Monday, 16 February 2015

ஆறாத ரணங்களாகத்
தொடர்கிறது உன்
நினைவுகள்
ஆங்காங்கே கை 
அசைக்கிறது
உன்
விரல்கூர் நகங்களின்
கீறல்கள்
குருதிகாய்ந்து
மரணபுள்ளியை
நோக்கி மெல்ல
நகர்கிறது
நிழல் யுத்தம்...
ஆழிப்பேரலையாய்
அழுத்துகிறது
உன் ஒவ்வொரு
தவிர்த்தலும்
இருந்தும்
உன்னைதேடும்
என் நினைவை
கொன்றுபுதைக்க
விழைகிறேன்யணித்தபடி.

.........

.

வண்ணங்களைத்தொலைத்த


வாழ்வின் இருள் பக்கங்களில்


வாஞ்சை வண்ணம் 

பூசி உறைந்திருக்கின்றாய்


ஒளிபூசிய ஓவியமாய்

உள்ளத்தில் உறைந்திருந்த

சோகங்களை உருக்கிஎடுத்தாய்

உன் உஸ்ணப்பெருமூச்சால்

உன்னுடன் உறைந்த

உன்னததருணங்களை

ஓவியமாக்கியிருக்கிறேன்

வாழ்வின் பக்கங்களெங்கும்

இருண்டபக்கங்களின்

ஒளிப்பிரவாகமாக நீ
.
விழிகளின் உள்ளே

விதைத்துக்கிடக்கிறது

நீ விதைத்த

காதல் மலர்கள்

அவ்வப்போது 

மிகும் பனிநீர்த்துளி
துளிர்க்கும் விழிஓரம்
உன் நினைவு
ஊறும் வேளைகளில்
ஒற்றைதுளிபோதும்
உன் நினைவைச்
சொல்லிட.......

என்ன செய்ய உத்தேசம் ???
-------------------------------------------------------------------------
என்ன செய்ய உத்தேசம் ???
விரல்களை வருடுவாய
விழிகளில் கதை சொல்வாயா 
முத்தங்களால் ஒவியம்வரைவாயா
முழுவதுமாய் மூழ்கிவிடுவாயா
சத்தமில்லாதமுத்தங்கள்
தருவாயா
சங்கீதமாய் முனகளிடுவாயா
மொத்தமாக மலர்ந்து விடுவாயா
மொட்டவிழ்ந்து சிரித்திடுவாயா
கட்டவிழ்ந்து அணைத்திடுவாயா
காதோரம் கடித்துவிடுவாயா
கூந்தலால் திரையிடுவாயா
குளிரும் படி அணைத்திடுவாயா
நாணத்தில் நெழிந்திடுவாயா
நமக்குள்ளே இடைவெளிதுறப்பாயா.....
கண்ணெதிரே தோன்றிடுவாயா
இல்லை
கனவிலே கரைந்திடுவாயா...................
என்ன செய்ய உத்தேசம் ???
Unlike ·  · 
சாலையிலிருந்த
சரலைகற்களே
என்னை கவனமாக
நடக்கக்கற்பித்தன
ரோஜாவிலிருந்த முட்களே
என்னை கவனமாக
பறிக்கக்கற்றுக்கொடுத்தன
சங்கடங்களே என்னை
சவாலுக்குத்தயார்செய்தன
என்னைவென்றவர்களே
எனது வளர்ச்சிக்கு
நீரூற்றினர்
என்னைத்தோல்விக்குத்
தள்ளியவர்களே
அவர்களையறியாமல்
முன்னேற்றத்திற்கு
முன் தேதியிட்டனர்
என்னை
அவமானப்படுத்தியவர்களே
அவர்களே அவர்களைஅறியாமல்
அரியணையை தயார்செய்தனர்
என்மேல் கல்லெறிந்தவர்கள்தான்
என் கோட்டைக்கு
ஜல்லிகற்கள்
வழங்கினார்கள்.....
அவர்களுக்குத்தான்
நன்றிகளை கல்வெட்டில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கவிதையாக......என்
கதையை.......


உறக்கத்தை விரட்டும்

உன் நினைவுகள்

உறங்கியவுடன்

உன் கனவுகள்

விழித்திருக்கிறது
உன்கனவுகள்
விழிதிறந்தபின்னும்.........
துருப்பிடித்து

வீணாகபோவதை விட 

தேய்ந்து 

பயன்படுதல் நன்று......

யோசித்தே

 வீணாவதைவிட

உருப்படியாக

 செய்தலே நன்று

யாசித்துப்

பெறுவதைவிட
ஆசையை 

ஒழித்தலே நன்று
கால்கைபிடித்து

வளமாகவாழ்வதைவிட
கெளரவமாக

 நலமாகவாழ்வதே நன்று

விதையாகிபோனாய்
நீ


காதல்


விழிநீரூற்றி


காக்கிறேன்

என்மூச்சுக்காற்றை

அர்பணித்து

மெல்லிய

பசும்இலைதுளிர்த்து

வலைந்து நெளிந்து

என்மீது

பற்றும் கொடியாக


நீஉயிர்த்துஇருப்பாய்

என்றபேராசையுடன்....

களவாடிச்செல்கிறாய்


நித்தம் 


விழிகள் முடி


நித்திரைஎனை


அணைக்கும்முன்பே

இரவுகவிழும்

வேளைகளில்

தப்பிச்செல்கிறாய்

ஒளிதிரும்பும்முன்பே

தடயங்களை

மற்றவர்க்கு

தெரியாமல்

மறைத்துவிட்டு

காத்திருக்கின்றேன்

தினமும்

உன்களவாடுதலை

ஆவலுடன்

எதிர்நோக்கி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

.
அப்புறம் 

என்ற


ஒரு வார்த்தைக்கு

பின் 

வெளிவராமல்
வரிசைகட்டி
நிற்கின்றன
ஓராயிரம் ஆசைகள்.......
Like ·  · 
சின்னஞ்சிறிய

ஊற்றாகத்தான்

தொடங்குகிறது

பொங்கிபிரவாகமெடுத்து

கரைபுரண்டுஓடும்
பெரிய ஆறுகள்.....
பிரச்சனைகளைப்போல்....
.
உக்கும்


என்ற ஒற்றை


பழிப்பு


புரட்டிப்போட்டு


விடுகிறது

அத்தனை

பெருமைகளையும்ஓ என்ற


ஒற்றைச்


சொல்


அத்துனை


சுவாரஸ்யத்தையும்

விழுங்கிஏப்பம் விடுகிறது

உன்கண்ணில்


வழியும்


ஒற்றை


நீர்துளி


எனது

அத்துனை

ஆயுதங்களையும்

வென்று

என்னை

நிராயுதபாணியாக்கிவிடுகிறது

உனக்குப்பிடித்த

பாடல் 

எனக்கு பிடித்ததாக

இருந்தது

உனக்குப்பிடித்த
கவிதை
எனக்கு பிடித்ததாக
இருந்தது
உனக்குப்பிடித்த
இசை என்னை
உருக்கியது
உனக்குப்பிடித்த
பிரிவு மட்டும்

என்னமட்டுமே

பதம் பார்த்தது,,,,,,