Tuesday, 31 March 2015

அதுவரைசேமித்த
கோபத்தீஅன்று
பெருகாட்டுத்தீயாகப்
பரவியது
உச்சகட்டப்
போராட்டத்திற்குப்பின்
பெருமழையாய்
பொழிந்தது 
இருப்பினும்
வெந்துதணிந்ததுகாடு
மலர்கள் பூக்கும்
செடிகள் துளிர்விட்டன
யுகமாற்றத்தின்
வெளிப்பாடாய்
உன் முகத்தில்..........
Like · Comment · 
எனது சிறகுகளை
விமர்ச்சனக்கல்லெறிந்து
சிதைக்க முற்படுகிறாய்
இயலாது தோல்வியுற்று
துயருறும் வேலைகளில்
மீண்டும் வன்மத்துடன்
திட்டமிடுகிறாய்
தீய்த்துவிடும்
சாத்தியங்களை..
உயரேபறக்கும் வேளைகளில்
சூர்யக்கதிர்களால்
சுட்டெரிந்துவிட
ஆவலுறுகிறாய்
எப்படியேனும்
உன்னைத்தாண்டி
ஒரடி உயரம்கூட
ஏற்கும் மனமில்லை
வானவில்லில் 
நான் முத்தமிட்டாலும்..
முன்னம் சிலபொழுதுகளில்
சின்னஞ்சிறியேன் நான்
கண்ணன் உன் திருநாமம்
செவியுறும்பேறுபெற்றேன்
இன்னும் சிலகாலம்
இசையாக உன் நாதம்
எந்தன் செவிவழி
இதயம் நிரப்பும் 
இன்பமுணர்ந்தேன்
பின்னம்நான் காற்றின்
திசையெல்லாம்
கண்ணன் உன்னை
காணுறக் காதலுற்றேன்
காணாமல் விழித்ததால்
கண்கள் வழிய 
காத்திருக்கலானேன்.....
கண்ணுற்றேன் உன்னை
கார்மேகமாய்
கசிந்துருகினேன் காதலால்
மழை பெய்ததென்
கண்களில் உன்னைக்
கண்ணுற்ற பேரானந்ததில்................
"முன்னம் சிலபொழுதுகளில்
சின்னஞ்சிறியேன் நான்
கண்ணன் உன் திருநாமம்
செவியுறும்பேறுபெற்றேன்
இன்னும் சிலகாலம்
இசையாக உன் நாதம்
எந்தன் செவிவழி
இதயம் நிரப்பும் 
இன்பமுணர்ந்தேன்
பின்னம்நான் காற்றின்
திசையெல்லாம்
கண்ணன் உன்னை
காணுறக் காதலுற்றேன்
காணாமல் விழித்ததால்
கண்கள் வழிய 
காத்திருக்கலானேன்.....
கண்ணுற்றேன் உன்னை
கார்மேகமாய்
கசிந்துருகினேன் காதலால்
மழை பெய்ததென்
கண்களில் உன்னைக்
கண்ணுற்ற பேரானந்ததில்................"
Unlike · Comment · 
உனக்கான பூக்களாக
எனது கவிதைகளை
அர்ச்ச்னை செய்கிறேன்
தினமும்.......
உன் 
பார்வை வரம் வேண்டி
Unlike · Comment · 
தக்கையின் மேல்
விழிகளாக
தகிக்கிறது
மனசு
உன் மீன் விழிகள்
சுண்டுகிறதா
என்றறிய......
தினமும் உன் 
இதயக்கதவை
தட்டிக்கொண்டிருக்கிறேன்
எனது பார்வை
விரல்களால்
திறக்கும்நேரம்
திறந்திருக்குமோ
என் விழிகள்......
மூடியிருக்குமோ
என்றறியாமலே
விரல்கள் தொடும்
தூரத்தில் இல்லையெனினும்
விழிகள் தொடும் 
தானிருந்தேன்
மனமிருந்திருந்தால்
விழிவருடலின்போது
இமைதாழ்த்தி
இருமனம் கலந்திருக்கும்
இப்போதும் நான்
நிற்கிறேன் உன் அன்பு
வேண்டி
யாசகம் கேட்டபடி
என்னை புரிந்துகொள்ளும்
ஓரடிகூட 
நகர்தலில்லை
