Saturday, 20 June 2015

சுவர்களில் ஏதும் 
கிறுக்கல்களில்லை
அனத்துப்பொருட்களும்
அதற்கான இடங்களில்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன
கழிவுகளின் மணமோ
துணிகள் உலர்த்தப்பட்டோ
இருக்கவில்லை
அசாதாரணமான 
அமைதியுடன் 
தேவையான வெளிச்சம் 
மட்டுமேஒளிர்ந்திருந்தது
பொம்மைகள் கூட
ஒழுங்காக அடுக்கி
வைக்கப்பட்டிருந்தது
அந்தவீட்டில் ஓர் குழந்தை
இருந்தது..
ஓவியமாக......

No comments:

Post a Comment