Tuesday 28 July 2015

தொலந்து போனது
வயதும் வாலிபமும்
நழுவிசென்றன சொந்தங்களும்
பந்தங்களும்
சொல்லாமல் சென்றது
சேர்த்துவைத்த செல்வமும்
ஆரோக்கியமும்
நழுவுகின்றன நட்புவட்டம்
நமன் அழைப்பால்
எஞ்சியிருப்பது
இழந்த அத்தனை
செல்வங்களின்
மொத்தவடிவாய் என்னை
என் அத்தனை 
அழிச்சாட்டியங்களையும்
சகித்துக்கொண்ட
என்னுயிர் 
என்னுடன் நிழலாகவே
இன்றும்
என்றும்
இறுதிவரையும்.........

No comments:

Post a Comment