யாசிக்கிறேன் என்றறிந்தபோதும்
விளயாதமண்ணில்
விழுந்த மழைத்துளியானேன்
காய்ந்து கருகி
காற்றுடன் கலந்தபடி........
ஒவ்வொரு
வார்த்தையிலும்
முற்றுப்புள்ளியாக
முட்களை வைத்து
வலிகளை தைக்கிறாய்
சூழல்களின்
அழுத்தம் மனதைபாரமாக்க
நீயும் சுழற்றிவிடுகிறாய்
உன் பங்குக்கு தலை
சுற்றும் வகையில்
உனக்காக சுற்றிய
கால்கள் கதறுகிறது
சுற்றும் செயலிழந்து
சிந்தை பிதற்றுகிறது
உன்மத்தமாகி
ரசித்தமனது
ரணமாகிக்குருதி
கொட்டுகிறது
உயிர்நீத்தலின்
உச்சமாக 
உதறிக்கொண்டிருக்கிறது
உயிர்கொடுக்க நீ வருவாயா
உதிரம் குடிக்கத்துணிவாயா.....
உனது நினைவுத்தென்றல்
வாங்க முழுநிலவின்
நிழலில் முகமுயர்த்தி
முகாமிட்டிருக்கிறேன்
முழுநிலவின்
ஒளி முகத்தில்
முத்தமிடுகிறது
குளிர்ச்சியாக....
உதிர்கிறது
ஒற்றைபூஇதழொன்று
உச்சியிலிருந்து
உன் பிரதினிதியாக
என் இதழைக்
குறிபார்த்து
இதுகாறும் அடர்ந்து
படிந்திருந்த
ஆன்மாவின் அழுக்குகள்
விடைபெறுகின்றன
அகலுமாசை இல்லாமல்
உற்பத்தியாகிறது
புதிய நதி ஆழ்மனதில்
கரைப்புரண்டோடும்
ஆவலுடன்
அதுஓர்வானவில்லை
பிரசவிக்கும் இனிய
அவஸ்தை....
அருவிதலையில்விழும்
அனுபவம்..
மரிக்கொழுந்தின்
மனம் மயக்கும் வாசம்........
"உனது நினைவுத்தென்றல்
வாங்க முழுநிலவின்
நிழலில் முகமுயர்த்தி
முகாமிட்டிருக்கிறேன்
முழுநிலவின்
ஒளி முகத்தில்
முத்தமிடுகிறது
குளிர்ச்சியாக....
உதிர்கிறது
ஒற்றைபூஇதழொன்று
உச்சியிலிருந்து
உன் பிரதினிதியாக
என் இதழைக்
குறிபார்த்து
இதுகாறும் அடர்ந்து
படிந்திருந்த
ஆன்மாவின் அழுக்குகள்
விடைபெறுகின்றன
அகலுமாசை இல்லாமல்
உற்பத்தியாகிறது
புதிய நதி ஆழ்மனதில்
கரைப்புரண்டோடும்
ஆவலுடன்
அதுஓர்வானவில்லை
பிரசவிக்கும் இனிய
அவஸ்தை....
அருவிதலையில்விழும்
அனுபவம்..
மரிக்கொழுந்தின்
மனம் மயக்கும் வாசம்........"
எள்ளிச் சொல்கிறாய்
ஒற்றைச்சொல் ஒன்று
என் இதயத்தை
கூராக தைக்கும் என்றறிந்தே
இயல்பையே 
எள்ளிநகையாடும் 
உதடு சுழித்து
ஓரப்பார்வையில்
ஓடும் குருதியும்
உறைந்து போகும்
தொணியில்
திட்டமிடாமல் இயல்பாகவே
நீசொன்னது
சொல் அல்ல
கல் கொண்டுஎழுதிய
கல் படிமம்..
தவிர்த்திருக்கலாம்
ஆனால் கண்கள் காட்டிக்
கொடுத்திருக்கும்
அதன் வன்மத்தை
அ ன்பின் எல்லைகளில்
நின்று
ஆ றுதல் 
இ யல்பாக
ஈ ரம் கசியும்விழிகளுடன்
உ ள்ளத்தில்தைக்கிறாய்
ஊ ற்ரெடுக்கிறது விழிகள்
எ ல்லாமேகனவென்றாலும்
ஏ னென்றறியாமல்
ஒ ற்றிகொள்கிறேன்
ஓ ரவிழிகளை
Unlike · Comment · 
ஒளிவெள்ளமாக
பொருத்துகிறாய்
புன்னகையை
பூக்களாகவே
 
