Tuesday 5 February 2013


1)மாதா வைஷணவதேவி மலைக்குகைகோவில் பயணம். அடிக்கடி நான் ஹரித்வார்-ரிஸிகேஸ் யாத்திரை போவது வழ்க்கம். சென்றமுறை போனபோது தான் எனக்கு வைஷணவதேவி செல்லும் ஆசை வந்தது. ஹரித்வாரில் இருந்து -ரிஸிகேஸ் செல்லும் வழியில் பல ஆசிரமங்கள் உள்ளன. அதில் ஒன்றில் செயற்க்கையாக மாதா வைஷணவதேவி மலைக்குகைகோவில் ஆலயம் அமைதிருந்தார்கள். செயற்கையே இவ்வளவு அழகாக உள்ளதே இயற்கை எப்படி இருக்கும் என் யோசித்ததுதான் அங்கே பயணம் மேற்கொள்ள காரண்மாக இருந்தது.
காஸ்மீர் பயணம் சென்று திரும்பும் வழியில் ஜம்மு அருகே இருக்கும் மாதா வைஷணவதேவி மலைக்குகைகோவில் செல்ல நான் திட்டமிட்டேன் விமானம் மூலம் ஜம்முவை அடைந்தோம் நானும் என் மனைவியும் மகனும். அங்கிருந்து பீரீ பெய்டு டாக்சி 1300ரூபாய்க்கு பேசினோம். ஒரு சர்தார்ஜி தான் எங்கள் ஓட்டுனர். அவர் பயணம் பற்றிய தகவல்களைக் கூறிகொண்டே வந்தார். ஜம்முவிலிருந்து 52கிமீ தூரம் உள்ளது காட்ரா என்ற சிறு நகரம் ,அங்கிருந்துதான் தொடங்குகிறது தேவியின் மலைக்குகைபயணம்( 14+14 )28கிமீ மலைமேல் பயணம்  மேலே சென்றடைய 7மணிநேரம் கீழே இறங்க 6மணி நேரம் மொத்தம் 13மணீநேரம் நடக்க வேண்டும் அதுவும் மலைமேலே.. கடுங்குளிர் வேறு தலை சுற்றியது எனக்கல்ல என் துணைவியாருக்கும் மகனுக்கும் பேசாம கீழெ இருந்தே ஒரு கும்பிடு போட்டுட்டு போய்விடலாம் என்று தோன்றியது .....அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது

நாங்கள் நின்றுகொண்டிருந்த இடம் பயணத்தொடக்கத்தின் நுழைவுவாயில். மேலே போகலாமா வேண்டாமா எண்று யோசித்தவேளையில் எங்களை நோக்கி ஒர் அம்மையார் தன் பேரக்குழந்தையுடன் வந்துகொண்டிருந்தார். எங்களருகே நுழைவுவாயிலில்  கோவில் ஒன்று இருந்தது. அதன் அருகே வந்தவுடன் எங்களைப்பார்த்து என்ன மேலே போகலாமா வேணாமான்னு தயக்கமா?.நானே போய்வந்துட்டேன்,,அதுவும் இந்தகுழந்தையுடன்...உங்களுக்கு என்ன தயக்கம், அன்னை பார்த்துகோள்வார் உங்களை நம்பிக்கையுடன் கிளம்புங்கள்..பின்னால் கொஞ்சம் பாருங்கள் 
என்று சொல்லிவிட்டு இந்தாருங்கள் அன்னையின் பிரசாதம் என்று இனிப்பைவழங்கிச்சென்றார்,

பின்னால் பார்த்தால் ஒரு 30வயதுமதிக்கத்தக்க ஆண் கால்கள் இயங்காத தன் மனைவியை முதுகில் தூக்கிக்கொண்டு தரிசனம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்தார்....எனக்கு உடலெல்லாம் புல்லரித்தது..என்ன அன்பு இது.இந்தைரண்டுகாட்சிகளுமே எனக்கு அன்பின் தரிசனமாகத்தெரிந்தது
அன்னையே எங்களை தயக்கமின்றி மேலேவாருங்கள் என்று அழைப்பதுபோல இருந்தது.நாங்கள் மேலே செல்வது என்று முடிவெடுத்து அனுமதி சீட்டு வாங்கினோம்,இலவசம்தான், இந்தசீட்டு இருந்தால் தான் மேலே தரிசனம். இதுரொம்ப முக்கியம்.கவனத்தில்வைத்துக்கொள்ளுங்கள்.

