Tuesday, 19 March 2013

விடுவதற்கா பிடித்தாய் என் விரல்களை 


விரல்களை விடுவித்தாலும் 


விழிகள் தொடர்வதை என்னசெய்வாய் 


விழித்திருக்கும்வேளைகளில் நினைவாக 


விழிமூடும்வேளைகளில் கனவாக 


எப்போதுமே என் நிழலாக 


என்றும் என உயிராக நீ....


உனது கூந்தலில் சூடப்பட்டதால் 


மோட்சமடைந்த பூக்களின் மேல்


நான் பொறாமைகொள்கிறேன் 


என்னிடமிருந்து தினம் வாய்ப்புகளைப் 


தட்டிப்பெறுவதால்..


உன் விரல் பட்டதும் நான் 


சிறகுகள் முளைத்துப்பறவையாகி


விண்ணில் பறக்கிறேன் 


நான் தரையிறங்க 


உன் இதழ்களை 


தயராகவைத்திருக்கிறாயா.....


உனது சமாதான முத்தங்களூக்காகவும் 


சமாதானமுகபாவங்களை ரசிப்பதற்காகவுமே 


நான் பொய்சண்டை இடுகிறேன்

சமாதானம் அடையாததுபோல் நடிப்புடன்....

நீ தீண்டவேண்டுமென்பதற்காகவே 


தேவதையாகிறேன் உன்னைத்தொடர்கிறேன் 


எந்த உலகம் நீ சென்றாலும் 


எதன்மீது நீ பயணித்தாலும்,,,


உன் பின்னே நான் நிழலாக..


இலக்கைப்பின்னே வைத்துக்கொண்டு


எங்கோ பாய்வதற்குநாணேற்றுகிறாய் 


என்பக்கம் நாடாமல் வெறுப்பேற்றுகிறாய்


இந்தபாசாங்குதானே உன் பக்கம் என்னை இழுக்கிறது..


தனித்திருக்கும் தனிமையில் 

இனித்திருக்கும் உன்நினைவுகள்

தவித்திருக்கும் தவிப்புகளில்

பொதிந்திருக்கும் உணர்வுகள் 

கலைந்து நிற்கும்வேளையில்

கண்ணுக்குள்ளே கனவுகள்
எனக்குள்ளே பூத்திருக்கும்
உனதான நினைவுகள் .......தனித்திருக்கும் தனிமையில்
இனித்திருக்கும் உன்நினைவுகள்
தவித்திருக்கும் தவிப்புகளில்
பொதிந்திருக்கும் உணர்வுகள்
கலைந்து நிற்கும்வேளையில்
கண்ணுக்குள்ளே கனவுகள்
எனக்குள்ளே பூத்திருக்கும்
உனதான நினைவுகள் .......

விழித்திருக்கின்றன விழிகளுக்குள்ளே உன்


விசித்திதிரகனவுகள் வீர்யத்துடன்


விழிகளை விழிப்பில் வைத்து 


விழ்ததுடிக்கும் விழிநீர்துளியாக...


மருந்தாகவே நீ எனக்கு 


கவிதை விருந்து வைக்கிறாய்


காயங்களுக்கெல்லாம்


சந்த மருந்திடுகிறாய் 


வலிகளுக்கெல்லாம்


கவிதைவரிகளில் நிவாரணம் தருகிறாய் 


வாழ்கையில் வசந்த பக்கம் திறக்கிறாய்....


தொலைவிலே கனவாக உன் காதல் கோட்டைகள் 


மேகமுத்தங்களை மென்மையாகரசித்துக்கொண்டு


இங்கே தாபக்கனவுடன் நான் தவித்துகொண்டு 


உனதுமுத்தங்களை மேககூட்டத்திடம்


சேதாரமில்லமல் தரசொல்லி அனுப்புவாயா.....


உனக்காக நான் காத்திருக்கும் தருணங்களில்

உன்னினைவில் பூத்திருக்கும் நினைவுமலர்கள் 

வாடுவதற்குமுன் வருவாயா 


கோர்த்திருக்கும் நீர் துளிகள் 


விழியில் கொட்டுமுன் எட்டிடுவாயா .......


உன் நினைவுகம்பிகள் பொருத்திய


யாழெடுத்து மீட்டுகிறேன் தனிமையில்


உன் படிமானங்கள் மெல்லக்


குழைந்து வருகின்றன இசையாக 


நெகிழ்கிறது எனது மனம் இசைவாக.....


காதலை நான் கொடுத்தேன்


கலக்கக்தை நீ கொடுத்தாய்


என்னையே நான் கொடுத்தேன்


ஏமாற்றம் நீ கொடுத்தாய்


பாசத்தை நான் கொடுத்தேன்


வேசத்தை நீ அணிந்தாய்


அன்பை நான் கொடுத்தேன்

அலட்சியத்தை பரிசளித்தாய்

கண்ணாக உனை நினைத்தேன்

கண்ணீரை பரிசளீத்தாய்

வாழ்கையை நான் கொடுத்தேன்

வழக்கை நீ தொடுத்தாய்...
நம் காதல் இலக்கியத்தின் 


கடைசிப்பக்கங்களில் 


கண்ணீர்த்துளிகளால் 


கசிந்து கனத்து கிடக்கின்றன 


நம் பிரிவின் தடங்கள்


காவியத்தின் சாட்சியங்களாய்..