இதழ்களில்தானே
பூக்கும் 
இலைகளுமா
பூக்கும் 
முகம்முழுவதும்.....
விரல்கள் தொடுப்பவை
எல்லாம்
இதழ்களில்
பூப்பதெப்படி.......
 
புன்னகையை
விதைக்கிறாய்
புலரும்
பொழுதுக்கும்.......
Like · Comment · 
கோலத்தின்
அழகு நாணுகிறது
கோலமிடும்
அழகில்
 
விரல்கள் பட்டு
மலர்ந்துவிட்டனபூக்கள்
கூம்பிக்கிடக்கிறது
மனதுமொட்டாய்......
உன்நினைவில்
 
திருவிழாவுக்கு
அம்மாவீட்டிலிருந்து
அழைப்பு
வழக்கம்போல் 
விடுமுறை இல்லைகணவருக்கு
(அல்லது )வரவிருப்பமில்லை
அம்மாவைப்பார்க்கும் 
ஆசை ஒருபுறம்
தோழிகளைப்பார்க்கும்
மகிழ்வு ஒருபுறம்.....
வழிஅனுப்பும் கணவரின் 
முகத்தில் 
நிச்சயமாக வருத்தமில்லை
ஊரின் எல்லையே 
கண்ணீருடன் 
வரவேற்றது தூறலுடன்
அம்மாவர்வேற்றாள்
அன்புநீர் கண்களில் வழிய
தன் வயதுக்கு முடியாத
விதம் விதமான சமயலுடன்
தம்பி வரலியா என்ற வருத்ததுடன்
அம்மா அதெல்லாம் 
இருக்கட்டும் 
உனமடில படுத்துக்கவாம்மா
அப்புறம் மீதிஎல்லாம்
சாப்பிட்டு படுதுக்கடி...
வேணாம் உன் மடி
போதும்மா,,,,,,,
போய் சேர்ந்தாளா 
இல்லையா என்று
கவலைப்படாத
கணவனை நினைத்து
கண்ணீர் வழிந்தது
அம்மா என்னம்மா
என்றாள்....
உன்னை மிஸ்பண்றேன் மா.....
என்றேன் 
வாழ்க்கையயும்
என்று மனதில் சொல்லியபடி...........
விழிகளுக்குசுமையாகுமோ
விழிகளில் தேங்கிய நீர்
சுமைதாங்காது சரிந்திடுமோ
இமைகள்.சரிந்து......
 
Like · Comment · 
காய்ந்துவிட்டனவோ
விழிகள் அழுது
சாய்ந்துவிட்டதோ
பசிக்குதேடி ஓய்ந்து.....
 
ஓய்ந்துவிட்டனவோ
கால்கள் அலைந்து
காய்ந்து விட்டனவோ
வயிறு உலர்ந்து
 
தோழி என்னைப்
பார்க்கவந்திருந்தாள்
பள்ளியில்
நெல்லிக்காய்
பகிர்ந்துன்னும்சினேகிதம்
பள்ளியில்
படிப்பைபற்றிக்
கவலைபடாதவள்
நான் விழுந்து
விழுந்துபடிப்பதை
பார்த்து அதிசயிப்பவள்
ஏன் படிப்பில்
அக்கறைஇல்லை
என்றால் 
படிச்சு என்னபன்னபோறேன்
என்பாள்
நான் பட்டணத்தில்
வரன்பார்த்து
தூரத்துசொந்தத்தில்திருமணம்
அவள்
சொந்தமாமனை
கட்டிக்கொண்டவள்
எத்தனை பிள்ளைகள்
என்றாள்...தனக்கு4
என்றபடி....
எப்போதும்
100/100மார்க்
வாங்கும்நான்
முட்டை வாங்கியதை
எப்படிச்சொல்வேன்.................
எத்தனை பள்ளிகள்
எத்தனை கல்லூரிகள்
படித்தாலும்
ஒன்னாப்பு டீச்சர்போல்
யாரையும் பார்க்கவில்லை
பக்கத்துவீடுதான்
வீட்டுக்கு வந்தால்
அத்தை பள்ளியில்
ஆசிரியை....
உட்காரநாற்காலி
இல்லாதபள்ளி
தரையில் கால்நீட்டி
அமர்ந்து பக்கத்தில்
உட்காரவைத்து
அ...ஆ எழுதச்சொல்லிக்
கொடுப்பாங்க
மதிய இலவச உணவில்
கூடுதலாக எனக்கு
ஒரு கரண்டி கிடைக்கும்
அவங்கசார் 3வகுப்பு
வாத்தியார்....
பிள்ளைகள் படிக்கலைனா
காதைபிடித்துதிருகுவார்
ஆனால் டீச்சர் ஆரஞ்சு
முட்டாய் தருவேன்
என்றுசொல்லியே
படிக்கவைத்துவிடுவார்
எனக்கு பட்டணத்தில்
வேலைகிடத்ததும்
அவர்களின் ஆசி
வாங்கபோயிருந்தேன்
கொஞ்சம் பொறு
என்று உள்ளே
சென்றடீச்சர்
குளித்து ஈர உடையுடன்
சாமிகும்பிட்டு
வந்து விபூதியிட்டு
நல்லாவருவடா என்றார்
கண்கள் கலங்கின,,,,,
எனக்கு....காலில்விழுந்தபோது