Tuesday, 5 February 2013

கவிதைப்பூங்கா

உதிர்த்த முத்துக்கலை எண்ணிப்பார்க்கிறேன் 
உதிர்ந்த்தெப்படி என்றும்எண்ணிப்பார்க்கிறேன் 
கலங்கும் கண்களை தேற்றிப்பார்க்கிறேன் 
கலைந்துபோய் தரையில் கிடக்கிறேன்

,உந்தன் பின்னே வருகிறேன்
உருகுதலின் வெளிப்பாடாய் உன் ஈரக்கை பிடித்து
உன் கனிவு பார்வை என்னைகைதூக்கிவிடுகிறது
தனிமைசேற்றில் நான் சிக்குறும் வேளைகளில்

கனவுச்சிறைகளில் நான் லயித்திருக்கிறேன்
தொலைதூரங்களில் மேகங்களிடையே
மாறும்உன் முகபாவங்களை ரசித்தபடி
வண்ணமயமாக வானவில்லாய் நீ

எனது கவிதையின் எழுத்தின் நிழலாக நீ
எனது எழுதுகோலின்மையாக உன் நினைவுகள்
எனக்குள்ளே ஓடும் சிந்தனையாக உன்னுடனானகனவுகள்
ஒவ்வொருமுறையும் பக்கங்களை நனைத்துக்கொண்டே
நகர்கிறது எனது எழுத்துப் பயணம்
கார்திகைமாத மேகம்போல்

எனது கவிதைப்புத்தகதின்
பக்கங்களைஏன் நனைக்கிறாய்
உன் நினைவுகளால்
நனைந்து கிழிகிறது பக்கங்கள்
என் இதயம்போலவே

பனித்துளியில் குளித்து
சிலிர்ப்புடன் பன்னீர்மலர்கள்
ஈரம்சொட்ட் சொட்ட வந்து நிற்க்கும்
உன்னைபோலவே தலை கவிழ்ந்து

மயிலிறகாய் வருடுகிறாய்மனதை
மயக்கி விழிக்கிறாய் மான்விழியால்
காத்திருக்கிறாயா காக்கவைக்கிறாயா

மொழிஅகராதியில்
எந்தபக்கத்தில் தேடினாலும்
உன் விழிமொழியின்
விளக்கம் தென்படவில்லை
இதழோரச்சிரிப்பு
சிறு விளக்கம் அளிக்கிறது
தெற்றுப்பல் முகவுரை அளிக்கிறது

No comments:

Post a Comment