Thursday 30 October 2014


வழக்கம் போலவே
*
வன்மங்கள் மறைந்தது

போல ஓர் பாவனை

மயங்கித்தான் 

எதிர்கொள்கிறேன்நானும்

உன் முகமுடிகள்...
அனைத்தையும்

நம்பவேண்டிய

அல்லது

நம்பினால்போல

பாவனை 

செய்யவேண்டிய

அவசியம் எனக்கு

அதெற்கென உன்

மெனக்கெடாலை

ரசிக்கிறேன் உன் நிஜமுகம்

எப்போதுவெளிவருமோ

என்றபயத்துடன்..........
    வண்ணங்களைப்பற்றிய

    பிராங்ஞை இல்லாமல்

    வாழ்க்கை பற்றிய

    சிந்தனைகளுடன்

    வாழ்கிறது வண்ணத்துபூச்சி...
    தன்னைப்பற்றிய

    கவிதைகளைகடந்தபடி

    வண்ணமலர்களையும்

    தேன் குடங்களாக மட்டுமே

    தேடி ருசித்தபடியும்

    தனது அடுத்த

    வாரிசுகளை உருவாக்கும்

    கனவுடனும்

    காதல் வயப்பட்டபடி ,,
    அடுத்தவேளைஉணவைபற்றியும்

    வீடுகட்டித்தங்கும்

    கவலைகள் அற்று,,,,,,,,,,,,,,,,

    சுயங்களை தொலைத்த

    வனப்பிரதேசங்களில்

    ஈரங்களை தேடியபடி

    அலைகிறதுகாற்றாய் மனது

    கொன்று...
    புதைக்கப்பட்டிருக்கும்

    முதுமரங்களின் வேர்கள்

    அடியில் சுயவிலாசங்களைத்

    தேடுகிறது

    பச்சைவாசனை

    குருதிப்படிமங்களை

    நுகர்ந்தபடியே

    உறங்கிக்கிடக்கும்

    வன்மங்களைப் புதுப்பித்தவாறு

    இயல்பாய் வரும் பாவங்களின்

    முகமூடி அணிந்தவாறு

    மிதித்து உயிர்பறிக்கும்

    செயல்களுடன்

    என்றேனும் கனவுகளின்

    பிம்பங்களையாவது

    நேரில் கண்ணுரும் ஆவலுடன்........

Thursday 16 October 2014




நினைவின் 

விளிம்பு ஓரங்களில்
 

பயணம் செய்கிறேன்
 

கடைசிவரை 

விலகிவிடாமலும்
 

நெருங்கிவிடாமலும்
 

உன் நினைவுகளை ...
 

போர்த்திகொள்ளூம்
 

ஆசையுடன்



ஒற்றைச்சொல்லில்
 

உயிரை வதைக்கிறாய்
 

புரியாதபார்வைகளால்
 

புதிர்போடுகிறாய்
 

எரியாமலே என்னை ...
 

எரியவைக்கிறாய்
 

எரிந்தபின்னும்
 

பற்றவைக்கிறாய்....
 

பற்றியபின்
 

அணைத்துவிடுகிறாய்........



 

படபடக்கும் 
பட்டாம் பூச்சியும்
நின்று ரசிக்கும்.....!!
உன் விழிதன்

 சுற்றுசுவராய்படர்ந்து 
படபடக்கும் இமைதனை.......!!!
விழிமூடி 

கட்டாயமாய் ...
உறக்கத்தை

 இறுக்கிகொண்டபோதும்
களவாடிதான் 

கொண்டு செல்கிறது
உன் நினைவலைகள்......!!!



அடிக்கடி 
நிறம் மாறும்
உன் குணம் 

கலைத்துபோட்ட
வானவில்லாய்
என் மனவானில்

 ஓவியனின்
வண்ணகலவை தட்டாய்...
புரிபடாமல் 

ஆனால்
தெளிவான

குழப்பங்களாய்.......
என்னை 

அலைக்களித்தபடி
இணைந்தே 

வருகிறேன்
 

இணையமுடியாத
 

தண்டவாளங்கள் 

போல
 

தொலைவில்

 இணயும்
 

காணல் நீர் 

 கனவுகளுடன்



விழிகளுக்குள் 

விதைத்துவைத்தேன்
 

உன்னை பார்வையாக
 

விடியல்களுக்குள்
 

புதைத்துவைத்தேன் 

கனவுகளாக
 

கனவுகளில்

கரைந்திருந்தேன்...
 

