உன் நிழல்களால் வளர்க்கப்பட்டு
உன் நிஜங்களால் நிராகரிக்கப்படும்போது
நிலைகுலைகிறேன் நீர்குமிழாக
நீர் குமிழுக்குள் காற்றாக நீ
வெட்கச்சிரிப்பில் என்னை வேரருக்கிறாய்
மாறும் முகபாவங்களால் மனம் மயக்குகிறாய்
அடிமை என சொல்லியே அடிமை ஆக்குறாய்
அழகின் சிரிப்பாக ஆளுமைசெய்கிறாய்.....
கண்களால் கைதுசெய்கிறாய்
இமைச்சிறைக்குள் இருத்திப்பார்க்கிறாய்
இதயஅறைக்குள் அடைத்து இம்சைசெய்கிறாய்
நான் ஆயுள் தண்டணைக்கைதியா
இல்லை சந்தேகத்தின்பேரில்
விசாரணைக்கைதியா ......
மூங்கிலாக இருந்த என்னை
துளையிட்டு உன் சுவாசத்தால்
இசைஉயிர் கொடுத்து
புல்லாங்குழல் ஆக்கினாய்
இதழ்களால் காதுமடலில்கையொப்பமிடுகிறாய்
இதயத்தில் கவிதை எழுதுகிறாய்
இமைகளில் கதைஎழுதுகிறாய்
காதல் புத்தகமாக்குகிறாய் என்னை
No comments:
Post a Comment