில
இருந்த ஒரு ரூவா தெம்புல
இதெல்லாம்போடு
கூடவே கழுத்துல நகைபோடுன்னு
நான் கேட்டேன் 
நீ ஜவ்வுமுட்டாயில
தாலிசெஞ்சுபோட்ட
எனக்கு ஒருமாதிரி சந்தோசம்
நீதாண்டி எனக்கு பொண்டாட்டினு
கையில் அடிச்சுசொல்லி
என்னசிரிக்கவைச்ச.....
ஆனா இப்போ வசதி வந்தவுடன்
என்னப்புடிக்கலன்னு
சொல்லிட்டயே 
ஜவ்வுமுட்டாய் மாதிரியே
சீக்கிரம் பிசுபிசுத்துபோச்சே
நம்ம அன்பு எங்கபோயழுவேன்........மெல்லிய நிலவொளி
இளம்தென்றல்காற்று
தோட்டத்தில் மலர்ந்திருக்கும்
கொடிமல்லியின் வாசம்
எங்கிருந்தோவரும்
ஓர் அம்மாவின் தாலாட்டு
உன் தோளில் சாய்ந்தபடி
உன் அரவணைப்பில்
என்மனமிகுந்தமகிழ்வுடன்,,,,,
வாய் மெளனமாய் 
இதயங்கள் மட்டும்
இனிமையாகபேசிக்கொண்டு
என் கூந்தல்கோதியபடி
உன் கைகள்
உன் கைகோர்த்து மார்பில்
சாய்ந்தபடி நான்
இதைத்ததான் வேண்டுகிறேன்
இதுபோதும் என் பிறப்பின்
பயன் அடைய வேறொன்றும்
வேண்டேன்பராபரமே.......


உனது சின்னசிரிப்பு கூட 
எனது மனஅமைதிக்குளத்தில் 
கல்லெறிகின்றது
நினைவு அலைகளை 
வரிசையாக 
உருவாக்கிக்கொண்டு
அத்தனை அலைகளிலும்
ஆடிகொண்டிருக்கின்றது
உன் அழகு முகத்தாமரை......
குளிந்த பிரபஞ்சத்தின்
எங்கோ இருக்கும்
வெப்பதுளியான உன்னை
எனது ஆன்மா
தேடி அலைகிறது
யுகங்களைத்தாண்டி
காலபெருவெள்ளத்தில்
நீந்திகொண்டு
உனது ஒவ்வொரு நினைவும்
கவிதை விதையாகும்அதில்
மறதி மண்ணைக்
கிழித்துகொண்டு
வெடித்து முளைக்கின்றன
கவிதை விருட்சங்கள்
எனது வாழ்க்கைநீரை 
உறிஞ்சிக்கொண்டு
வேர்விட்டு வளர்ந்தபடி
ஒவ்வொரு
நினைவு விதைகளில்
இருந்தும் முளைக்கின்றன
உன்னுடனான பகிர்தல்கள்
நினைவுச்சுழியில்
நீர்குமிழ்களாக
பொங்கிவருகின்றன 
பொன் பொழுதுகள்
யுகங்கள்தாண்டியும்

கவலைகளற்று 
காத்துகிடக்கின்றது காற்று
கைகள்பட்டு 
வேர்த்துக்கிடக்கின்றது மண்
விழிகளில்பட்டு 
பூத்துகிடக்கின்றது நீர்
வேண்டுதலின்றி 
வெக்கையடிக்கிறது தேகம்
சலனமின்றி 
சயனித்திருக்கின்றது வானம் 
அனைத்துமறிந்த்தும் 
ஆறுதல்சொல்லாத நீ


