உன்னில்நான்
என்னில் நீ
இளம்சாரலில்
குடைதவிர்த்து
என் முந்தானைக்குள்
நீஒண்டி
நடக்க வேண்டும்
உன்னுடன் நெருக்கமாக
தொலைதூர பயணம்
ஜன்னல்சேர்ந்த
இரட்டை
இருக்கையில்
உன் தோள் சாய்ந்தே
சந்தோஷக்காற்று
நம் முகத்தி அறைய
நல்ல இசையாக
என் பேச்சு உன் செவிநிரப்ப
உன்னுடன் இணைந்தே
கனவுகாணவேண்டும்
என்சோகங்கள்
என் விழி நீர்
துடைக்கும் உன் விரலை
நான் முத்தமிடவேண்டும்
என்கூந்தலிலே
வாசமலர்கள்
சூடிக் கொள்வேன்
உன் கைகளினால்
எங்கே நீ இருந்தாலும்
தனித்துப் பேசுவேன்
உன் விழிகளுடன்
வெற்றியைக்
கொண்டாடுவேன்
உன்மெல்லிய அணைப்பிலும்
,உச்சி முத்தத்திலும்
தோல்வியில்
துவளும் போதும்
தேற்ற வேண்டும்
நீ தோள் அனைத்தே
நோயிலும்
உன் அருகிலே தான்
தூங்குவேன்
நீ தலை கோத
உன் அணைப்பின்
இறுக்கத்திலே
உயிர் போகையிலும்
உன் மடியில்
உன் முகம் பார்த்தே,
கரம் பற்றியே
உனக்காக நானும்
என்னக்காக நீயும்
என்னில் நீ
இளம்சாரலில்
குடைதவிர்த்து
என் முந்தானைக்குள்
நீஒண்டி
நடக்க வேண்டும்
உன்னுடன் நெருக்கமாக
தொலைதூர பயணம்
ஜன்னல்சேர்ந்த
இரட்டை
இருக்கையில்
உன் தோள் சாய்ந்தே
சந்தோஷக்காற்று
நம் முகத்தி அறைய
நல்ல இசையாக
என் பேச்சு உன் செவிநிரப்ப
உன்னுடன் இணைந்தே
கனவுகாணவேண்டும்
என்சோகங்கள்
என் விழி நீர்
துடைக்கும் உன் விரலை
நான் முத்தமிடவேண்டும்
என்கூந்தலிலே
வாசமலர்கள்
சூடிக் கொள்வேன்
உன் கைகளினால்
எங்கே நீ இருந்தாலும்
தனித்துப் பேசுவேன்
உன் விழிகளுடன்
வெற்றியைக்
கொண்டாடுவேன்
உன்மெல்லிய அணைப்பிலும்
,உச்சி முத்தத்திலும்
தோல்வியில்
துவளும் போதும்
தேற்ற வேண்டும்
நீ தோள் அனைத்தே
நோயிலும்
உன் அருகிலே தான்
தூங்குவேன்
நீ தலை கோத
உன் அணைப்பின்
இறுக்கத்திலே
உயிர் போகையிலும்
உன் மடியில்
உன் முகம் பார்த்தே,
கரம் பற்றியே
உனக்காக நானும்
என்னக்காக நீயும்
No comments:
Post a Comment