என்னெப்பெத்த ஆத்தா
என்னபாடுபட்ட என்ன
வளக்குறதுக்கு
வெறும் டீயக்குடிச்சே
நாள்பூராம் கெடப்பியே
இப்போ எல்லாமே
இங்கஇருக்குதேஆத்தா
நீ பக்கத்தில இல்லயே
நான் இங்கே நீ அங்க
எப்போவும் ஏமகன் ஏமகனு
பொலம்பிக்கிட்டு என்னப்
பாக்கத்துடிச்சிக்கிட்டு
வெளியசொல்லமுடியாம
மனசுக்குள்ளயே அழுகுறீயே
என்ன சண்ட நமக்குள்ள
தூக்கிப்போடு ஆத்தா
பட்டீணியா இருந்தப்ப
இருந்தபாசம்பணம் கொஞ்சம்
வந்தவன்னபோயிடுமா
பணம் வரும் போகும்
பாசம் போனா வருமா ஆத்தா....
தனியா ஒக்காந்து
அழுகவைச்சிட்டயே
ஆத்தா,,,ஒன்ன பாக்கனுமே ஒடனே.
உன் மடியில் படுத்து
மனம் விட்டுஅழுகனும்.
உன் ஒருசொட்டு கண்ணீர்
என்மீதுபட்டு நான்
மீண்டும்மகனாகனும்....
என்னபாடுபட்ட என்ன
வளக்குறதுக்கு
வெறும் டீயக்குடிச்சே
நாள்பூராம் கெடப்பியே
இப்போ எல்லாமே
இங்கஇருக்குதேஆத்தா
நீ பக்கத்தில இல்லயே
நான் இங்கே நீ அங்க
எப்போவும் ஏமகன் ஏமகனு
பொலம்பிக்கிட்டு என்னப்
பாக்கத்துடிச்சிக்கிட்டு
வெளியசொல்லமுடியாம
மனசுக்குள்ளயே அழுகுறீயே
என்ன சண்ட நமக்குள்ள
தூக்கிப்போடு ஆத்தா
பட்டீணியா இருந்தப்ப
இருந்தபாசம்பணம் கொஞ்சம்
வந்தவன்னபோயிடுமா
பணம் வரும் போகும்
பாசம் போனா வருமா ஆத்தா....
தனியா ஒக்காந்து
அழுகவைச்சிட்டயே
ஆத்தா,,,ஒன்ன பாக்கனுமே ஒடனே.
உன் மடியில் படுத்து
மனம் விட்டுஅழுகனும்.
உன் ஒருசொட்டு கண்ணீர்
என்மீதுபட்டு நான்
மீண்டும்மகனாகனும்....
No comments:
Post a Comment