காவியமாக
 

காலமெல்லாம்

 காத்திருப்பேன்
 

கனிவதற்காக
அழுகயுடன்

கூடிய
 

அணைப்பின் 

ஆனந்தம்
 

 ஆசையுடன் 

கூடிய
 

அணைப்பை 

தோற்கடிக்கிறது
அறிவியல் 

எத்தனை படித்தாலும்
 

தவிர்க்க

முடியவில்லை
 

உன் முகம் 

நினைவில்வருவதை
 

முழுநிலவை

காணும்போதெல்லாம்
கடந்துபோகையில்

 கவனம் தப்புகிறேன்
 

கழிவிரக்கத்தில் 

கரைந்துபோகிறேன்
 

உன் மீதான

சலனங்களில்

சரிகிறேன்
 

என்னை நானே 

தேற்றுகிறேன்
 

விழிகளை 

துடைத்தபடி
என் இதயத்தை 
படையலிடுகிறேன்
குருதிகொப்பளிக்கும்

 மணத்துடன்
உன் வலையல் 

துண்டுகள்
குத்தியிருக்கும் 

படிமங்களுடன்
வந்து எடுத்துசெல் ...
உன்

 வளையலை 
மட்டுமாவது
இணைந்தே 

இருப்பதெதற்கு
 

இதழ்கள்
 

மூடியே 

இருப்பதெதற்கு
 

இமைகள்
 

திறக்காமலே

இருக்கஎதற்கு ...
 

இதயகதவுகள்
கடந்துவந்தகாற்று
 

திரும்ப திரும்ப 

வருகின்றது
 

உன்னை கடக்கும்
 

உன்னதநிமிடங்களை
 

மறுபதிவுசெய்ய ...
 

கடந்துசென்ற 

நிலவு
 

திரும்பவருகிறது
 

உன் நிழலில் 

தன்னைப்பார்க்க
 

 கடந்துசென்றமேகம்
 

திரும்பவருகின்றது
 

முத்தங்களை

 மழையாகபெய்ய
உன் வீட்டுவானில்
 

வட்டமிட்டபடி சுற்றுகிறேன்
 

வழக்கமாகஎன்றேனும்
 

என்னை நீ உன்னும் 

ஆவலுடன்
 

நீ தூவும் 

தானியமுத்தங்களை...
 

கொள்முதல் செய்தபடி
அன்புகுச்சிகளை

 அடுக்குகிறாய்
 

என்இதயத்தில்
 

அழகான இல்லம்
 

அமைத்துக்குடி்யேற 

அன்பு
 

 பஞ்சுபொதி

முத்தங்களையும் ...
 

சேர்த்தே
இருக்கமாக

கட்டியிருக்கும்
 

நெழிந்தசுருள் 

கூந்தலில்
 

கட்டப்பட்டிருக்கிறது
 

 என் மனது
இரவில் வெளிவருகின்றன
உறங்கிக்கொண்டிருக்கும்
உண்மை வருடல்கள்
கனவுகளாய் 

வெப்பசலணத்துடன்
ஜன்னலைதிறந்தவுடன்...
வெளிச்சமாக
அப்பிக்கொள்கிறாய் என்னை
உன்மேல்கொண்ட 

நேசத்தை 
முத்தங்களாக
வெளிப்படுத்துகிறேன்
விரோதிபோல்

வெடித்துகிளம்பும்
 

ஒர்பிரளயத்தில்
 

அக்னி துண்டாகவந்து
 

முத்தங்களை பரிசாகதந்து
 

குளிர்ந்து ...
 

ஓர் கிரகமானாய் நீ
பரந்துகிடக்கும் அனாதரவான
மணல்வெளீயில்
உருண்டுஎழு
மீண்டும் விழு
உஸ்ணத்தை உள்வாங்கு...
பனியை பருகு
தப்பிவரும்
தேள்கொடுக்கின்
ருசி அனுபவி
வால்சுட்டிவரும்
பாம்பின்
விசம் நுகர்
எல்லாம்
அந்தநீருக்காகதானே
அதைவழங்கத்தான்
நான் அங்கே
சுற்றிகொண்டிருக்கின்றேனே
மேகமாக உன்னைச்சுற்றி

அத்தனைபாரத்தையும்
 

இறக்கிவைத்துவிட்டாய்
 

என்மேல்
 

ஒரெவார்தையில் என் மீது
 

நான்தான் ...
 

