Tuesday, 5 February 2013


வெடித்துக்கிளம்பும் அழுகையின் 
வேர்களைத்தேடுகிறேன் 
வேராக நீ சென்றதனால் என்றறிந்து
வெட்டும் எண்ணம் தவிர்த்து தவிக்கிறேன்

மௌவுனங்களின் மடியில் மண்டியிடுகிறேன்
 மயக்கங்களின் பக்கங்களில் வார்தையாகிறேன் 
கலக்கமுறும் கவிதைகளில் பொருளாகிறேன்
வலிகளினால் கைதுசெய்யபடுகிறேன் 
கண்ணீல் நீர் வழிய கலங்கி நிற்கிறேன்

நமது காதல் சாம்ராஜ்யங்களில் 
மென்மையின் மேன்மையும் 
வன்மையின் வலிமையும்
ஊடாடிகிடக்கின்றன உயிர் உணர்வுகளாய்

மலர்களின் நடுவே தேடிக்கொண்டிருக்கிறேன்
வண்டாக நீ வருவாயென 
உன் வாசம் எதிர்னோக்குகிறேன் 
வாசம் செய்யமாட்டாயா என

என்னை தொலைத்துக்கொண்டிருக்கிறேன் 
உன்னில் தேடும் விருப்பங்களுடனே 
உன்னில் எனை காண்பேனா 
மண்ணில் வீழ்வேனா என்றறியாமல்

விரிந்திருக்கும் என் இதழ்களில்
விதைத்திருக்கிறேன் புன்னகையை 
விருட்சமாக்குவதும் வீணாக்குவதும்
நீ பொழியும் முத்தமழையினால் தான்

மனவெளியில் யாரும் அறியா 
மாயக்கோட்டை கட்டுகிறேன் மன்னவனே உன்னை நம்பி 
உன் நினைவு மண்ணெடுத்து என் 
கண்ணீரால் குழைத்து காதல் மயிலிறகால்

பிரிதலுக்கு கொடுக்கும் நேரத்தை
 என்னைப்புரிதலுக்குச்செலவிடு
 இதழ்பிரித்து என் இன்னுயிர் எடு 
கொடுஉயிருணரும்வாய்ப்புதா


பூவிதழ்களில் வரையப்பட்ட வாசனை கவிதைகள் 
வரிகளுக்கு அப்பாலும் பேசுகின்றன 
உன் விழிகளில் வரைந்திருக்கும்
 கவிதைகள் போலவே வண்ணபூச்சிகளைகவரும் வண்ணம்

No comments:

Post a Comment