துடைக்கும்
விரல்களிருந்தால்
துன்பமும் சுகமே
ஆறுதல்சொல்ல
ஆளிருந்தால்
அழுகையும்
ஆனந்தமே
சாயத்தோளிருந்தால்
சோகமும் சுகமே
எல்லோருக்கும்
துடைக்கும் விரல்கள்
கிடைப்பதில்லை..
கிடைத்தாலும்
நிலைப்பதில்லை
அதனால்தான்
விழிகள் வழிவதை
நிறுத்தமுடிவதில்லை
விழிகள் வழிவதாலே
மனபாரம் குறைகிறது
விம்மிஅழுவதாலே
இதயம் தொடந்துஇயங்குகிறது
No comments:
Post a Comment