இன்றயகவிதைகள்
சிரித்த உன் சிரிப்பில் சிதறிபோனேன்
சிந்தனைஎல்லாம் நீயாகிப்போனேன்
நீர் காணா கொடியாகிப்போனேன்
நிலைக்லைந்துநிர்மூலமானேன்
சிறகடித்துபறக்கச்செய்வாயா
இல்லை சிறகொடித்தே பார்ப்பாயா
உன்மடிசாயகிடைக்காதபோது
உன்னிடத்தை நிரப்புகிறது
என் தலையணை தலை சாய்க்க
என் சோகங்களை உள்வாங்கி
புதைத்துக்கொள்கிறது யாரும் அறியாமலே
என்னைப்போலவே
மலர்களெல்லாம் மண்டியிட்டுக்கெஞ்சுகின்றன
மாது என்னுடன் துயில்கொள்ள
மன்னவனே நீ எங்கே மாயமாகிப்போனாய்
மலராக இருப்பதுவும் நீதானோ
மனம் மறுகுகிறது மாயவனே சொல்...
உன்னினைவு மறந்தால் உடனே வருகிறது துயில்
பட்டுமெத்தையானாலும் பசும்புல்வெளியானாலும்
மறக்கும் வழிதான் தெரியாமல் மயங்குகிறேன்
மாது நான் தூக்கமின்றி
உன் முகத்தை பிரதிபலிப்பதாலே
அழகாகிறது வெண்நிலவும்
மேடுபள்ளங்கள்மறைத்து
நீ என்னை நோக்கித்திரும்பும்போது
தேய்கிறது அம்மாவசையாக
உன்னால் உருவாகும் மின் காந்தாதிர்வுகள்
என்னைச்சுற்றி கண்ணுக்குத்தெரியாத வண்ணங்கலாக
எண்ணை வண்ணமயமாக்கி
விந்தைகள் புரிகின்றது
எனது இதயம் இயக்கும்
மெல்லிய மின்னலைகளுக்கு
மினழுத்தமாக நீ நான்
துயில்கொள்ளும் போதும் உனதுவிழிப்புகளில்
என் இதயம் குருதியைச் சுழலவைக்கிறது
உன்னைச்சுற்றியே
வண்ணப்பறவைகளின் இறகுகள் அனைத்தையும்
இரவல்வாங்கி என்னோடு இணைத்து
வாயுக்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு
வான்வெளியில் பறந்தது தேடுகிறேன்
மேகமாக உன்னை யாரோ கண்டதாகக்
கதைகள் சொன்னதால்
No comments:
Post a Comment