Tuesday 5 February 2013


விளம்பர இடைவேளை 
நேரங்களே 
விடுதலை நேரங்களாக 
சீரியல் சிறைய்களாக இல்லங்கள் 

கைலாயத்திற்கு கழுதைமேல் 
பயணம் 
முக்தி கிடைத்தது 
கழுதைக்கு 

பெண்ணும் சன்னும் 
செய்யாததை 
செய்தது 
பென்சன் 

மண்ணை 
அள்ளி  போட்டது 
பொக்லைன்
இயந்திரம் 
கூலிகளின் பிழைப்பில் 

கடன் வாங்கி 
கிணறு வெட்டினேன் 
நீர் வந்தது 
கண்களில் மட்டும் 

வீட்டு வசதி 
வங்கி கடன்களால் 
உயர்கின்றன 
வங்கிகளின் 
கட்டிடங்கள் 

இறக்குமதி செய்து 
விதைத்தோம்
இறக்கும் வழி  சொன்னது 
பி டி பருத்தி  

ஆலமரம் தாங்கும் 
அதன் விழுதுகள் 
அநாதை விடுதியில் 
அன்னையின்  
பொழுதுகள் 

+௨ தேர்வில் 
மதிப்பெண் குறைவு 
அடி விழுந்தது 
பெற்றோருக்கு

பிணத்தின் 
மீதுள்ள பூக்களிலும் 
தொடர்கிறது 
வண்டுகளின்  வசூல் 
கந்துவட்டி 

மரங்களின் விதைகள் 
சுமந்து மரம்  வளர்க்கும்   
பறவைகள் 
மரிக்கும்போதும் 
சேர்த்து எரிக்கும் 
மனித பிறவிகள் 

தாரை பூசியது 
சாலை பணி இயந்திரம் 
கூலிகள் 
முகத்தில் 

தள்ளினால் தான் 
நகற்கிறது
லஞ்ச பணத்தில் 
வாங்கிய 
வண்டி 

கறை படிந்த 
கைகளுக்கு வாக்களித்தோம் 
நக முகத்திலும் 
கறை  

உங்களின் குளிர்சிக்காக 
என்சட்டையை 
ஏன் கிழித்தீர்கள்
ஓசோன் ஓட்டை 

வைர பனித்துளி 
மகுடம் அணிந்தும் 
 பணிவுடன்
" புல்"
வான மைதானத்தில் 
உதைக்க ஆளில்லா 
உஷ்ணபந்து 
உச்சி பகலவன்

கை கூப்பி கதறுகின்றன 
மரங்கள் இலை ஆடை 
உதிர்த்து  
நிர்வாணமாய் 

வெட்டி அடுக்கப்பட்ட 
மரங்களின் கீழே 
எட்டி பார்க்கிறது 
குட்டி செடி ஒன்று 
நடுக்கத்துடன் 

மரப்பாச்சி பொம்மைகளை 
விரட்டின  ஆயுதமேந்திய 
அந்நிய பொம்மைகள் 

No comments:

Post a Comment