ஓவியம் 
வரைந்து வைத்தேன்
கவிதைவரிகளால்
இதயம் ஒன்றைப்
பொருத்தி அதில்
ரசனைவிதை 
தூவிவைத்தேன
பாதம்முதல்
தலைவரை பார்த்து
பார்த்து வரைந்தேன்
கவிதையாய்,,,,,
முகம் மட்டும்
முடிக்காது வைத்திருந்தேன்
சரியான முகம்மட்டும்
கிட்டாமல் 
பலமுகங்கள்
வந்துபோயின 
எந்தமுகம் பொருந்தும்
முகமென காத்திருந்தபோது
வந்தமுகம்தான்
வசந்தம்தரும் 
உந்தன் முகம்...
அத்தனைகவிதை
வரிகளும் பொருந்தும்
அழகு முகம்..........இதயமெங்கும் 
விதைக்கிறாய்
இனிமைவிதைகளை
துயரக்களைகளைபிடுங்கி
தூரமாக எறிந்து விட்டு
அன்புநீர்பாச்சுகிறாய்
ஆழமாக உழுது 
கவிதைநாற்றுக்களை
நட்டுவிட்டு
தினமும் வளக்கிறாய்
தொடர்புவாய்க்காலில்
தகவல் தண்ணீர்விட்டு
முத்த உரங்கள் 
முறையாகபோட்டு
மொத்தவிளைச்சலாக
கதிர்விட்டகனத்தால்
தலைகுனிந்து
சிரிக்கும் அழகுகாண.......


கொட்டிதீர்த்துவிட்டென் 
என்மன்க் குமுறல்களை
எல்லாம் 
கொட்டும் மழையாக 
கட்டவிழ்ந்து 
சொல்லிவிட்டேன்என் 
கனவுகளையெல்லாம் 
கண்ணீர்மல்க மனசுபாரம்
குறைந்து மனநிறைவை
இடம்பெயற்கிராய் 
என் இதயத்தின் 
மூலைமுடுக்கெல்லாம்
சந்தோசங்களை 
நிறப்புகிறாய்
உயிர் வாயுவாக 
என் இதய 
அறைகளிலெல்லாம்
ஆட்சிசெய்கிறாய் 
என்னை இப்படி ஆக்கிவிட்டு 
எதுவும் அறியாமல்
இருக்கிறாய்
உயிர்கொடுத்து 
உயிரெடுக்கும் 
உன்னதங்கள் 
அறிந்துவைத்திருக்கிறாய் 
உன் குழல் இசையால்
அத்தனையும்
செய்கிறாய்
மாயக்கள்வனே

மனம்கிடந்து தவிக்கிறது
மாயக்கண்ணாஉன்
மாயக்குழல்
இசைகேட்காமல்
செவிகள் இரண்டும்
கூர்தீட்டிக்கிடக்கின்றன
உன்குழல் இசை
கேட்கும் ஆசையில்
கேட்காமல் சோர்ந்து
தவித்து கொல்லும்
கோபமுற்று
கண்ணீர்மல்கி
எதிர்பார்த்து
ஏங்கி ஏசிபின்
தன்னைத்தானே 
கடிந்துகொண்டு
கழிவிரக்கம்
தன்மீதேகொண்டு
படும் அவஸ்த்தை
காணச்சகிக்கவில்லை
எங்கிருந்தாலும் 
அனுப்பிவிடு கண்ணா
உன் குழலிசையை
என் உயிர்காக்க..
மன்றாடுகிறேன்.....உன்னிடம்

மனசுக்குள்ள உக்காந்து
மாயம் பண்ணாதடா 
ராத்திரிலவந்து 
தூக்கம் கெடுக்காதடா 
கனவுலவந்து 
கள்ளத்தனம்
ஏதும்பண்ணாதடா 
கண்ணமூடினவுடனஇதயக்
கதவ தட்டாதடா 
மூச்சுவாங்கவைக்காதடா
முகத்தைக்காட்டி மயக்காதடா 
பேச்சில என்ன
கிரங்கவைக்காதடா 
கனவுல என்ன 
எறங்கவைக்காதடா என்
கஸ்டத்தஎல்லாம் 
வெரட்டிப்புட்ட 
காலமெல்லாம் 
என்னதொரத்திபுட்ட
இஸ்டத்துல 
என்ன கேட்டுபுட்ட 
கன்னமெல்லாம் 
செவக்கவைச்சுபுட்ட
கேட்டதெல்லாம் 
நாந்தாரேன் 
கேக்காததையும்
நான் தாரேன்
பாக்கமபோயிடாதே
ஏக்கத்துல என்ன விட்டுறாத
உன்னநினச்சித்தான்
பாத்துருக்கேன் 
உசிரைபுடிச்சுகிட்டு 
காத்துருக்கேன் 
வந்துபோனா நான் 
வாழ்ந்திருப்பேன் 
வராமல் போனா நான் 
செத்துடுவேன்,,,,,,,,,,

