Friday 22 February 2013

பிரபஞ்சத்தின் 


அடர் இருளாக உன் அன்பு


யுகங்கள் தாண்டி 


காத்திருக்க


அவ்வப்போது வரும்

நட்சத்திர ஒளிகீற்றாய்

உன்

நினைவுகள்

பயணித்திருக்க

காலங்கள் கடந்து பயணமாகும்

ஒளீமயமான

நம் நிழல் நிஜ உறவுகள்.......
மொழிஅகராதியில் எந்தபக்கத்தில் 


தேடினாலும் உன் விழிமொழியின்


விளக்கம் தென்படவில்லை 


இதழோரச்சிரிப்பு சிறு விளக்கம் அளிக்கிறது


தெற்றுப்பல் முகவுரை அளிக்கிறது


பூ மலர்ந்தால் உலகறியும் 


உன்னிடம் காதல் மலர்ந்ததை 


நாம் மட்டுமே அறிவோம் 


காதலும் அறியா


வருடும் மயிலிறகாய் உன் கவிதைகள் 


வசப்படுத்தும் வசீகரத்துடன் வார்தைகள்


வண்ணங்களை வாரியிரைத்த எண்ணங்கள் 


எளிதில் விளங்கா பின்னங்கள்


ஒற்றைப்பார்வையில் என்னை உறையவைக்கிறாய்


உள்ளே புகுந்து என்னை உளரவைக்கிறாய்


விழிகளாலே விழுங்கிவிடுகிறாய்


வீணாக ஏன் இன்னும் நிற்கிறாய்


பார்வையாலே பற்றவைக்கிறாய் 


உன் மூச்சுக்காற்றால் என்னை வேகவைக்கிறாய் 

முத்தங்களால் தின்றுவிடுகிறாய் 


மொத்தமாக எனைவென்றுவிடுகிறாய்


உனது வெட்கச்சிரிப்பாலே 


வண்ணம் தீட்டுகிறாய் 


புழுதியில் புயலாக நீ வருகிறாய் 


புழுதிகளுக்கும் புன்னகை கற்றுத்தருகிறாய்



வானத்திற்க்கு ரோஜா வண்ணம் தந்தவளே 

வண்ணத்தையே வதனமாக கொண்டவளே 

மலரின்மென்மையை மனதாக்கினாய்
ம்ணம் மிகுந்த மலராகவே மாறினாய்
மயிலிறகாய் வருடுகிறாய்மனதை 


மயக்கி விழிக்கிறாய் மான்விழியால்


காத்திருக்கிறாயா காக்கவைக்கிறாயா

கனவுகளுடன் நான்..கவலையின்றி நீ......


உதிர்த்த முத்துக்கலை எண்ணிப்பார்க்கிறேன்


உதிர்ந்ததெப்படி என்றும்எண்ணிப்பார்க்கிறேன்


கலங்கும் கண்களை தேற்றிப்பார்க்கிறேன் 


கலைந்துபோய் தரையில் கிடக்கிறேன்


இறகுகளாகிப்பறக்கின்றன


என் இதயம் வானமெங்கும் 


உன் வண்ணமாக மாறி 


இலக்கில்லாமல்கனத்துடன்


உன் நாடி நரம்புகளை விரல்களால் மீட்டுகிறேன் 

உன்னுள்புதைந்திருக்கும் அபூர்வம் 


இசையாக பிராவாகிக்கிறது சுரம் மாறாமல் 


எட்டாவது சுரமாய் எனக்குமட்டும் எட்டும் சுரமாய்


உனது மெல்லிய பார்வைஅலைகள்


உள்ளே பொங்கும் உணர்வு அதிர்வுகளை 


காட்டிக்கோடுக்கிறது 


உனது ரத்தநாளங்களில் 


பொங்கும் வேகத்தின் அளவுகோல்...


அருவி மலையின் மடியில் விழுவதைப்போல்


எனது மடியினில் விழுகிராய் குளிர்விக்கிராய் 


மரங்களுக்கு நீர் வார்ப்பதுபோல 


மனதுக்கு இதமாகிராய் மயங்கிகிடக்கிராய்


மனம் மயக்கும் தேவதை 


மயக்கங்களின் அற்புத விதை 


மனங்களின் மாயை 


வளர்க்கிறாள் காதல் தீயை


நாணச்சிரிப்பிலே நர்த்தணமாடும் வதனம் 


முத்துபல் முன்னே நின்று முகவுரை வழங்க


மோகனப்புன்னகை கவிதை எழுதுகிறது 


தாமரை முகத்தினில் தவமிருக்கிறது அழகு


காதல் நினைவு பட்டாம்பூச்சியாய்


சிறகடிக்கிறதுஎன் மனவானில் 


உந்தன் நினைவு அன்னப்பறவையாக


நீந்துகிரது என் மனக்குளத்தில் 


இரைக்காக காத்திருக்கும் பூனைக்குட்டியாய் 


என் மனம் காத்திருக்கிறது 


உனக்காக இரவெல்லாம் கண்விழித்து


விழுந்துகிடக்கிறேன்விசும்பல்களுடன் 


சிதறிக்கிடக்கின்றன உன் நினைவுகள் 


உதிந்தமலரிதழ்கள்போல


வாடுமுன் வருவாயா இல்லை 


என்னை வாட விடுவாயா.




