Tuesday 5 February 2013


தனிமையில் நான் உறையும் தருணங்களில் வெடித்துப்பயணப்படுகின்றன என் நினைவுகள்
உன்னை நோக்கி தாபத்துடன்
துடிக்கும் எனக்கு ஆறுதல் சொல்ல
என் நினைவுகளுக்கே நினைவில்லை

உன் நினவுகளோடு உறங்கபோகிறேன்
உன்னுடனான கனவுகளுடன் மயங்கிக்கிடக்கிறேன் விழிக்கள் மூடி மூடியவிழிகளின் வழியே 
முட்டி மோதி வழிகிறது உன் நினைவுகள் கண்ணீராய்.....

விழிஓரம் துளிர்க்கிறது உன் நினைவுகள்
கண்ணீர் துளிகளாய்
உள்ளே உறைய வழியில்லாமல் 
சிந்தும் ஒவ்வொரு துளியிலும் 
உன் முகமே உருண்டோடுகிறது
என்முகம் நனைத்து

உன் புல்வெளி முகத்தினிலே 
பனித்துளியாகஉன் சிரிப்புமுத்துக்கள் 
குட்டிக்குட்டியாய் பல வானவில் பாவனைவண்ணங்களுடன் 
என்னைதீண்டும் குளிர்ச்சியுடன்

உதிர்ந்தமலரின்இ தழ் போல 
உதிர்ந்து உலர்ந்துகொண்டிருக்கிரது 
எனது இதயம் உன் நினைவுகளாலே
 என் கண்ணீர் துளிகளும் வரண்டு
மெளனமாக அழுதபடி

உனது பார்வை விதைக்கிறது காதலை என்னுள் உனதுஸ்பரிஸஙகள் நீரூற்றி வளர்கின்றன
காதல் விருட்சம் வளர்கிறது கர்வமாகவே
காலங்கள் தாண்டி .......

எனது சோகங்களையெல்லாம் சுரம் பிரித்து வைதிருக்கிறேன் 
என் இதயதின் இருண்ட பக்கங்களில்
 கண்களுக்கு தெரியா வண்ணம் 
என் கண்ணீர் மழை தவிர்க்கும் பொருட்டு

என் கவிதை வரிக்களுக்குள்ளே 
விரவிக்கிடக்கின்றன காதல்வரிகள்
பனிக்கட்டிக்குள் உறைந்திருக்கும் நீர் போல
துளிர்த்தே இருத்தலை உணர்த்தியபடி

உன் மீதுள்ள காதல் மழையில் என்னை நானே நனையவக்கிறேன்
உன் காதல் மொழிகளை எதிர்கொள்ள உன் காதலைச்சொல்லும் 
அந்த ஒற்றை நிமிடதிர்காகதான் காத்திருக்கிறேன் உயிரோடு...

மலரும் பூவாய் சிரிக்கிறாய்
மலர்ந்தேஎன்னைமயக்குகிறாய்
வாசங்களால் என்னை வசமாக்குகிறாய் 
கண்களால் கைதுசெய்கிறாய் 
கவிதையால்என்னை கட்டிப்போடுகிறாய்

சண்டைகளுக்குள்ளும் காதல் செய்கிறாய்
 சாதுர்யமாக காதலுக்குள்ளும் சண்டை செய்கிறாய் 
சாதனையாக மோதலுக்குள்ளும் மோகம் கொள்கிறாய்
 முத்தங்கள்கொடுத்தே என்னை கிறங்க வைக்கிறாய்


என் மோகத்தை கூட்டுகிறாய்துமுகத்தைநிமிர்த்தி 
தாகத்தை தணிக்க்றாய் முத்தங்கள் பொழிந்து 
தேகத்தைவளைக்கிறாய் உனக்கு லாவகமாக 
வாரிவழங்குகிறாய் காதலை சப்தமின்றி

உன்னை அனைத்து உன்னுள் தேடுகிறேன் என்னை
எனக்காகவே காத்திருந்த உன் உயிர்த்துகள்கள்
ஒட்டிக்கொள்கின்றன பரவசமாய் என்னுடம் 
கண்மூடித்தேடுகிறாய் நீ என்னுள்ளும் உன்

எனது கவிதை நூலின் பக்கங்களில் வியாபித்துக்கிடக்கிறாய் 
விழிகள் மூடி கருத்துகளாகவும் 
கவிதைவரிகளாகவும் 
காய்ந்த கண்ணீர் கோடுகளாகவும்

பழகிய இடங்களில் படுத்துப்புரல்கிறேன் 
உன் நினைவாலே தனிமையின் நரகசுமைகளை உதறிவிட 
ஆனால் உதறுவதாக ஒட்டிக்கொள்கின்றன 

உன் முன்னால் கைகலால் முகம்மறைத்து வெட்கம் கொள்கிறேன்
 நீ என் கைபிரித்து முகம் காண்பாய் 
என என்னை தோல்விஅடையச்செய்கிறாய் 
உன் சிரிப்பால் நானே கைதிறந்து பார்க்கும்படி
உன் நினைவுகள்தூசுகள்போல

உன் இதழின்ஒற்றைப்ஸ்பரிசத்தில் 
ஒர் புதிய உலகை 
அறிமுகம் செய்து வைத்தாய் 
மற்ற உலகை மறக்கச்செய்தாய்

விழி இமைக்குக்கும் ஒவ்வொரு 
மணித்துளியிலும் விலகுவதைத்தாங்காது 
இமைக்காது நோக்குகிறேன்
இனியவளே உன் முகத்தை....

காற்றின் சீற்றங்களுக்குள்ளே சிறைபட்டுக்கிடக்கிறது 
உன் மூச்சுகாற்று மரங்கள் அதை சுரம் பிரித்தவுடன் 
மறுபடி உன்னை நாடி வரும்
உன்சுவாசக்காற்றாய் என்னைப்போலவே

இதயம் உள்ளே இருக்கும் உன்னை 
இருவிழிகொண்டு தேடுகிறேன் பேதை
 நான் கண்களுக்குத்தெரியவில்லை 
கண்ணீரை நிறுத்தும் வழி

எனது கவிதையின் 
அகமும் புறமும் 
ஆதியும் அந்தமும் 
சந்தமும் சப்தமுமாய் 
யாதுமாகி நின்றாய் நீ

உன் முன்னால் கைகலால் முகம்மறைத்து வெட்கம் கொள்கிறேன்
 நீ என் கைபிரித்து முகம் காண்பாய் என என்னை 
தோல்விஅடையச்செய்கிறாய்
 உன் சிரிப்பால் நானே கைதிறந்து பார்க்கும்படி

உன் ஒற்றைப்புன்னகையில் என்னைச்சாய்க்கிறாய் 
ஒரவிழிப்பார்வையில் உள்ளத்தைத் தைக்கிறாய் 
விலகி இருந்தே விசமம் செய்கிறாய் 
விண்ணில் என்னை பறக்கவைக்கிறாய்..

உனது களவாடல்களை யாரிடமாவது
சொல்லத்துடிக்குது மனது 
ஆனால் தடை போடுகிரது வெட்கம் 
என்ன திறமை உனக்கு திருட்டுப்பயலே

உன் செல்லக்கடிகளில் சிக்குண்டு 
சிறைபட்டுக்கிடக்கிறது 
எனது உயிரும் உணர்வுகளும் 
விடுதலை விருப்பமின்றி

No comments:

Post a Comment