விளக்கின் அடியில் உள்ள இருள் போல
என் போலி முகமலர்வின் ஆழத்தில்
உன் நினைவுகள் நிழலாய்
விளக்கணைந்ததும் வீரியமாக பரவுகிறது என்னுள்
விழுந்துகிடக்கிறேன்விசும்பல் களுடன்
சிதறிக்கிடக்கின்றன உன் நினைவுகள்
உதிந்தமலரிதழ்கள்போல
வாடுமுன் வருவாயா இல்லை
என்னை வாட விடுவாயா.....
காதல் நினைவு பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்கிறதுஎன் மனவானில்
உந்தன் நினைவு அன்னப்பறவையாக
நீந்துகிரது என் மனக்குளத்தில்
இரைக்காக காத்திருக்கும் பூனைக்குட்டியாய்
என் மனம் காத்திருக்கிறது
உனக்காக இரவெல்லாம் கண்விழித்து
நாணச்சிரிப்பிலே நர்த்தணமாடும் வதனம்
முத்துபல் முன்னே நின்று முகவுரை வழங்க
மோகனப்புன்னகை கவிதை எழுதுகிறது
தாமரை முகத்தினில் தவமிருக்கிறது அழகு
மனம் மயக்கும் தேவதை
மயக்கங்களின் அற்புத விதை
மனங்களின் மாயை
வளர்க்கிறாள் காதல் தீயை
அருவி மலையின் மடியில் விழுவதைப்போல்
எனது மடியினில் விழுகிராய் குளிர்விக்கிராய்
மரங்களுக்கு நீர் வார்ப்பதுபோல
மனதுக்கு இதமாகிராய் மயங்கிகிடக்கிராய்
உனது மெல்லிய பார்வைஅலைகள்
உள்ளே பொங்கும் உணர்வு அதிர்வுகளை
காட்டிக்கோடுக்கிறது
உனது ரத்தநாளங்களில்
பொங்கும் வேகத்தின் அளவுகோல்.......
உன் நாடி நரம்புகளை விரல்களால் மீட்டுகிறேன் உன்னுள்புதைந்திருக்கும் அபூர்வம்
இசையாக பிராவாகிக்கிறது சுரம் மாறாமல்
எட்டாவது சுரமாய் எனக்குமட்டும் எட்டும் சுரமாய்
இறகுகளாகிப்பறக்கின்றன
என் இதயம் வானமெங்கும்
உன் வண்ணமாக மாறி
இலக்கில்லாமல்கனத்துடன்
No comments:
Post a Comment