உன்னுடன்நான்
பகிர்ந்த இரவு
என்னுள் புதைந்துகிடக்கிறது
சுகவேர்களாய் அங்கமெங்கும்
உதறிஎழமுயல்கையில்
அழுத்துகிறது உன்
வெப்பநினைவுகள் ஆயிரம்
கரங்கள் கொண்டு
இதழ்களை தென்றல்
தீண்டும்போதெல்லாம்
தீபற்றுகிறது தேகமெங்கும்
உயிரைப்பிடுங்கும்
பெருவலி பொங்கிஎழுகிறது
நெருங்கி உயிர்தந்தாய்
விலகி உயிர்பிடுங்குகிறாய்
என் கதறலைக்காணும்
துணிவில்லாமல்
ஓடி ஒளிகிறாய்.ஏனடா......
பகிர்ந்த இரவு
என்னுள் புதைந்துகிடக்கிறது
சுகவேர்களாய் அங்கமெங்கும்
உதறிஎழமுயல்கையில்
அழுத்துகிறது உன்
வெப்பநினைவுகள் ஆயிரம்
கரங்கள் கொண்டு
இதழ்களை தென்றல்
தீண்டும்போதெல்லாம்
தீபற்றுகிறது தேகமெங்கும்
உயிரைப்பிடுங்கும்
பெருவலி பொங்கிஎழுகிறது
நெருங்கி உயிர்தந்தாய்
விலகி உயிர்பிடுங்குகிறாய்
என் கதறலைக்காணும்
துணிவில்லாமல்
ஓடி ஒளிகிறாய்.ஏனடா......
No comments:
Post a Comment