பொங்கிவரும் அலையின் விளீம்பில் 


விழிகள் போருக்குத்தயாராக 


போர் உன்னுடனானாலும் 


காயம் கண்டிப்பாக எனக்குத்தான்.....


இதழோடு இதழ் உரசினால்


அத்தனை செல்லிலும் 


அக்கினி பற்றுகிறதே


கந்தகக் கிடங்கா உன் இதழ்...


உன்னை நினைத்தலே கவிதை


தனியாகக் கவிதையென்று 


வேறெதுவுமில்லை...

எழுதும் வண்ணமெல்லாம் நீ

உனது கூந்தல் 

கவிதை எழுதுகிறது 


எனது முகத்தில் காதல் காதல் 


எனத்தொடங்கி....


என்ன வேதியியல் வினையில் 


என்னுள் புகுந்து நானாக மாறிப்போனாய்


என்னையேநானிழந்து


எந்த வினையாலும் பிரிக்க இயலாதபடி....


நீ காந்த வடதுருவமா 


எனது சிந்தனை திசைகாட்டும் கருவி


எப்போதும் நீ இருக்கும் 


திசையையே நாடுகிறதே 


திருப்ப பலமுறை முயன்றும் 


இயலாமையில் நான்,,,,,,


நினைவுபூக்கள் உதிர்ந்தாலும் 


நிஜங்கள் ஊடுருவி விரவிக்கிடக்கின்றன 


நெஞ்சமெல்லாம் வேராக 


நீ வேறாகப்போய் விட்டாலும்.


இருளின் நீட்சிப்பிடிகளில் 


இருந்து விடுபடமுயல்கிறேன் 


வெளிச்ச கீற்றான உன் விரல் பிடித்து 


ஒளிவிலகும் சாத்தியங்களை 


உள்வாங்கிக்கொண்டே....


அடர் இருள்களின் பிடியில் எனது தனிமை 


சிறைபட்டுக்கிடக்கிறது 


மீட்சிபெரும் ஆர்வங்களை 


தொலைத்து விட்டு 


யாரும் தொடமுடியாத 


தொலைவுகளில் புதைந்துகொண்டே......

எனது கவிதைகளை 


கனவுச்சுவர்களில்


எழுதிவைக்கிறேன் 


காகிதத்தில் எழுதினால் 


காணப்போவதில்லை நீ 


என்பதாலும்


நாம் அடிக்கடி சந்திக்கும்


இடம் என்பதாலும்.......


பிரிந்தாயோ மறந்தாயோ நானறியேன் 


பிறவி முழுதும் உனையன்றி வேறறியேன்


சிந்தனையிலும் உனை வேறாக அறியேன் 


என்றும் எனது வேராகவே அறிவேன்...


நம் காதல் சந்திப்புகளில் 


என்னை விட நாணம் கொள்வது 


நாணற்கூட்டங்கள்தான் 


அலைகள் வந்து எட்டிப்பார்க்கும் 


காதல் கற்றுகொள்ள 


அருகில் நீ துடிப்பாய் 


என்னை கட்டிக்கொள்ள..


ஒளிச்சுடரில் புதைந்திருக்கின்றன 


ஓராயிரம் கனவுகள் 


அதை அணைத்து தருவாயா 


அனைத்தும் தருவாயா 


உன் ஆளுமையுடன் 


கூடிய அணைப்பில்........


பொறாமை கொள்கின்றன 


திராட்ச்சைப்பழங்கள் 


உன் இதழ்களிடமும் விழிகளிடமும்


போதைதருவதில் தன்னை வென்றதால்....


உனக்குக்கிடைக்கவேண்டிய 


அத்துனை பரிசுகளையும் 


அழகாய் வாங்குகிறது தலையணை 


கதகதப்பையும் கண்ணீர்த்துளிகளையும்


கனல்முத்தங்களையும்......


விழிகளை மூடினால் இமைகளுக்குள்ளே


இருக்கைபோட்டு அமர்கிறாய் 


விழித்திறந்தால் இமைகள் மேல் 


அமர்ந்து இம்சை செய்கிறாய் 


எப்படித்தவிர்ப்பது என்றுதவிப்பது 


உன் இம்சைகளிடமிருந்து.....


மனதோடுபேசுகின்றன மலர்கள்


மன்னவனே உன் லீலைகள் பற்றி 


சொல்லவியலாது வார்தைகளைதேடுகிறது 


உன் கவிதை வரிகளில்.....


பின்னிருந்து அணைத்து நீ முத்தமிட்ட


எனது பின்கழுத்து பிதற்றுகிறது 


உன் சாகசங்கள் பற்றி கண்களிடம் 


காணமுடியா கண்கள் கேட்ட


காதுமடல்களிடம் ஊடலில்...


தலையணை அடியில் புதைக்கப்படுகின்றன


உன் மீதான எனது கனவுகளும் 


உன்னுடனான புரிதலுக்கும் பிரிதலுக்குமான

 கண்ணீர்த்துளிகள்...ஈரம்காயாமலே..