நாஙகள் தொடங்கும்போது மாலை 4மணி. மேலே சென்று அடைய இரவு 12மணி ஆகலாம் என்றார் உடன் நடந்தவர்.
இங்கே உங்களுக்கு ஓர் தகவல் மேலே நடந்தும்போகலாம், குதிரையில் ஏறிச்செல்லும் வசதி உள்ளது. டோலி என்று மனிதர்கள் தூக்கிச்செல்லும்வசதியும் உள்ளது.ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. நாங்கள் நடந்து செல்வது என்று முடிவெடுத்தோம். ஏன் என்றால் அது ஓர் அற்புத அனுபவம். நம்மை நாமே சுயபரிசோதனை செய்யும் வசதி, இந்தபயணம் எனக்குப்பிடித்தகாரணம் தரிசனம் கிடைதால் சொர்கம் உண்டு என்பதைத்தாண்டி தரிசனமே சொர்கம், அதுவும் பெண்களுக்கும் என்ற விசயமே என்னைக்கவர்ந்தது, பலமலை யாத்திரைகளில் பெண்கள் பங்கேற்கமுடியாதநிலை உள்ளது.இரண்டு மணி நேரம் நடந்தவுடன் இருளத்தொடங்கியது..எங்களை பயம் கவ்வியது ,கீழே காட்ரா நகரம் ஜொலித்தது விளக்குகளால்.தொலைவில் ஜம்மு நகரம் மின்னியது விளக்கொளியில் இருண்ட தமிழகம் என் நினைவுக்கு வந்தது,,சுற்றி மலைவண்டுகள் சுவர்கோழிகள் சப்தம் பயமுறுத்தியது .........


