Tuesday, 28 July 2015

சந்தேகமேகங்கள் என்
மனக்கதவை 
தட்டும்வேளைகளில்
தடுமாற்றம் 
என் விழிகளை 
மறைக்கின்றது
மனம்சோர்ந்து 
விழிகள்நீரைபொழிய
முடங்குகிறேன்
இருள் மூலைகளில்
அப்போதும் உன்
வெளிச்சதேற்றல்
பிரபஞ்சஒளியாய்
என்னை அணைக்கிறது
உன்சின்னசின்ன
ஒளி வார்த்தைகள்
முத்தமிட்டு
என் இருள் விரட்டுகிறது
விழிகளைத்துடைக்கிறது
இதயத்தின் இயக்கத்தை
இனிமையாக்குகிறது
இருக அணைத்து
என்னைதேற்றி
இன்னுயிர்காக்கிறது.....
நீதானடா என் வாழ்க்கை........

No comments:

Post a Comment