விடியும்பொழுது
எதிர்பார்த்து 
விழிகள் 
விழித்திருப்பது
விடாமல் 
உன்னைகாணத்தான்
விடிந்தபின்னும் 
விழித்திரைகளில்
உன் முகம் காணாது
போனதேனடா 
காத்திருத்தல் 
சுகம்தான் 
ஆனால் அதற்கு
காலஎல்லையுண்டு 
கண்ணீர்தான்
அந்த எல்லை 
அது விழிகளில் 
துளிர்ப்பதற்குள்
துளிர்த்து விடு 
மொட்டாகவாவது 
மலருவரைக்காத்திருக்க 
மனசு தயார்தான்......அ.ருகில் வந்துநின்று
ஆ.றுதலாகக்கைபிடித்து
இ.னிமை முத்தம் தருகிறாய்
ஈ.ரமான விழிகளைத்துடைத்து
உ.யிரைஉள்பதித்து
ஊ.க்கம்கொடுக்கும்வார்த்தைகளால்
எ.ன்னை ஆட்கொண்டு
ஏ.ழிசைமீட்டுகிறாய்
ஒ.வ்வொருவார்த்தையும்
ஓ.ங்காரமாக ஒலிக்கும் வண்ணம்
உயிரெழுத்தாக்கி
என்மெய்தீண்டி
தடுப்பு ஆயுதங்களை
செயலிழக்கச்செய்து
என்னை ஆட்கொள்ளுகிறாய்
கண்ணா என்னில்
நிறைந்துவழிகிறாய்......

நீ
இறுக அணைக்கும் வேளைகளில்
நொறுங்கிப்போகின்றன 
என் துயரங்கள் 
விழிகளைத்துடைக்கும்போது 
வழிந்துவிடுகின்றன 
என் துயரக்குளங்கள் 
உன்வார்த்தைகள் 
ஒவ்வொன்றும் 
என் துயரங்களை
தோண்டிஎடுத்து வெளியே 
எரிக்கின்றன 
உன் அருகாமையெ
எனக்கு ஆறுதலாக 
அதுவே நீ 
இல்லாதபொழுதுதுகளில் 
சுடும் சோதனைகளாக
புடவையின் தலைப்புபோல்
எப்போதும் 
எல்லையில் நிற்கும்
அன்புத்தொல்லையாக
இன்ப அவஸ்த்தையாக
மனதை இறுக்கும் 
உள்ளாடை முடிச்சாக 
ஆறுதல் தரும் 
அதில் படிந்தைஈரமாக
எப்போதும் என்னுடனே நீ.
என் உயிராகாவே........தனிமை கொல்லும் நேரம்
உன் நினைவு 
வந்துசொல்லும்நேரம்
உறங்கா விழிகள் ரெண்டும் 
உன்னையே நினைத்து இருக்கும் 
மனதில் ஏதோ பாரம் 
உன் காதல் செய்த பாவம்
கடலாய் வந்த கனவெல்லாம் 
காற்றே உன் காதில் சொல்லும் 
வருகை நினைத்து 
காத்திருக்கிறேன் 
தனிமையில்
உன்னை நேசிக்க 
ஆரம்பித்தநிமிடம் 
எனக்கு தெரியாது...!!
ஆனால் இனிமேல் 
வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்...
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்
உன்னோடு இருக்கும் 
பொன்னான நிமிடங்கள்
என்னாளும் தொடர்ந்திட 
ஏங்குது நெஞ்சம்
என் இதயத்தை 
திருடிய உன் காதலால் 
இரவில் கூட என் இமைகள் 
இயங்கிக் கொண்டிருக்கிறது 
உறங்க முடியாமல்....
ஏன் இப்படி கொல்லுகிறாய் 
என்மனதை


