Saturday, 10 October 2015






இலைகள் மறைப்பதால்
இல்லையென்றாய்விடுமா
இருக்கும் நிலவொளி
பகலில் மறைவதால்
பார்ப்பதில்லையென்றாகிவிடுமா
மேகம் மறைப்பதால்ஒளி
தாக்கம் குறந்து விடுமா
இலைகளைப்
பழிப்பதற்குப்பதிலாக
ஒளியைப்பழிக்கிறாய்
பகலைப்பழிப்பதற்குப்பதிலாக
பாவம் நிலவைப்பழிக்கிறாய்
விழிகளை மூடிக்கொள்வதால்
வெறுத்துவிடமுடியுமா
மறுபக்கம் திரும்பிக்கொள்வதால்
மறப்பதாக அர்த்தமா
பேச்சில் பெயர்வாராததால்
பெருஞ்சினமா
மூச்சை முகர்ந்துபார்
முப்பொழுதும் உன் பெயர்தான் .......

No comments:

Post a Comment