Saturday 27 September 2014


மீண்டும் ஒருஇரயில் பயணம்
---------------------------------------------------------
மீண்டும் ஒருஇரயில் பயணம்
இந்த முறை என்ன கிடைக்குமோ...??
ஓடும்மரங்கள்
டாடாகாட்டும் குழந்தைகள்
துள்ளிஓடும்ஆட்டுகுட்டிகள்
தொங்கிகொண்டிருக்கும் குரங்குகள்
.அதிர்ந்துபறக்கும் மயில்கள்...
காத்துநிற்கும்மனிதற்கூட்டம்...
அறிமுகமாகும் ரயில்ஸ்னேகம்
அறிமுகமில்லாகுழந்தையின்முத்தம்
பயணத்தில்மட்டும் ருசிக்கும்
ஜ்ங்சன்கடைகாலைநேரக்காபி
சில்லென்றுமுகத்தில்
அடிக்கும்காற்று
சிலநேரம் இஞ்சின்புகை
தூக்கம்கலைக்கும்
தொந்திமாமாவின்குறட்டை
எந்தபிளாட்பாரத்தில்விடுவானோ
எனகாரணமில்லாமலே
புலம்பும்குரல்கள்
நீரழிவுக்காகலோயர்பெர்த்வேண்டும்
வயசாளிகள்
குடும்பத்துடனிருப்பதற்காக
தனியாகவருபரை இருக்கைமாற்றிவிடுபவர்கள்
அதிகாலையில் இறங்க இரவுமுழுவதும்
தூக்கம்தொலைப்பவர்கள்
சில்நேரவாயுதொந்தரவுகள்........இப்படி
எத்தனையோ
ஆனாலும் இரயில்பயணம்தரும்
ஆனந்தத்தை வேறுஎந்தபயணமும்
தருவதில்லை...விமானப்பயணம்கூட...........

அக்கினிஅரக்கனாய்
ஆகுதிசெய்கிறாய்
உன் வன்மங்களை
ஆயுதமாய் பிரயோகிக்கிறாய்
காற்றின்வடிவாய்
கலைத்து உட்புகுகிறாய்...
கால்முதல் தலைவரை
அத்தனைஅமுதமும்
அதிர அதிர புகட்டுகிறாய்
இதழ்கள் நோக
நீவாசித்த அத்துனை
நரம்புகளும் தொய்ந்து
கிடக்கின்றன சுருதி
கூட்டாமல்
காட்டுதீயாய்
கபளீகரம் செய்தாய்
என்னை
பாலைவனமாகி
வாயுலர்ந்துகிடக்கிறேன்
வாசமாகவருவாயா
வசமாக்கிசெல்வாயா...
வானம்பார்த்துகாத்திருக்கிறேன்
வாய்பிளந்து கிடக்கிறேன்

நீரின் குமிழாய்
நீர்த்துகொண்டே
பொங்கிபிரவாகமாக
சுழிக்கிறதுவாழ்வின்
பிரிக்க இயலாத முடிச்சுகள்...
அடியும் நுனியும்மாறிமாறி
சுழன்றுகொண்டே பிடிபடாது
நகர்ந்துகொண்டே
பிறக்கிறதுதினம்
விச நாக்கின்நுனியில்
வாழ்வைஅடகுவைத்து
தினம்செத்துபிழைக்கும்
நித்யகண்டமாக நீள்கிறது
எந்தகணமும் அறுந்து
தலைபிளக்கும்
பனைக்கருக்காக
தொங்கிக்கொண்டே
ஒருவேளைஉணவும்
கானல்நீராய் குதிரை
முன்கட்டிய உணவுதுண்டாய்
ஓடிக்கொண்டிருக்கிறது முன்னால்
இலக்கறியாது ஓடிக்கொண்டிருக்கும்
வண்டியின் பின் சக்கரம்போல்
ஓட்டம்வாடிக்கையானதுதான்.......