விளக்கின் அடியில் உள்ள இருள் போல 

என் போலி முகமலர்வின் ஆழத்தில் 

உன் நினைவுகள் நிழலாய் 

விளக்கணைந்ததும் வீரியமாக பரவுகிறது என்னுள்


மெளனவெளிப்பாட்டில் 


எனது இளமை இசைக்கிறது


ராகங்கள் பலகோடி


அதைப்புரிந்து என்றுவருவாய் 


எனைத்தேடி


தூரவெளிச்சங்களாக நீ


என் கண்களிலிருந்து 


வழிகின்றன


என்னுள் பொங்கும்


உன்னினைவுகளின் 


உன்னதங்கள் 


கண்ணீராய்.............


முகநூலின்


பக்கங்களில்


வரைகிறேன் உனது


முகபிம்பஙளை


கவிதைகளாக


விழி ஒரத்துளிர்ப்புடன்....


வண்ணங்களாகப்படிகிறாய்


தொடும் விரல்களிலும்


மனதிலும்.........


எனது கனம் இழந்து லேசாகி மிதக்கிறேன் 

என்னுள்பரவுகிறது நீரின்குளுமை


உனது நினைவுகளில் நான் மிதக்கும்போது 


உன்வெப்பம் என்னுள்பரவுவதுபோலவே


நீ ஒருமுறை வந்து செல் 


உனது வாசத்திலே பூத்தமலர்களிடம்


கற்றுக்கொள்கிறேன்


கவிதையின் படிமானங்களை ..


ஓவ்வொருஅணைப்பிலும்


இடமாறுகின்றன நம் இதயங்கள்


உன்னிடமிருந்து என்னிடமும் 


என்னிடமிருந்து உன்னிடமும்,,


உள்ளே உறைந்திருப்பதால்...


இதயத்தின் ஈரத்திலும்


விழிகளின் ஓரத்திலும் 

வாழ்வின் சாரத்திலும் 


மரணம் வரும் நேரத்திலும் 


உன்னில் உறைந்தபடியே 


உயிர்த்திருக்கிறேன்......


உன் இதழ்கள் என்ன பகலவனா


பட்டவுடன் என் இதழ்கள் காதல் 


பச்சயம் தயாரிப்பில்


படுவேகமாய்


உயிர்சங்கிலியின் ஆதாரமாக,,,,,


சூரியனால் நிழல் உண்டாகும் 


சூர்யனுக்குநிழலுண்டா ,,,


நான் உனது நிழல் 


நிழலைத்தாங்க உனக்கு 


எத்தனை ஆசை .........


இமைமூடினாலும் இதயம் உறங்கா கனவு 


இதழ் பிரிந்திருந்தாலும் இணைபிரியா உறவு 

இறந்துபோனாலும் பிரிந்துபோகா மனது

இனியொருஜென்மத்திலும் இணையும் பிறகு


மழையாக முத்தமிடுகிறாய் மேனிஎங்கும் 


உடலின் ஒவ்வொரு அணுவையும் நனைக்கிறாய் பூரணமாய் 

ஒவ்வொரு திசுவையும் சூடாக்குகிறாய் 

அணுவைபோலவே தொடர்வினையாய்.....


உச்சி முதல் உள்ளங்கால்வரை 


கட்டிஅணத்து ஆக்கிரமிக்கிறாய் 


குளிர்வித்து குளிர்வித்து சூடாக்குக்றாய்


நீர் போலவே 


அழுக்கற்றுகிறாயா அழுக்காகுகிறாயா


புரியாமல் நான் 


அனுபவித்தலை தள்ளமுடியாமலே......


உனது இமைகளின் கனங்களில்


படிந்துகிடக்கின்றன 


ஒராயிரம் சோகக்கவிதைகள்


உன் முகத்தினில் உறைந்த்துகிடக்கின்றன காலங்களைத்தாண்டிய 


துன்பஇலக்கியங்கள் 


விழியில்சிந்தும் ஒற்றைத்துளியில்


அலையடிக்கிறது 


மனக்குளத்தின் கலக்கங்கள்.....


இதயத்தின் ஈரத்திலும் 


விழிகளின் ஓரத்திலும் 


வாழ்வின் சாரத்திலும் 


மரணம் வரும் நேரத்திலும் 


உன்னில் உறைந்தபடியே

உயிர்த்திருக்கிறேன்.....