உனதுவருகைதிருவிழா
மோகனம் முகாமிட்டுக்கிடக்கிறது
தாபம் தஞ்சமடைதிருக்கிறது
காதல் கடிவாளம்போட்டு இழுக்கிறது
கண்கள் காவியமாகிறது
உன் கயல் விழிகள் காதல் பாடம்நடத்துகிறது
இதழ்கள் கவிதை எழுதுகிறது
வதனம் பூவாக மலர்கின்றது
வண்ணம் வசீகரிக்கிறது
உன் பட்டு விரல்கள் பட்டு
நீரும் ஒவியமாகிறது
தாமரை இலையும் பூவாகமலர்கிறது
நாணலும் நாணம்கொள்கிறது
நாவாய் நகர மறுக்கிறது
புற்களும் பூக்களாகும்
புள்ளினங்களும் கவிபாடும்
தென்றலும் இசைபாடும்
தேன் மதுரமும் சொட்டிவைக்கும்
உன் பாததரிசணம் கண்டு
தனிமையில் உறையும் தருணங்களில்
என்னுள் பொங்கும் உன் நினைவுகள்
என்னை உன்மத்தமாக்குகிறது
என்னை முடக்கிப்போடுகிறது இயங்கவீடாமலே
நீ இயக்குகிறாய் எங்கிருந்தோ என்னை....
பூக்கள் மலருகின்றன் உன் வருகைகண்டு
புற்கள் சிரிக்கின்றன உன் பொற்பாதஙகள் பட்டு
குயிலும் மகிழ்ந்து கூவுகிறது நீ வருமோசை கேட்டு
மரங்களும் தலைஅசைக்கின்றன
உன் தலை அசைப்புபார்த்து...
No comments:
Post a Comment