Saturday, 10 October 2015





ஐயா ஒங்களைக்கும்பிடுறேன்
என்னப்போலநீங்க
ஆகவேணாம் 
நான் தப்புப்பண்ணிட்டேன்
அதுக்குத்தான்
தண்டனை அனுபவிக்கிறேன்
என்னதப்புபண்ணேனு கேக்குறீங்களா
எல்லாதாய்மார்களும்செய்யுற
தப்புதான் மகன்மேல 
அளவுக்கதிகமாஅன்புவைக்கிறதுதான்
அதுனாலதான்அனாதைஇல்லத்துல
அவஸ்த்தைப்படுறேன்
என் சக்திக்குமீறிகஸ்டப்பட்டு
படிக்கவைத்தேன் உயர் படிப்பு
அவன் படிப்புக்கு ஏத்தமாதிரி
பொண்ணுபாத்தான் ஏத்துக்கிட்டேன்
அனா எனக்கு ஏத்தமாதிரி
பாக்கமப்போய்ட்டேன்
அதுதான் நான் செஞ்சதப்பு
கொஞ்சம்கூட சுயநலம் பாக்காம
இருந்துட்டேன்
அதுநாலதான் இங்க இருக்கேன்
நிறய்ப்பேருஇங்க
அப்ப்டித்தான் இருக்காங்க
எல்லாருக்கும் இது பாடம்.....
இப்போபுரிஞ்சு என்னெபண்ண.......
அதுதான் ஒங்களுக்குச்சொல்றேன்
பாத்துநடந்துக்கங்க......

No comments:

Post a Comment