Tuesday 28 July 2015




அன்புள்ள மகனுக்கு
இதை பக்கத்துவீட்டு
பையனைவைத்துத்தான்
எழுதுகிறேன்....வழக்கம்போல
நான் படிக்காததால்
நீ எப்படியாவது 
படிக்கவேண்டும்என்ற
ஆசையால் 
பொறியியல்கல்லூரியில்
சேர்த்துபடிக்கவைத்தேன்
உன்னுடையதேவைகள் 
பலவற்றை என்னிடம்
சொல்லாமலே சமாளிப்பதை
நான் அறிவேன் 
என் கஸ்டம்
உனக்குப்புரிந்ததால்
இந்தமுறைகூட நிலத்தின்
ஒருபகுதியைவிற்று
அந்தப்பணத்தைத்தான்
அனுப்பியிருக்கிறேன்
வயல்தான் விளையவில்லை
நீயாவது பட்டாதாரியாக
விளைந்து வருவாய் என்று
விளையாமல் சாவியாய்
வந்துவிடாதே 
சாகுபடிதான் செய்கிறோம்
சாகும் படி செய்துவிடாதே
கவனம் மகனே,,,,,,,,,,,

1 comment:

  1. உருக்கமான -அனைவருக்கும் உறைக்கும்படியான- பயனுள்ள கவிதை. பெற்றோரின் சுமையைக் குறைப்பதே பிள்ளைகளின் நோக்கமாக இருக்கவேண்டும் - குறைந்தபட்சம் திருமண செய்துகொள்ளும் வரையாவது! - இராய செல்லப்பா சென்னை 9600141229

    ReplyDelete