Saturday, 10 October 2015

வாழ்க்கையே 
பிளாட்பாரத்துலதான்
உறக்கம் சமயல்
சாப்பாடு எல்லாம்
குளிக்க குடித்தனம்நடத்த
எல்லாமே வெட்டவெளிதான்
மழைபேஞ்சாதான்
செரமம்தண்ணி
எல்லாத்தையும் 
இழுத்துட்டுப்போய்டும்
சமயத்துலரோடுபோட
வந்திருவாங்க அப்போ
எங்கபாடுதிண்டாட்டமாகிவிடும்
முதல்ல எங்களத்தான்
விரட்டுவாங்க..சட்டிமுட்டி
தூக்கிட்டு ஓடனும்
ஊரைவிட்டுபொழைக்கவந்து
நாய்பொழப்பு பொழைக்கிறோம்
ஊர்லவிவசாயம் 
போச்சுநாட்டோரமா
காஞ்சுபோச்சு இங்க
நாங்களும் காஞ்சுகெடக்கோம்
ரோட்டோரமா.....

No comments:

Post a Comment