Wednesday, 20 May 2015

நீங்கள் வாழ-த்தண்டு
நீங்கள் வாழ-ப்பூ
நான் வாழ வாங்குங்க
பாசாங்கில்லை
வேடமில்லை
சின்னதா ஒருமுத்தம்
என்னத்தச்சொல்ல
உலகமே என் கையில
கிடச்சாப்புல சந்தோசம்

மாமியாவப்பட்டினிபோட்டுட்டு
கவலைப்படாமா கோழிக்கு
கஞ்சியபோட்டுட்டு
போறாளேபாதகத்தி
அந்தமவராசிவறதுக்குள்ள
தின்னுபுடனும் 
கோழிக்குவைச்ச
கஞ்சியையாவது
இல்லேன்னா பட்டினியும்
போட்டுப்புட்டு
புருசன்கிட்டபுகார்பட்டியலும்
குடுப்பா புன்னியவதி
சில்லென்றஅருவியே கொஞ்சிச்
சிரித்திடும் கிளிகளே 
பக்கம்வந்துவெட்கத்துடன்
எட்டிப்பார்க்கும்மான்களே
தோகைவிரிக்கமுற்படும் மயிலினமே 
கூவிக்கொண்டிருக்கும் குயில்களே 
வருடும் தென்றலே 
மழைமேகத்தில் ஒளிந்து 
வேடிக்கைபார்க்கும் வானமே 
இலைகளினூடேவெட்கமில்லாமல்
எட்டிப்பார்க்கும்பகவலனே
புன்னகைக்கும் மரங்களே
பூத்துக்குலுங்கும் மலர்களே 
என்னவன் என்னை முத்தமிடப்போகிறான்
மூடிக்கொள்ளுங்கள் உங்கள் விழிகளை
பொறாமையால்முன்னே வந்துவிடாதீர்கள்
நான் தலைவன் மார்பில் சாய்ந்ததை
தோழிகளிடம் செப்பிவிடாதீர்கள் வெறுவாய்க்கு வெற்றிலை 
கொடுத்துவிடாதீர்கள்
இரவெல்லாம் விழித்திருந்ததும்
விழிகள் முழுவதுமாய்
சிவந்து நனைந்திருந்ததும்
எல்லாம் உன்னாலே உன்னாலே
நான் காலனின்
கால்களில் விழுந்து
கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்
நீ கால்பண்ணவில்லை என்று
திட்டிக்கொண்டிருக்கிறாய்
உயிரை நிறுத்தப்
போராடிக்கொண்டிருக்கிறேன்
நீ உன்மத்தமாய்
பிதற்றிகொண்டிருக்கிறாய்

ஊடல் மலர்களை
ஊடே செறுகி
உடலை
சூடாக்குகிறாய்

ஈரிதழ்களைக்
குவித்து
இனிமை
பரிமாறுகிறாய்
காதில் அணிகலனை
அசைத்து
காதல் கதைகள்
சொல்லுகிறாய்

வத்திக்கெடக்குது உடலு 
காஞ்சுகிடக்குது மனசு 
செத்துக்கிடக்குது ஈரம் 
கண்டுக்கவில்லயாரும் ,,
வந்துகிடக்குறேன் ஓரம் 
வறண்டுகிடக்குது வயிறு 
பிறண்டுகிடக்குது மனுசங்க மனசு கிழிஞ்சுகிடக்குது சேலைததலைப்பு 
காத்திருக்கிறேன் எமனின் ஓலைஅழைப்பு
மனுசங்களே
உங்கஏமாத்துவேல
எனக்குத்தெரியாதா....
வயல்லரெண்டுபேரும்தான
ஒன்னாஒழைச்சோம்
நீ நெல்லஎடுத்துகிட்டு
எனக்கு வைக்கோலக்குடுதீங்க
திரும்ப நெல்ல அரைச்சி
அரிசியநீங்கஎடுத்துட்டு
உமியஎனக்குக்குடுத்துட்டீங்க
திரும்பசாதம் வடிச்சு 
சோத்தை நீங்கஎடுத்துகிட்டு
கஞ்சிய எனக்கு குடுத்தீங்க
ஆனா கடைசில
நீங்கதான் ஏமாந்தீங்க
உங்களுக்கு சுகரு பிரஸ்ஸரு
கிடச்சது பரிசா
எனக்கு அதுகிடைக்கல
ஆரோக்கியம் கிடைச்சது
அந்தபால்லயும் பங்குக்கு
வந்துட்டீங்க...
இந்தமுறைநான் ஏமாறல
கன்னுக்கு ஒதுக்கிட்டுதான்
ஒங்களுக்கே பால்குடுத்தேன்....
அதை உறிஞ்சவும் மிசின்
கொண்டுவந்துட்டீங்களே
நல்லவங்களே,,,,,,,,,,,,

