Tuesday 28 July 2015

முண்டாசு கட்ட ஓர் முயற்சி
----------------------------------------------
மண்பயனுறவேண்டும் என்ற மகாகவி வரிகளைத்தொடர்ந்து முண்டாசு கட்டிப்பார்க்கமுயலுகிறேன்,,,,
---------------------------------------------------------------
மண்பயனுறவேண்டும் 
<<<<<<<<<<<<<<<<<<<<<
வானம் சூலுறவேண்டும்
மேகம் கருவுறவேண்டும்
நனைந்துதேங்கும் ஓர் நதியாக
மழைபெய்திடல் வேண்டும்
வாய்க்கால் நிரம்பிடவேண்டும்
வயல்கள் வளம்பெறவேண்டும்
நெற்கதிர்கள் குவிந்து 
உழவன் சிரித்திடவேண்டும்
கானமுயர்ந்திடவேண்டும்
நல் கவிதைபிறந்திடவேண்டும்
பாரில் உள்ளோருக்கெல்லாம்
பண்பு பெருகிடவேண்டும்
கல்வி உயர்ந்திடவேண்டும்
கலைகள் செழித்திடவேண்டும்
காலந்தோரும் அவை
மக்களைச்சேர்ந்திடவேண்டும்
விஞ்ஞானம்வளர்ந்திடவேண்டும்
அது வீட்டுக்குள் வரவேண்டும்
மெய்ஞானம் வளர்ந்திடவேண்டும்
அது மெய்யானதாகவேண்டும்
பெண்டிர்கற்றிடவேண்டும்
அவர்தம் பேதமை அகன்றிடவேண்டும்
உண்டிக்கு அலையும் நிலைமாறி
அவர் உயர்நிலை எய்திடவேண்டும்
நல்தொழில்கள் வளர்ந்திடவேண்டும்
அதன்பயன் நம்மைச்சேரவேண்டும்
அந்நியக்கொள்ளைகள்
அகற்றும் நிலை வரவேண்டும்
முதுமைபோற்றல்வேண்டும்
மூன்றுதலைமுறை காணவேண்டும்
முதியோரில்லங்கள் எல்லாம்
மூடுவிழாகாணவேண்டும்
கனிகள்பழுத்திடவேண்டும் அவை
தானாக சுவைத்திடவேண்டும்
கல் வைத்து பழுக்கவைப்போரின்
கரங்கள் உடைத்திடவேண்டும்
உணவு உற்பத்திவேண்டும் அதில்
உரம் இயற்கையாய் வேண்டும்
பூச்சி மருந்துகளைன் பயன்பாடு
புதைக்கப்படவேண்டும்..
புத்தகம்பேணுதல் வேண்டும்
புதுமைஅதில் வளரவேண்டும்
நற்றமிழ்கவிதைகள் நாளும்
நன்கு பதிப்பித்தல்வேண்டும்
காசுக்கூடங்களில்லாத
கல்விக்கூடங்கள் வேண்டும்
ஏழை எளியவர்கூட அங்கு
வாசித்திட வகைசெய்யவேண்டும்
கடைகள்திறந்திடவேண்டும்அதில்
கலப்படம்தவிர்த்திடவேண்டும்
நடைபாதைக்கடைகள்
நலமும் காத்திடவேண்டும்
மின் உற்பத்திவேண்டும்
மீன் பிடித்தலும் வளரவேண்டும்
தேன் உற்பத்தியும் நமக்குநன்கு
தெரிந்து வளர்த்திடவேண்டும்
மாசுக்கட்டுப்பாடுவேண்டும்இந்த
மண்காக்கப்படவேண்டும்
பேசுமிடமெல்லாம் புகை 
வாசம் தடைசெய்யவேண்டும்
மழைலைத்தொழில்மாய்தல்வேண்டும்
மாதர் வன்புணர்வுக்கொடுமைகள்
மறைந்திட ஓர் வழிசெய்யவேண்டும் நம்
மண்மானம் காக்கவேண்டும்
மீசைமுறுக்கிடவேண்டும் ஓர்
முண்டாசு கட்டிடவேண்டும்
பாரதியின் கனவெல்லாம்
நவீனப்படுத்துதலும் வேண்டும்....

No comments:

Post a Comment