பாரம்தாங்காமல்
 

திணறுகிறேன்
 

புலம்பியபடி
நினையா பொழுதில்
நனைந்தவள்...
நினைத்து நினைத்தே
கரைந்தவள்
புலராபொழுதில் ...
பூத்தவள்
புன்னகைபுரிந்தே
சாய்த்தவள்
கலையாமல் என்னை
கலைத்தவள்
என்னை தினம் கொன்றே
பிழைத்தவள்.........

நீதானடி
அண்டபெருவெளியில்
 

 அடையாளமற்றுப்போனேன்
 

கண்டங்களைக்கடக்கும்
 

காற்றாகிபோனேன்
 

உன் சண்டமாருதத்தில் ...
 

சப்தநாடியும் அடங்கினேன்
 

உன்சாகசங்களில்
 

சவமாகிப்போனேன்
வெற்றிடமெங்கும்
 

நிரம்பிக்கொண்டிருக்கிறேன்
 

வேறுதிசைஎங்கும செல்லாமல்
 

கலைந்த உடைகளுக்குள்
 

நுழைந்துகொண்டிருக்கிறேன்...
 

கண்களைதிறக்காமல்
 

வெப்பத்தை
 

விதைத்துக்கொண்டிருக்கிறேன்
 

வேதனைஇல்லாமல்
 

சர்பம்போல் 

ஊறிக்கொண்டிருக்கிறேன்
 

சப்தமில்லாமல்
காற்றிலேதேடிகொண்டிருக்கிறேன்
 

உன்வார்த்தைகளை
 

கண்களுக்கு புலப்படாமலே

 காதுகளால்
 

காதுமடல்செல் 

ஒவ்வொன்றும் கதறுகிறது
 

வார்தைகள் வருடாமலே ...
 

விழிகள் ஆதரவுகூறுகின்றன
 

விழிநீர்தெளித்து



தொடர்வண்டியின்

ஜன்னல்களின்
 

விழுந்து தெரித்தது 

என்முகத்தில்
 

நீகொடுத்த 

பிரியாவிடை

நீர்துளிகளாய் 

அம்மாவின் உழைப்பு
 

பதிவாகியிருக்கிறது
 

காணமல்போன
 

ரேகைகளாய்
அமைதிகுளத்தில் கல்லெறிந்து
 

அதிர்வுஅலைகளை
 

தொடர்ந்து உருவாக்குகிறாய்
 

தெரித்துவழிகிறது விழிஓரத்தில்

வண்ண ஓவியம் எழுந்துபறக்கிறது
 

வாசமுள்ளமலரிலிருந்து
 

அதை நீ பட்டாம்பூச்சிஎன்கிறாய்
 

நான் பறக்கும் ஓவியமென்கிறேன்

ஒற்றைகண்சிமிட்டலில்
 

 ஒருயுகவாழ்க்கைக்கு
 

விடைகொடுத்துசென்றாய்,,,
 

வழியும் கண்ணீரை
 

துடைக்கமுடியாமல் நிற்கிறேன் ...
 

கண்சிமிட்டமறந்து
 

அம்மா உன்னைநினைத்தபடி

நீந்தமனமில்லாமல் மூழ்குகிறேன்
உனது நினைவு கடலில்
அலைகளால் அடித்துச்செல்லப்படுகிறேன்
நீந்தும் ஆரவம் தொலைத்து
ஒவொருமுறையும் தவிர்க்கிறேன் ...
முத்தமிடும் ஆசையை
உனது முகபாவங்களை
நினைத்து கண்கலங்கியபடி
விழுங்குகிறேன் உன் நினைவுகளை
இதயம் வலிக்க விழிகள் கலங்க
விரிசலான தருணங்களை
மனதில் நிறுத்தி
உனக்கானஎனது தேடுதல்களில்
தொய்விருக்கின்றது
உனது நிறமாற்ற்ங்களால்
இருந்தும் தொடர்கிறேன் பேராசையோடு
விழிநீர்வற்றும் வரை


அந்தசிதைக்குமுன்பு
 

அனைவரும் சூழ்ந்துநின்று
 

கண்ணீர்வடித்தனர்
 

சிதை எழுந்து
 

எதுவும் பேசாமல் ...
 

