வைத்தபொருள்
வைத்த இடத்தில் இல்லை
என்னுடைமை என
வைத்திருந்த பல
தன்னுடமையாக்கிகொண்டான்
நான் சமைக்கும் உணவை
நா ருசித்து உண்கிறான்
என் கைப்பக்குவம்
விரும்பிஉண்கிறான்
என்னைஅன்னையாக்கிய
அழகு மகன்
என்னை எனக்கு உணரச்செய்த
அன்புசெல்வன்...
அழுக்குத்துணிகளைக்கூட
அன்னைதுவைத்தால்
அதில் ஒரு அழகு என்பான்
அம்மா நீ தான் அழகு என்பான்
எனக்காக தான் கற்ற வித்தைகளை
எனக்கு காண்பித்து
அதிசயக்கசெய்வான்
தான் கற்ற மிருதங்க இசை
எனக்காக வாசித்து
மகிழவைப்பான் மகிழ்வான்....
இழந்த எல்லாவற்றின்
வடிவமாக செல்லமே
உன்னைக்கண்டு மகிழ்கிறேன்
நீ என் மகனல்ல
என் தந்தையடா செல்லம்....
வைத்த இடத்தில் இல்லை
என்னுடைமை என
வைத்திருந்த பல
தன்னுடமையாக்கிகொண்டான்
நான் சமைக்கும் உணவை
நா ருசித்து உண்கிறான்
என் கைப்பக்குவம்
விரும்பிஉண்கிறான்
என்னைஅன்னையாக்கிய
அழகு மகன்
என்னை எனக்கு உணரச்செய்த
அன்புசெல்வன்...
அழுக்குத்துணிகளைக்கூட
அன்னைதுவைத்தால்
அதில் ஒரு அழகு என்பான்
அம்மா நீ தான் அழகு என்பான்
எனக்காக தான் கற்ற வித்தைகளை
எனக்கு காண்பித்து
அதிசயக்கசெய்வான்
தான் கற்ற மிருதங்க இசை
எனக்காக வாசித்து
மகிழவைப்பான் மகிழ்வான்....
இழந்த எல்லாவற்றின்
வடிவமாக செல்லமே
உன்னைக்கண்டு மகிழ்கிறேன்
நீ என் மகனல்ல
என் தந்தையடா செல்லம்....
No comments:
Post a Comment