என்விழிவழியாக
விதைத்துவிட்டாய்
இதயத்தில்
முளைக்கும் வண்ணம்
இதயத்தில் முளைத்து
என்னுயிரை
வளைத்துவிட்டாய்
உதிரத்துளிகளில்
உன் உயிர்கலந்து
உதிரத்தின் நிறத்தை
மாற்றிவிட்டாய்
எனது சிந்தனையில்
உன்நினைவை வைத்து
சிறையெடுத்துவிட்டாய்
எனது கவிதை வரிகளில்
எழுத்துக்களைத்திருடிவிட்டு
உன்முகங்களைப்
பதிவுசெய்தாய்..
என்கனவெல்லாம்
ஆக்கிரமித்தாய்
விழிகளைத்திறக்காமல்
கனவிலே அழுத்திவைத்தாய்
இன்னும் என்னை
என்ன செய்யப்போகிறாய் .......
விதைத்துவிட்டாய்
இதயத்தில்
முளைக்கும் வண்ணம்
இதயத்தில் முளைத்து
என்னுயிரை
வளைத்துவிட்டாய்
உதிரத்துளிகளில்
உன் உயிர்கலந்து
உதிரத்தின் நிறத்தை
மாற்றிவிட்டாய்
எனது சிந்தனையில்
உன்நினைவை வைத்து
சிறையெடுத்துவிட்டாய்
எனது கவிதை வரிகளில்
எழுத்துக்களைத்திருடிவிட்டு
உன்முகங்களைப்
பதிவுசெய்தாய்..
என்கனவெல்லாம்
ஆக்கிரமித்தாய்
விழிகளைத்திறக்காமல்
கனவிலே அழுத்திவைத்தாய்
இன்னும் என்னை
என்ன செய்யப்போகிறாய் .......
கவிதைகளுக்குத் தனியாகத் தலைப்பிடுவது பயன்தரும் என்பது மட்டுமல்ல, அதுவே கவிதையின் அடையாளமுமாகும் என்பதைக் கவனிக்கவேண்டுகிறேன். நிறைய எழுதுகிறீர்கள். வாழ்க! - இராய செல்லப்பா, சென்னை (திருப்போரூர் அருகில் - ஸீ டீ எஸ் சென்னைப்பட்டினம்)
ReplyDeleteவணக்கம்... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு உங்களை வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.கவிதை நன்று .தலைப்பு அவசியம் தேவை..
ReplyDelete