மெளணமாக
 

அவ்விடத்தை விட்டகன்றது
 

எரியத்தொடங்கியது...அக்கினி
நீந்தமனமில்லாமல் மூழ்குகிறேன்
உனது நினைவு கடலில்
அலைகளால் அடித்துச்செல்லப்படுகிறேன்
நீந்தும் ஆரவம் தொலைத்து
ஒவொருமுறையும் தவிர்க்கிறேன் ...
முத்தமிடும் ஆசையை
உனது முகபாவங்களை
நினைத்து கண்கலங்கியபடி
விழுங்குகிறேன் உன் நினைவுகளை
இதயம் வலிக்க விழிகள் கலங்க
விரிசலான தருணங்களை
மனதில் நிறுத்தி
உனக்கானஎனது தேடுதல்களில்
தொய்விருக்கின்றது
உனது நிறமாற்ற்ங்களால்
இருந்தும் தொடர்கிறேன் பேராசையோடு
விழிநீர்வற்றும் வரை
இரங்கல் பாவைவிட
 

கண்ணீர் வரவழைப்பது
 

அவர்கணக்கை அன்ஃப்ரண்ட்
 

 முகனூலில் செய்வது

நீ ஒருமுறை வந்து செல்
 

உனது வாசத்திலே
 

பூத்தமலர்களிடம்
 

கற்றுக்கொள்கிறேன்
 

கவிதையின் படிமானங்களை
உனது மெல்லிய
 

பார்வைஅலைகள்
 

உள்ளே பொங்கும்
 

உணர்வு அதிர்வுகளை
 

காட்டிக்கோடுக்கிறது ...
 

உனது ரத்தநாளங்களில்
 

பொங்கும் வேகத்தின்
 

அளவுகோலாக...

என் கண்களிலிருந்து
 

வழிகின்றன
 

என்னுள் பொங்கும்
 

உன்னினைவுகளின்
 

உன்னதங்கள் ...
 

கண்ணீராய்............
மழையாக முத்தமிடுகிறாய்
 

மேனிஎங்கும்
 

உடலின் ஒவ்வொரு
 

அணுவையும்
 

நனைக்கிறாய் பூரணமாய் ...
 

ஒவ்வொரு திசுவையும்
 

சூடாக்குகிறாய்
 

அணுவைபோலவே
 

தொடர்வினையாய்......
கவர்ந்துசென்றாய் என்னை
 

உன் கூர்நகங்களின் பிடியில்
யார்கண்களுக்கும்
 

புலப்படாததூரத்திற்கு
 

உன்கூரலகால்...
 

என் சதைகளை
 

உண்டுமகிழ்ந்தாய்
 

உன்கோரப்பசிதீர
 

எஞ்சியகபாலத்தை
 

காட்சிப்பொருளாக்கினாய்
 

அதற்குபரிகாரமாய்
 

உன் கபாலம் இங்கே
 

என் கண்ணில் கழுவி
 

காய்கிறது....
"மனமாகவே நீ இருக்கிறாய்
மணமானதுபோலிருக்கிறாய்
"மாயமாகமறைந்து விடுகிறாய்
மனதினை கலங்கவைக்கிறாய்
.கண்களுக்கும்தெரியாமலே ...
காதல்செய்கிறாய்
காற்றைபோல் பிடிபடமறுக்கிறாய்
" வானமாக நீ இருந்திருந்தால்
வந்து உன்னில் பறந்திருப்பேன்
கைக்குநீ எட்டி இருந்தால்
காதல் முத்தம் பொழிந்திருப்பேன்
வான்மழையால் வந்திருந்தால்
நனைந்தூன்னை தழுவியிருப்பேன்
கடற்கரையாய் நீஇருந்தால்
படுத்துநானும் உருண்டிருப்பேன்
கடலாக இருந்திருந்தால் முழ்கியே
இறந்திருப்பேன்......


விழித்துவரவேற்கிறேன்
 

நேற்றய இரவை
 

விழிகளைமூடிதேடுகிறேன்
 

உன்னுடனான கனவை 

தொலைத்துகொண்டிருக்கிறேன்
 

என் நினைவை...
 

உனக்காகவே 

உயிர்த்திருக்கிறது
 

என் உயிர்பறவை
உன் வார்த்தை கப்பலில் பயணம்செய்த
 

நஞ்சுதோய்த்தபாணங்கள்
 

வந்தவழியெல்லாம் கருக்கியது
 

சற்றுபொறு அடுத்ததை தொடுக்குமுன்
 

சற்று துளிர்க்கட்டும்கருகியவை

உதிர்ந்துகிடக்கின்றன இதழ்கள்
 

உன் அன்புவந்தவழியெல்லாம்
 

தேனீக்கள் மொய்த்தபடி
 

 மிதித்துவிடாதே கால்தவறி

மரணத்தின் நிழலில்
வாழ்க்கை நகர்கிறது
அட்டைகளுக்கு இடையில்
புரட்டப்படும் பக்கங்களாய்
வாசிக்கநேரமில்லாமல்...
பிரிதல்பேச்சுகொடுக்கும்
நேரத்தை புரிதலுக்கு
கொடுக்காமலே.....
விரல்களின் வருடல்கள்
வார்த்தைகள்தொடாமலே
பக்கங்களைமட்டும் நகர்த்தியபடி
கண்ணீர்பக்கங்கள்கூட