குட்டிகுடமெடுத்து
எட்டிநடபோடும்
உன் சின்னபாதம் 
செருக்கோட நடக்குறப்ப
கண்ணு கொள்ளல
கவிதையா இருக்குசெல்லம்......


என்ன அடிச்சிட்டல்ல
ஒங்கூடநான் பேசமாட்டேன்
கடைக்கி நான் போகமாட்டேனு
சொன்னா அடிச்சிட்டேஇல்ல
அந்தக்கடக்காரன் நான்போனா
கன்னத்தைக்கிள்ளுறான்
மடில உட்காரச்சொல்றான்
அதுக்கு சாக்கிலேட் தறீன்றான்
அதுநாலதான் நான்
போகமாட்டேன்றேன்
அதுதெரியாம என்ன அடிசிட்டே
போ உங்கூடா கா...
நான் சாப்புடக்கூட
வரமாட்டேன் அண்ணனை
போகச்சொல்லவேண்டியதுதான
அவன் படிக்கிறானாம்
நான் படிக்கதேவலையா
நாந்தேன் கடைக்கிபோகனுமா
அப்பாவரட்டும் சொல்றேன் ..
அவருஇருந்தாஎன்ன
போகச்சொல்லமாட்டாரு
நீ மோசம் உங்கூட 5வருசத்துக்கு
பேசமட்டேன் 
அப்புறம் செல்லகுட்டி புஜ்ஜிகுட்டினு
கொஞ்சாத உன்ன 
எனக்கு புடிக்கலபுடிக்கல 
கடைக்கிபோகப்புடிக்கல...........

பட்டு செல்லம் தங்கம்
வைரம் நீதாண்டி
அழகு யாரு ஒன்ன
கருவாச்சின்னு
சொன்னா அவகெடக்கா
கருப்புதான் அழகு
கிஸ்ணன் கூடகருப்புதான்
எல்லாத்தயும் மயக்கலயா
ரசினி கூடக்க்ருப்புத்தான்
அவனவன் அடிச்சிட்டுசாகலையா
அம்புட்டுஏன் நம்மசாமிகூட
கருப்புத்தான்கும்புடுரதில்லாயா
அவகொஞ்சூண்டுமாநிறம்
அதுல அலட்டிக்கிறா
உன் அழகு யாருக்குவரும்
இரு திருஸ்டி வைச்சுவிடுறேன்
ஊர்கண்ணு பட்டுடப்போகுது.....

சின்ன சின்ன முத்தங்களால்
சிரித்து சிதறவைத்தாய்
வண்ண வண்ண வார்த்தைகளால்
வந்தனை செய்தாய்
கண்ணத்தில் முத்தமிட்டு
காதை க்கடித்தாய்
நெற்றியில் முத்தமிட்டுத்
தலைகோதினாய்
விழிகளில் முத்தமிட்டு
கனவுகளை விதைத்தாய்
கூந்தலைக்கோதிவிட்டு
கவிதைசொன்னாய்
காதணியை வருடிகாதல்
கதைகள் சொன்னாய்
இன்னும் என்னாசெய்யப்போகிறாய்
என்னை பைத்தியமாக்கியபின்னும்....

