மகபிரசவத்துக்கு உள்ளே
போயிருக்குவலிகூட
வந்துகத்துது
மொதரெண்டும்
பொண்ணாப்போச்சு
இந்தபிரசவத்துல
மகனோடவந்தா
வீட்டுக்குவா இல்லன்னா
வராதன்னு சொன்னாளாம்
மாமியா.....
அதெநெனச்சுதான்
ரொம்ப அழுகுதுமக
அழுகாதடி அந்தமலக்கருப்பு
பாத்துக்கிடும் மகன் தான்
பொறப்பான் மகன் பொறந்தா
கடன்வாங்கியாவது
ரெட்டகெடாவெட்டி
பூஜைபோடுறேன்னு
வேண்டிருக்கேன்
கருப்பு சாமிஎறங்கி
சொல்லிருக்கு ஆம்பளை
பிள்ளகொடுத்துட்டு
பூஜையஏத்துக்கிறேன்னு....
கவலப்படாதம்மா.....னு
ஆறுதல்சொல்லி அனுப்பிட்டு
சாமியத்தான்
கும்பிட்டுகிட்டுருக்கேன்
கருப்புதான் வழிபண்ணனும்
சாமி.......எம்புள்ளயக்காப்பாத்து.....
போயிருக்குவலிகூட
வந்துகத்துது
மொதரெண்டும்
பொண்ணாப்போச்சு
இந்தபிரசவத்துல
மகனோடவந்தா
வீட்டுக்குவா இல்லன்னா
வராதன்னு சொன்னாளாம்
மாமியா.....
அதெநெனச்சுதான்
ரொம்ப அழுகுதுமக
அழுகாதடி அந்தமலக்கருப்பு
பாத்துக்கிடும் மகன் தான்
பொறப்பான் மகன் பொறந்தா
கடன்வாங்கியாவது
ரெட்டகெடாவெட்டி
பூஜைபோடுறேன்னு
வேண்டிருக்கேன்
கருப்பு சாமிஎறங்கி
சொல்லிருக்கு ஆம்பளை
பிள்ளகொடுத்துட்டு
பூஜையஏத்துக்கிறேன்னு....
கவலப்படாதம்மா.....னு
ஆறுதல்சொல்லி அனுப்பிட்டு
சாமியத்தான்
கும்பிட்டுகிட்டுருக்கேன்
கருப்புதான் வழிபண்ணனும்
சாமி.......எம்புள்ளயக்காப்பாத்து.....
No comments:
Post a Comment