உன் தோளைச்சற்று
கடன் கொடு
சற்று நான் சாய்ந்து
இளைப்பாறுகிறேன்
வாழ்க்கையின் சுமைகளோடு
ஓடிக்களைத்திருக்கிறேன்
கொஞ்சம்
இறக்கிவைக்கிறேன்
உன் தோள்களிலில்
பின் மீண்டுதொடர்கிறேன்
என் புதுபித்தசுமைகளோடு
உன் தோள்கள்தான் எனக்கு
ஆறுதலையும் 
தெம்பும் தருகின்றன
சற்றே இளைப்பாரக்
கடன் தருவாயா
கண்களில் நீரை சற்று
துடைப்பாயா........

மெல்ல அருகிலவந்து 
மென்மையாக 
தோள்கள்பற்றி
விழிகளை 
முடச்செய்கிறாய்
விரல்களால் 
கூந்தல் கோதுகிறாய்
மடிதனில் என்னைசாய்த்து
மயக்கும் கதைசொல்லுகிறாய்
என்மனதை அள்ளுகிறாய்
கன்னத்தில் முத்தமிட்டு
காதைக்கடிக்கிறாய் பின்
கள்ளத்தனமாய் சிரிக்கிறாய்
கனவிலெசொன்னதெல்லாம் 
காட்சிபடுத்துகிறாய்
என்னை கலங்கவைக்கிறாய்
காதலின் 
எல்லைகளைத்தாண்டி
காதல்செய்கிறாய்
என்னை கண்கள் 
மூடவைக்கிறாய்
ஒவ்வொரு செல்லிலும்
உன் உருவம் பதிக்கிறாய்
என் உதிரத்துடன்
ஒன்றாய்கலக்கிறாய்
என்னோடு உயிராய் உயிராய்
இணைத்துவிடுகிறாய்
என்னைக்கொன்று
மறுபிறவிதருகிறாய்
நான் வேறாகமாறிவிடுகிறேன்
உன்னுள் ஒன்றாகிவிடுகிறேன்...
என்னமாயம் இது....கண்ணா....
நிறமிழந்தாலும்
உன்நினைவிழக்காமல்
நீயும் நானும்நாம் 
வாழ்ந்த 
இல்லமும்வாழ்க்கையும்
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய் 
என்னுடன் நினைவுகளாக
நீவாங்கிக்கொடுத்த புடவை
முதல் உன்னைப்
பார்த்துசிரித்தபுன்னகை வரை 
என்னிடம் நீயாக
தள்ளாதவயதானாலும் 
தள்ளமுடியுமா என்னுயிரே 
உன்நினைவையும் 
உன்னுடனவாழ்ந்த 
அப்பெருவாழ்வையும் 
அதன் பரிசான பிள்ளைகளையும்,,,
தேகம் சுருங்கினாலும் 
நினைவுகள் விரிந்து பரந்து 
நெஞ்சில்கிடக்கின்றன 
என்னுள் நீயாக,,,,,,


முன்னம் சிலபொழுதுகளில்
சின்னஞ்சிறியேன் நான்
கண்ணன் உன் திருநாமம்
செவியுறும்பேறுபெற்றேன்
இன்னும் சிலகாலம்
இசையாக உன் நாதம்
எந்தன் செவிவழி
இதயம் நிரப்பும் 
இன்பமுணர்ந்தேன்
பின்னம்நான் காற்றின்
திசையெல்லாம்
கண்ணன் உன்னை
காணுறக் காதலுற்றேன்
காணாமல் விழித்ததால்
கண்கள் வழிய 
காத்திருக்கலானேன்.....
கண்ணுற்றேன் உன்னை
கார்மேகமாய்
கசிந்துருகினேன் காதலால்
மழையாய் பொழிகிறது 
என்கண்களில் 
உன்னைக்கண்ணுற்ற 
பேரானந்ததில்..........