Saturday, 20 June 2015

நாத்துநட்டு
களைஎடுத்து
கதிரறுத்து
போரடிச்ச 
களத்துமேடு
தண்ணிகிடந்த
கம்மா ஊரணி
எல்லாம் ரோடாப்போச்சு
அந்தரோட்டுல
நடக்கக்கூடமுடியல
முன்னாடில்லாம்
ரோட்டோரம் 
மரமிருக்கும்
ஒதுங்கலாம்
இப்போஅதெல்லாம்
காணோம்
எல்லாமே வேகமாப்போகுது
எங்கபொழப்பத்தவிர
போறவண்டிகிட்டெல்லம்
காசுவசூலிக்கிறாங்க
எப்போ நடக்குறத்துக்கும்
காசுகேக்கப்போறாங்களோ.....
தெரியல,,
Like · Comment · 

No comments:

Post a Comment