மின்னலாய் பளிச்சிடுகிறது
மேகமாய் அங்கிமறைத்தாலும்
உன் காதல் விழிகள்
இதென்னபுதுவாசம் 
நீசூடிய மலர்களுக்கு
தன் வாசம் துறந்து
உன் வாசம் ஏந்தினவோ......
கடித்தே அறுத்திடலாமோ
கம்பிவேலிகளை
துடித்தேசாவதே 
வாழ்க்கைஎனில் 
நடித்தே கெடுத்த
நயவஞ்சகர்கூட்டத்தை 
இடித்தேகேட்கயாவருமிலர்
வடித்தகண்ணீருக்கு
பிடித்துஆறுதல்சொல
தடித்தநாவுகள் 
தயங்கினவே
நொடிப்பொழுதில்
நூறுபேர்கள்
அடித்தேமடிந்ததை
படித்தும் நின்றீரே
பனைமரம்போல்....
செடிகள்போலபிடுங்கபட்டோம்
பூக்குமுன்னே கசக்கப்பட்டோம்
இடிகள் விழட்டும் 
அவர்தலைகளில்
படிகள் எதற்கு விகாரங்களில்........

தலைகீழாய்
உலகம் தொங்குகிறது
ஒற்றைத்துளியில்

தெனம் தேடிப்போய்
குடிக்கிறானே
என்னதான் இருக்கு
இந்தக்கருமத்துல.........
இதைக்குடிச்சிட்டுத்தான
தெனம் வந்து அடிக்கிறான்
இன்னிக்கி நானும்....
மவனே வரட்டும்
ஒருகை பாத்துடுறேன்
அவனா நானா நு.....
என்னகண்றாவி இது
இப்புடிகசக்குது....

இதழ் கிண்ணத்தில்
வைத்துப்பரிமாறுகிறாய்
காதல் ர(வி)சத்தை
மீண்டும் கேட்கும் வேட்கையோடு
அரைமணிநேரம்
பேரம் பேசி
5ரூபா குறைத்தமகிழ்சியில்
வீடுதிரும்புமியபோது
மனைவிசூப்பர்
மார்க்கெட்பில்லைகொடுத்தாள்
வரியாக 55ரூபாயோடு
5ரூபா நெஞ்சைஅழுத்தியது
...

பந்திஉள்ளநடக்குது
பசியாஇருக்குது
ஓரமாஒக்காருயாகூட்டம்
ஒளிஞ்சதும் கூப்புடுறேன்னாக
பத்துபந்திமுடிஞ்சிருச்சி
எலவெளியேகுவிஞ்சிடுச்சு
இருக்குதோ இல்லயோ
பதட்டமா இருக்கு
வெள்ளவேட்டிசட்ட
போட்டிருந்தா
வெள்ளனாவே
சாப்பிட்டுருக்கலாம்
வெறும்வேட்டியோடபோனா
வெளியபோன்னு
வெரட்டிருவாக
வெக்கமாபோயிடும்
இந்தபொழப்புதேவையானு
மனசுகுத்திகாமிக்கிது
மனசுசொல்றஎதையும்
வயிறு கேக்கமாட்டேங்குது.......

அம்மாவின்
சடைப்பின்னல்தான்
அழகோ அழகு 
அடிச்சுபின்னினாலும்
சும்மாஅள்ளிரிப்பன்
சுளுவாகட்டிப்போனாலும்
அம்மாபோட்டசடைபோல
அழகா வராது
சிக்கெடுத்துதலையில்
சீவும்போதுபேன் எடுத்து
வக்கனையாதிட்டிகிட்டெ
வகிடெடுத்துபின்னிவிட்டு
ரெட்டச்சடைபோட்டுவிட்டு
எம்போண்ணுமாதிரிஅழகு
ஏழுலோகத்திலுமில்லனு
திருஸ்டிசுத்திபோடுவியே
கண்கலங்குட்துஅம்மா
உன்னபார்க்காம
அடுத்தலீவுக்குவரும்வரை
மனசுகெடந்துதவிக்குதம்மா.......

