Tuesday, 5 February 2013


கவிதைகளாகத் தைக்கிறாய் இதயத்தில்நொடியில்
கனவுகளாக தங்குகிறாய் இரவுகளில்
காலங்கள் கடந்து நிற்க்கிறாய் 
கண்ணீரில் மிதக்கவைக்கிறாய் நாட்கணக்கில்

அடர்ந்த இருளில் முடிவற்ற பாதைகளில் 
இலக்காக உன்னை மட்டுமே வைத்துப்பயணம
வழித்துணையாக உன் நினைவுகள் மட்டுமே 
உன்னை நான் பெறுவேனா என்னை நான் தருவேனா 
உன்னை நான் அடைவேனா உருகியே மடிவேனா

என்னில் ஊடாடும் உன் உன்னதநினைவுகள் 
உறங்கமறுக்கும் உன்னைச்சார்ந்த கனவுகள் 
உன்பிரிவினால் உள்ளமெல்லாம் ரணங்கள்
கண்ணீரால் நிறைகிறது நீ பிரிந்த தருணங்கள்.

No comments:

Post a Comment