அர்த்தமற்ற அமைதி என்னை அலைக்களிக்கிறது
ஆழ்மனதின் வலி உயிரைப்பிசைகிறது
உள்ளே நுழைந்து ஊணை உருக்குகிறது
உன்னை வேண்டி உள்ளம் தவிக்கிறது
மயங்கிக்கிடக்கிறேன் நான் மடிமீதல்ல மனம்மீது
விழுந்துகிடக்கிறேன் விழிக்குளத்தில்
நீந்துகிறேன் கனவுகளில்
மயங்கியேவாழ்கிறேன் கவிதைகளில்
மெளனகாயங்களால் உறைந்துகிடக்கிறேன்
உனக்கும் எனக்கும்மான பிரிவு என்று ஒன்றில்லை
இடைவெளியில் சிறு மாற்றம்
சிலநேரம் குறைவாக சிலநேரம்
மிகக்குறைவாக அவ்வளவே
மலரும் மயிலிறகும்
மலரின் வாசமும் மயிலிரகின் வருடலும்
இரவெல்லாம் என்னை இம்சிக்கின்றன
உடன் நீ உறையாதால்
No comments:
Post a Comment