தொகுத்து
வைத்திருக்கிறேன் 
உனக்காக 
மழைத்துளி 
வைரங்களை
மாலையாக்கி 
உன்சங்குகழுத்தில் 
அணிந்துபார்க்க
Like · C
உலகமே இந்தகோலி
உருண்டைக்குள்தான்
எங்களுக்கு 
உருண்டுபுறண்டு
விளையாடி
சாப்பாடுமறந்து
சண்டைபோட்டு
சட்டை
கிழிந்துகிழித்து 
வீட்டில்முதுகுவீங்க 
அடிவாங்கினாலும்
மறுநாள் காலை
மறுபடியும்
டவுசர்பையில்
கோலிக்குண்டுதான்
அதைஒளித்துவைக்க
ரகஸிய இடங்கள்
வாங்கிய அடியில் 
வீங்கியபின்பக்கம்
விளையாட்டில்
வலிதெரிவதே இல்லை
இழந்த அந்தப்பருவம்
மீளாதென்பதுதான்
வலிக்கிறது......(நன்றிபுகைப்பட உதவிFranklin Kumar)
Like · Comment ·  · 6081
செங்கல்சூளயில
ஆத்தாவேலைக்குப்போயிருக்கு
தங்கச்சிபாப்பாவை
எங்கிட்டவிட்டுட்டு
கொஞ்சூண்டுநிழல்ல
எங்களைவிட்டு
கொளுத்துறவெயில்ல
வேலைசெய்யுது
கால்செருப்புகூட இல்லாம
வீட்டுக்குவந்து
ராத்திரிபூராம்
ஆத்தாஅழுகும்
நானும் அழுவேன்
வயித்துவலிதாங்காம
கண்ணெல்லாம் 
எரியுதுன்னு
கதறும்,,,,
வேறவேலைக்குப்
போனாஎன்னனுகேட்டா 
நான்படிச்சபடிப்புக்கு
கலெக்டர்வேலையா
குடுப்பாகன்னுகேட்கும்
நான்வளர்ந்து
பெரியபொண்ணானா
அம்மாவைவீட்டுலவைச்சிட்டு
நா சம்பாதிச்சு கஞ்சி
ஊத்துவேன் ஆத்தாவை
அழவிடமாட்டேன்......

விழுந்துதுடிக்கிறது இதயம்
பதறித்துடிக்கிறது இதழ்கள்
வழிந்து கதறுகிறது விழிகள் 
நழுவுகின்றன கால்கள்
நீங்கிய உன்னை நினைத்து 
இரவெல்லாம் பகலாகி
நனைகின்றன தலையணைகள்
இதயத்தை எடுத்துச்சென்றாய்
என்று மகிழ்ந்திருந்தேன் 
மிதித்துச்சென்றதறிந்து 
மரித்தேன் தினம் 
உன்னால் எப்படி
முடிந்ததென்றறியேன் 
என்னால் முடியவில்லை
என்றுணர்கிறேன் 
விரைந்துமீண்டும் 
வந்துவிடு 
என் உயிரைத்திருப்பித்தந்துவிடு,,,,,,
,என் அன்பே....
பள்ளிகூடகதவுஓட்டையில்
பாட்டிவித்த அரநெல்லிக்கா
மாங்கா இலந்தைப்பழம்
எள்ளுமிட்டாய் கமர்கட்டு
பொரிஉருண்ட புளிஉருண்ட
சோளக்கதிரு மரவள்ளிக்கிழங்கு
கடன்சொல்லிவாங்குன
கடலமுட்டாய்
வெள்ளரிக்காபோல 
எதுவும் சந்தோசம்தரவில்லை
எங்கசந்தோசம் முகம்பாத்து
பாட்டி சமயத்துலகாசே
வாங்காது ஏன்னுகேட்டா
எம்பேரன்பேத்திகிட்ட
எதுக்குகாசுபரவாயில்லனு
பொக்கவாயிலசிரிக்கும்
வாச்சுமேந்தான் சொன்னான்
பாட்டிக்கு குழந்தயேஇல்லயாம்....பாவம்