கசக்கிஎறியப்பட்ட
நனைந்தகாகிதமாக
மனது நொறுங்கிக்கிடக்கிறது
அடுத்தடுத்த சோதனைகளால்
பிரித்து நேராக்கி வாழ்க்கையை
எழுதும் சாத்தியங்களைப்
புறம்தள்ளி வெறுத்துப்போய்
ஆறுதலும் ஆதரவும்
அளிக்கும் கரங்கள் கூட
அலட்சியப்படுத்தும்
வேளைகளில்.......
என்றாலும் வாழ்க்கைப்படகு
தன் சுக்கானை சரியாகவே
பிடித்திருக்கிறது
இயங்குவிசைக்குஎற்றபடியே
என்றாலும் எங்கிருந்தோ
கேட்கும் ஒரு ஆறுதல்சொல்
ஆறுதல்நீட்டும் கரம்
விழிகளைத்துடைக்கிறது
என்ற ஆறுதலே
அடுத்தடுதடுத்த
நாட்களைத்தொடங்கும்
சக்தியைத்தருகின்றது
அன்பான மழலயின்
அம்மா என்ற அன்புக்குரல்
அது மகவான தோழமை
அதுதான் என் எதிர்காலம்
நாளைய ஒளியின் துவக்கம்............
நனைந்தகாகிதமாக
மனது நொறுங்கிக்கிடக்கிறது
அடுத்தடுத்த சோதனைகளால்
பிரித்து நேராக்கி வாழ்க்கையை
எழுதும் சாத்தியங்களைப்
புறம்தள்ளி வெறுத்துப்போய்
ஆறுதலும் ஆதரவும்
அளிக்கும் கரங்கள் கூட
அலட்சியப்படுத்தும்
வேளைகளில்.......
என்றாலும் வாழ்க்கைப்படகு
தன் சுக்கானை சரியாகவே
பிடித்திருக்கிறது
இயங்குவிசைக்குஎற்றபடியே
என்றாலும் எங்கிருந்தோ
கேட்கும் ஒரு ஆறுதல்சொல்
ஆறுதல்நீட்டும் கரம்
விழிகளைத்துடைக்கிறது
என்ற ஆறுதலே
அடுத்தடுதடுத்த
நாட்களைத்தொடங்கும்
சக்தியைத்தருகின்றது
அன்பான மழலயின்
அம்மா என்ற அன்புக்குரல்
அது மகவான தோழமை
அதுதான் என் எதிர்காலம்
நாளைய ஒளியின் துவக்கம்............
No comments:
Post a Comment