ரோட்டோரக்கடை
சோளக்கருதை சுட்டு
உப்பத்தடவி முளகாத்தூள்
தூவி குடுத்தா கருதுக்கு
அம்பதுபைசா நிக்கும்
கஞ்சி வச்சிட்டுவந்தேன்
அந்தமனுசனுக்கு
குடிச்சிச்சோ இல்லையோ
முடியாதமனுசன்
தவிக்கிதுமனசு கிடந்து
ராத்திரிபூரா இருமிகிட்டே
இருந்துச்சு நானும்தூங்கல
போய்வீடுசேரராத்திரி
ஒன்பதுமணியாகும்
மாயக்காகிட்ட
சொல்லிட்டுவந்தேன்
மனசுகேட்காம
ஓடியாடிவேலைசெய்யுற
வயசாஎனக்கு
முடிஞ்சவரைக்கும்தான்...உசுரு
ஆசை ஒன்னுதான்
சாமிகிட்டவேண்டிகிட்டேன்
எனக்கு முன்னாடி
அவர்போய்டனும்
ஏன்னாஎன்னவிட்டா
ஒருநாதியுமில்லா அதுக்கு
பாவம்பச்சமண்ணு...
படுத்தபடுக்கையாக்கிடக்கு......
(நிழற்பட உதவி ஃப்ராங்கிளின் குமார்)
சோளக்கருதை சுட்டு
உப்பத்தடவி முளகாத்தூள்
தூவி குடுத்தா கருதுக்கு
அம்பதுபைசா நிக்கும்
கஞ்சி வச்சிட்டுவந்தேன்
அந்தமனுசனுக்கு
குடிச்சிச்சோ இல்லையோ
முடியாதமனுசன்
தவிக்கிதுமனசு கிடந்து
ராத்திரிபூரா இருமிகிட்டே
இருந்துச்சு நானும்தூங்கல
போய்வீடுசேரராத்திரி
ஒன்பதுமணியாகும்
மாயக்காகிட்ட
சொல்லிட்டுவந்தேன்
மனசுகேட்காம
ஓடியாடிவேலைசெய்யுற
வயசாஎனக்கு
முடிஞ்சவரைக்கும்தான்...உசுரு
ஆசை ஒன்னுதான்
சாமிகிட்டவேண்டிகிட்டேன்
எனக்கு முன்னாடி
அவர்போய்டனும்
ஏன்னாஎன்னவிட்டா
ஒருநாதியுமில்லா அதுக்கு
பாவம்பச்சமண்ணு...
படுத்தபடுக்கையாக்கிடக்கு......
(நிழற்பட உதவி ஃப்ராங்கிளின் குமார்)
No comments:
Post a Comment