ஈரமின்றி நகர்த்தபடுகின்றன
மகிழ்வின் நேரங்களும்
முகபாவமாற்றங்கள்
இல்லாமலே...
முகம் மூடிக்கதறவைக்கும்
மூர்கதனங்கள் முனறிவிப்பின்றி
முன்னேறிசெல்வதும்
ரணம்காயாதபோதும்
பிறாண்டல்களாய்
கடைசிப்பக்கத்தை
தொட்டு அட்டைகடக்கும்
ஆதங்கம் ஏதுமில்லாமல்
கிழிகிறது புத்தகம்.......
சின்னசிரிப்புக்குள்
 

பூத்துகிடக்கின்றன
 

எண்ணற்றவண்ணபூக்கள்
 

மலர்ந்து மனம் வீசியபடி..
.

வாடமலே



இறுக்கியகரங்களுக்குள்
 

தங்கிகொண்டது
 

உன் பிரியங்கள்
 

வெளிவர விருப்பமில்லாமலே

தன்னிச்சையான குழல்கோதுதல் கூட
 

அந்நியமாகப்படுகிறது
 

உன் முகபாவங்களால்
 


பிரியும்தருணங்களில்

தனிமை இருளில்
தகித்து உருகுகின்றது
தனல் உடல் மெழுகாகி
ஆறாகிவிழிகிறது
காய்ந்தவிழிநீர்...
காற்றாகிகலைகிறது
நீரில்நீர் கரைவதுபோல்
ஒவ்வொருஅணுவும்


தகிக்கிறதுவியர்வை
வழிந்தும் அனலாய்
மின்னலாய் வந்துபோகும்
உன்கள்ளசிரிப்பு
பற்றவைத்துசெல்கிறது
தீ பந்தாக உடலெங்கும்
பாலையாகபிளந்து
கிடக்கும் இதழ்கள்
வெடித்துகுருதி
கொப்பளிக்கிறது
அலையானகூந்தல்
முட்புதராய்சிக்கிகிடக்கின்றது
மனம்மட்டும் மறுகிக்கிடக்கின்றது
உன்னைசுற்றும் காற்றாய்
உள்ளேபுதைந்து
கொண்டிருக்கிறது
நினைவுகள் ஆழியில்நீர்குமிழாய்
சுழன்று
உள்வாங்குகிறது...
மனச்சிந்தனைகள்

மென் தென்றலாய் வருடும்
உனதுபுன்னகை


நீந்தும்மச்சங்களாய்

ஒற்றைக்குயிலின்
சோககீதம் சுற்றிசுழல்கிறது
தனித்துஎதிரொலியாய்

பொங்கிபிரவாகமாய்
நகரும்வெள்ளமாக
எதையும்சட்டைசெய்யாமல்

உருளுகிறது எதிர்காலம்
என்றேனும் சங்கமிக்கும்
தீராக்காதலுடன்....

உன்னில்கரைந்து
நீயாகவேமாறிவிடும்
பேராசையுடன்......
பேதமைபெண்ணென்றுசொல்லி
புறமுதுகில்குத்தும்
பெண்பித்தரெல்லாம்
இரவுகவிழ்ந்தபின்
காலைநாவால் கழுவி...
கவிழ்ந்து பிறந்தபாக்கியம்
தேடும் அய்ந்தறிவு அயோக்கித்தனம்
அகம்முழுதுமப்பிகிடக்க
விடியலில்பின்வழிவெளியேறும்
முக்காடுமுகத்தினர்

வெளிச்சம்வரவர சுயரூபம்
மறைத்துசொடுக்கும்
சவுக்காகாநாமாறும்
நபும்சகர்கள்நயவஞ்சக
முகமுடிஅணியும் தீர்ப்புவாதிகள்
கொன்றுபுதைத்துபின்
கொடியேற்றிக்கொண்டாடும்
கொடுமைபக்தியாளர்கள்
நாவால்கால்கழுவவேண்டாம்
காலில் குங்குமமிட்டு
கும்பிடவேண்டாம்
ஒதுங்கிவழிவிட்டால்
தெரிகிறதுஒராயிரம் வழிகள்.........