தென் இந்தியாவில் ரத்னாகரன் என்ற தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது அவர்கள் விஸ்ணுவைனோக்கி தவம் இருந்தனர். மாகாவிஸ்னுவும் அவர்களின் கனவில் தோன்றி குழ்ந்தை வரத்தை அளித்தார் ஆனால் சில நிபந்தனைகளையும் விதித்தார்.பெண்குழந்தை ஒன்று உங்களுக்கு மகாலக்ஷ்மியின் அவதாரமாகபிறக்கும், அந்தகுழந்தைக்கு திரிகூடம் என்று பெயர்வைத்து வளர்த்து வாருங்கள்.அவளின் விருப்பம்போலவே அவளை வளருங்கள், நான் ராம அவதாரம் எடுத்து அங்கே வரும்வேளையில் அவள் என்னை அடயாளம் கண்டுகொள்வாள், அதன் பின் அவளின் வாழ்க்கை மாறும்.அவள் தவமிருந்து என்னை அடைவாள்.என்று கூறினார். 
அதன் படியே அவர்களுக்கு பெண்குழந்தை பிறந்தது .மகாலக்ஷ்மியின் வடிவம் அல்லவா அதனால் பேரழகுடன் இருந்தாள்.அற்புதமான ஞானதுடன் இருந்த அந்தகுழ்ந்தை அனைவரையயும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.பல்பேர் அவளை திருமணம் முடிக்க விரும்பினர் ஆனால் அவள் அதில் விருப்பமில்லாமல் இருந்தாள். அப்போது ராமாவதாரம் எடுத்த திருமால் சீதையைத்தேடி அங்கே வருகிறார்.அவரை அந்த கோலத்தில் அடையாளம் கண்ட திரிகூடம் அவரையே மணம்முடிக்கவிரும்புவதாக்ச்சொல்கிறாள். ஆனால் ராமனோ இந்தப்பிறவியில் சீதையைத்தவிர வேற்யாரையும் மணமுடிக்க இயலாது, எனினும் நீ சென்று திரிகூடமலையில் சக்திமிக்க குகை ஒன்றுள்ளது அங்கே சென்று நீ தவமிருந்து உன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பாவங்களை போக்கி அருள்பாலிப்பாயாக உனக்கு துணையாக வில் அம்பு மற்றும் வானரங்கள் சிங்கம் ஆகியவற்றை தருகிறேன். கலியுகத்தில் கல்கிஅவதாரம் எடுத்து வருபோது உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று அருள் பாலித்தார். அவரே அன்னைக்கு வைஸ்ணவதேவி என்றும் பெயரிட்டார், அன்னை வடஇந்தியாவில் உள்ளமாணிக்க மலையில் சென்று அந்த சக்திவாய்ந்தராமகுகையை அடைந்து தவமிருந்து பல்சக்திகளை பெற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கத்தொடங்கினாள்.  
அன்னையின் அழகில் மயங்கி பைரவ் நாத் என்ற தாந்த்ரீகன் அன்ன இருக்குமிடம் தேடித்திரிந்தான். ஒரு வழியாக அதை தன் ம்ந்திரசக்தியால் கண்டுபிடித்து குகையை நெருங்கினான். ஆனால் குகை ராமன் அனுப்பிய வானரங்களும் சிங்கமும் காவல் இருந்ததன..அவனால் அன்னையை நெருங்க முடியவில்லை. இருப்பினும் தன்னிடையமந்திர சக்திகளால் அவற்றை கட்டிபோட்டுவிட்டு சக்தி குகையை நெருங்கினான். தனது சக்தியால் அதை உணர்ந்த அன்னை அவனை எச்சரித்தாள். அவனோ காமமயக்கதில் அதைப்பொருட்படுத்தவில்லை. எனவே அன்ன ராமன் கொடுத்த வில் அம்புடன் கோபமாக வெளியே வந்ததாள், அன்னையின் தெய்வீக அழகில் மேலும் பித்தனாகி அடைய முற்பட்டான், வேறு வழியின்றி அன்னை தனது அம்புகளால் தாக்கினாள். அவனும் தன் மந்திரத்ந்திர வித்தைகளால் போரிட்டான். இறுதியில் அன்னயின் அம்பு அவன் த்லையை துண்டாக்கியது அவன் சரிந்தான், அப்போதுதன் அவன் தான் மகாலக்ஷ்மியின் அவதாரமாகிய அன்னையிடம் போரிட்டதுபுரிந்தது. அன்னயின் காலில் விழுந்து மன்னிக்கும்படி மன்றாடினான்.. அன்னையும் சினம் தணிந்து அவனுக்கு முக்திகொடுத்தாள். அதுமட்டுமல்லாது அன்னையை தரிசித்து முக்திவேண்டும் பக்தர்கள் பைவரையும் தரிசித்தாலே முக்தி கிடைக்கும் என்ற பேறையும் அவருக்கு வழங்கினாள். யோசித்துப்பாருங்கள். தன்னை அழிக்கவந்தவனுக்கே முக்தி கொடுத்த அன்னை அன்னையின் மேல் பக்தி கொண்டு தரிசணம் செய்யும் நமக்கு நிச்சயம் முக்தி கொடுப்பாள். அந்த பைரவ்நாத சாமி கோவில் மாதாவின் ஆலயத்தின் மேல் புறம் உள்ளது. 
