Wednesday, 24 June 2015

வெண்ணித்தண்ணியெ
வெளியே பானையில
காயவைச்சு
எண்ணைய பூண்டுமெளகு
போட்டு சூடாக்கி 
வெயிலுவரதுக்குமுன்னாடி
மனைப்பலகையில
ஒக்காரவைச்சி உச்சந்தலயில
எண்ணவைவச்சி
ஒவ்வொரு எலும்பா
புடிச்சிவிட்டு
அக்கக்காநீவிட்டு
வெக்கபப்படுறமாதிரி
டவுசர்கலட்டிவிட்டு
விடாமஎண்ணதேச்சி
கண்ணுலகூடஎண்ண
ஊத்தி கரைச்சிவைச்ச
சீக்காபோட்டுகதறக்கதற
தேய்ச்சுவிட்டுபக்குவமான
சூட்டில பாகமுழுசும் 
எண்ணபோக
தேச்சுகுளிப்பாட்டி
கடன்வாங்கி வைச்ச
கறிக்கொழம்பு ஊத்தி
தட்டுநிறயசோறுவைச்சு
சாப்புடுகண்ணு 
எலும்பும்தோலுமாஇருக்கனு
சொல்லும்போது
உன்னையும்மீறி
உன்கண்ணுகலங்குமே அம்மா
நீபோனப்புறம் 
எண்ணதேய்ச்சிகுளிக்கிறதே
இல்ல ஏன்னா உன் நினைவுவில்
வரும் கண்ணீரைக்
கட்டுப்படுத்தமுடியல
Like · Comment · 

No comments:

Post a Comment