அன்புமகனுக்கு ஓர்கடிதம்
---------------------------------------------
பயப்படாதே காசுகேட்டு
எழுதவில்லை இக்கடிதத்தை
நீகொஞ்சவருமாணத்தில்
கஸ்ட்டப்படுவதாகச்சொல்லி
என்னைஇந்த ஆதரவற்ற
முதியோரில்லத்தில்சேர்த்தாய்
இங்கு அன்பும் ஆதரவும் கிடைக்கிறது
பாசம்தான் பஞ்சமாக இருக்கிறது
சரி விசயத்திற்குவருகிறேன்
இத்துடன்2லட்சத்திற்கான
காசோலை இணைத்திருக்கிறேன்
எனதுகிட்னியை விற்றதால்
கிடைத்தது...இன்னொன்றையும்
விக்காஆசைதான்
இன்னொரு2லட்சம் கிடைக்குமே
ஆனால் முடியாதென்று
சொல்லிவிட்டார்கள்
இப்பணத்தைவைத்து
எனதுபேரன் பேத்திகளை
அதாவது உன் பிள்ளைகளைப்
படிக்கவை என் பணம் என்று
தயவுசெய்து சொல்லிவிடாதே
பிள்ளைகள் பிற்காலத்தில்
உன்னைத்தூற்றகூடும்
முக்கியமானஒன்று
உடனே பார்க்கவந்துவிடாதே
பணத்துக்காகவந்தான் என்று
சொல்லுவார்கள்..ஒருநாள்
இருக்கும்கிட்னியோடு
என்னைஎரிப்பார்கள்
அப்போதும் வராதே ஏன் என்றால்
நீஒருவேலை அழுதால்
அதைதாங்கும் சக்தி எப்போதும்
எனக்கிருக்காது........
ஏன்னா நீ என்மகன்
நான் உனக்கு அம்மா இல்லை
என்று நீசொன்னலும்............(அ.முத்துவிஜயன்)
---------------------------------------------
பயப்படாதே காசுகேட்டு
எழுதவில்லை இக்கடிதத்தை
நீகொஞ்சவருமாணத்தில்
கஸ்ட்டப்படுவதாகச்சொல்லி
என்னைஇந்த ஆதரவற்ற
முதியோரில்லத்தில்சேர்த்தாய்
இங்கு அன்பும் ஆதரவும் கிடைக்கிறது
பாசம்தான் பஞ்சமாக இருக்கிறது
சரி விசயத்திற்குவருகிறேன்
இத்துடன்2லட்சத்திற்கான
காசோலை இணைத்திருக்கிறேன்
எனதுகிட்னியை விற்றதால்
கிடைத்தது...இன்னொன்றையும்
விக்காஆசைதான்
இன்னொரு2லட்சம் கிடைக்குமே
ஆனால் முடியாதென்று
சொல்லிவிட்டார்கள்
இப்பணத்தைவைத்து
எனதுபேரன் பேத்திகளை
அதாவது உன் பிள்ளைகளைப்
படிக்கவை என் பணம் என்று
தயவுசெய்து சொல்லிவிடாதே
பிள்ளைகள் பிற்காலத்தில்
உன்னைத்தூற்றகூடும்
முக்கியமானஒன்று
உடனே பார்க்கவந்துவிடாதே
பணத்துக்காகவந்தான் என்று
சொல்லுவார்கள்..ஒருநாள்
இருக்கும்கிட்னியோடு
என்னைஎரிப்பார்கள்
அப்போதும் வராதே ஏன் என்றால்
நீஒருவேலை அழுதால்
அதைதாங்கும் சக்தி எப்போதும்
எனக்கிருக்காது........
ஏன்னா நீ என்மகன்
நான் உனக்கு அம்மா இல்லை
என்று நீசொன்னலும்............(அ.முத்துவிஜயன்)
No comments:
Post a Comment