இப்போது மணி 11ஆகிவிட்டது.காலகள் வலியில் கேஞ்சுகின்றன.7மணிநேரம் மலை ஏறியகளைப்பு இனிமேல் மலை எறமுடியாதமுடியாதனிலை சோர்ந்து  உட்கார்ந்தோம். அப்போது எனது மகன் தனியே முன்னே போய்கொண்டிர்ந்தான், அங்கு ஒரு திருப்பம். அங்கே.......
அந்தத்திருப்பத்திலிலிருந்து பாதை கீழாக இறங்கத்தொடங்கியது. அங்கிருந்துபார்த்தால் மாதாவின் கோவில் அற்புதமாக ஜொலித்தது, நடப்பதற்கும் இலகுவாக இருந்தத்து, அங்கே உங்களுடைய பொருட்களை வைக்கும் அறை இருக்கிறது. செல்போன் கடிகாரம் காமிரா காலணிகள் போன்ற அனைத்துபொருட்களும் அங்கே வைத்துவிட்டுபூட்டிசாவியை நீங்கள் வைத்துக்கொள்ளவேண்டும், அதன் பின் தரிசணதிற்கான வரிசையில் கீழே ஏற்கனவே வாங்கிய அந்த அனுமதிச்சீட்டு மற்றும் பூஜை பொருட்களுடன் செல்லஆரம்பித்தோம். வரிசை நீண்டிருந்த்தது, மாதாவை காணும் ஆவல் மனமெல்லாம் நிறைந்திருக்க ஜெய் மாதா தீ என்று முழங்கிகொண்டு ஆனந்த்ம் நிரம்பிவழிய மாதாவை நெருங்கினோம், வழியில் ராணுவவீரர்களின் சோதனைக்குப்பிறகு அனுமதிக்க்ப்ட்டோம். குகையை நெருங்க நெருங்க பரவசம் பொங்கியது இதோ குகைக்குள் நுழைந்துவிட்டோம்..எங்களுக்குள் ஒர் காந்த அலை புகுந்தததுபோல் அற்புத உணர்ச்சி.எங்களின் பாவங்கள் சுமைகள் அனைத்தையும் இறக்கினால் போல் ஒர் உணர்வு, இதோ மாதா கம்பீரமாக காட்சிதருகிறாள்...வாருங்கள் குழந்தைகளே என்று அள்ளி அனைத்து உச்சிமுகரும்வண்ணம் காட்சிதருகிறாள் ,,நாங்கள் பரிபூரணசரணாகதி அடைந்தோம். எங்களைத்தொலைத்து இலகுவானோம் கண்ணீர் மல்க பட்ட அத்தனை துன்பங்களையும் மறந்தோம்,,,,ஆஹா ஆஹா அற்புதம்,,,,,,, வாழ்நாளின் முக்கிய தருணம் அது, அன்னயின் பாதங்களைதொட்டோம்...எங்களின் கவலைகள் எல்லாம் விட்டோம்...பரவசத்துடனேவெளியேவந்தோம், அதன்பின் பைரவ்மூர்த்தி தரிசணம். மாதாவை கண்டபின் பைரவ்மூர்த்தி தரிசணம் கண்டாலே பயணம் நிறைவடைகிறது, இந்தபாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதற்க்கு அரிதானது, பாக்கியவான்களுக்கே கிடைக்கும்,,,,
தரிசணம் முடிந்தது அங்கே நல்ல உணவகங்கள் இருந்தன. அனைவரும் உண்டோம். பின் கீழே இறங்கத்தொடங்கிணோம், ஆறுமணி நேரபயணத்திர்க்குபின் புறப்பட்டைடத்திற்கு வந்துசேர சூரியனும் உதித்ததது ,ஆமாம் காலை 6மணி.....உடம்பெல்லாம் வலி. மனதெல்லாம் நிறைவு..
மாதாவின் தரிசணம் அற்புதமாக நிறைவடைந்ததது, உங்களின் வாழ்வில் வாய்ப்பு இருந்தால் நீங்களும் சென்று மாதாவின் அருள்பெற்று வாருங்களேன். வாழ்க்கையில் அற்புதமான தருணங்களை அனுபவித்து பாவங்களை இறக்கி மோட்சம் அடையலாம்......
ஜெய் மாதா தீ.......கவிஞர்.அ.முத்துவிஜயன்

1 comment:

  1. உங்கள் எழுத்து நடை நானே அங்கு போனது போல் உணர்ந்தேன்.மிக்க நன்றி.

    ReplyDelete