Friday 3 April 2020


பெற்றமனம்
மணியனுக்கும் ரேவதிக்கும் அழகான ஆண்கொழந்தபொறந்துச்சு. நல்ல செக்கச்செவேல்ன்னு கொழுகொழுன்னு அமுல்பேபி ந்னு சொல்லுவாகளே அதுமாதிரி பொறந்துச்சு. அவனோட அப்பத்தா மீனாச்சி நல்லா கண்மைஎடுத்து பெருசா நெத்திலயும் கண்ணத்துலயும் திருஸ்ட்டிப்பொட்டு வைச்சிச்சு. பாக்குறவுக கண்ணெல்லாம் அதுமேலதான் . ஆசுப்பத்திரில ஆம்பளைப்புள்ள அதுலயும் அழகான ஆம்புளப்புள்ள . எல்லாரும் மணிக்கிட்ட சந்தோசக்காசு கேட்டு வாங்கிக்கிட்டாக
வீட்டுக்குக்கொண்டாந்ததும் கொழந்தைய அப்புடிப்பாத்துக்கிச்சு. அப்பத்தா. கொஞ்சம் வளந்தவன்ன தெனம் வெண்ணய உருட்டி உருட்டி ஊட்டும் பேரும் கண்ணன் நு வைச்சி அந்த ஆயர்பாடிக்கண்ணனாட்டமே கொழு கொழுன்னு வளத்துச்சு. ரேவதியும் நல்லாத் தாய்ப்பால் குடுத்து பாக்குறவுக கேக்குற மாதிரி வளத்தா. நல்லா ஊரு சுத்துவான்
யாரு கூப்புட்டாலும் போவான் அதுனால
பொம்பளைங்க ஆசையா வந்து தூக்கிட்டுப்போயிடுவாக வீடு தங்க மாட்டான் . நேரத்துக்குத்தேடிப்போயி தூக்கிட்டுவந்துதான் பால் குடுக்கனும் அவ்வளவு டிமாண்டு அவனுக்கு. வயதுக்கு மீறிய வளர்ச்சி பத்துவயசுல 15 வயசுமாதிரி இருப்பான் . ஆனா கொஞ்சம் மொரடனா இருந்தான் , சின்னபுள்ளகளை அடிச்சி அழவைச்சி சிரிப்பான். அது தப்புன்னு சொன்னா புரிஞ்சிக்கமாட்டான்.
அஞ்சாப்புப்படிக்கும்போது அவனோட டீச்சர்கிட்ட இருந்து புகார் வந்தது எல்லாரையும் போட்டு அடிக்கிறான் . அடங்க மாட்டேன்றான்னு. ரேவதி அவனக்கூப்புட்டுக்கண்டிச்சா. அவளையும் அடிக்கவந்தான். பள்ளிக்குடத்துல பாடத்துல கவனமில்ல. படிக்கிறதே இல்ல ஊர்சுத்துறது வம்ப இழுத்துட்டுவாரது தெருப்பிள்ளைகள போட்டு அடிக்கிறது இதுதான் தெனம் புகாரு அவன் மேல
மொதல்ல கொஞ்சுனவுக எல்லாம் சண்டைக்கி வர ஆரம்பிச்சிட்டாக மோசமா நடந்துக்கிறதா. என்ன பண்ணுறதுன்னு தெரியல வீட்டுல அட்டூழியம் அதிகமாச்சு
சாப்பாடெல்லாம் கொட்டிவிட ஆரம்பிச்சான் . ஒருநா படுக்கையில தீவைச்சிட்டு சிரிச்சிட்டு இருக்கான்
பாத்துட்டு ரேவதி பதறிபோயிட்டா.
இவன் கிட்ட ஏதோ கோளாறு இருக்கமாதிரி பட்டது. சரி டாக்குட்டருக் கிட்டக் கூட்ட்டிட்டுப்போயி காமிப்போம்னு காமிச்சா, அவ்ரு டெஸ்ட்டு எல்லாம் பண்ணிட்டு மறுநாளு அம்மா அப்பாவ வரச்சொன்னாரு. என்னமோ எதோன்னு போயி பாத்தாக. அப்ப டாக்குட்டரு சொன்னாரு. இவனோட மூளை வளர்ச்சி விகிதம் ரொம்பக்ககம்மியாருக்கு. இவன் நார்மலான கொழந்த இல்ல. கொஞ்சம்
நல்லாக்கவனிச்சிப்பாருங்க. ரொம்ப அடங்காம இருந்தா இந்த மாத்திரை குடுத்து தூங்கவையுங்கன்னாரு
ரேவதியால தாங்க முடியல மகன் மூளைவளர்ச்சியில்லாதவன்றத
வீட்டுக்கு வந்தவன்ன மணியனக் கட்டிப்புடிச்சி அழுதா அவள எப்புடிச்சமாதானப்படுத்துறதுன்னு தெரியல நாமவேணுமானா இன்னொரு கொழ்ந்த பெத்துக்கலாம்ன்னான்
அதேமாதிரி பத்துமாசத்துல பொண்கொழ்ந்தபொறத்துச்சு. ஆண்டவனே இதுவாவது நல்ல புள்ளையா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டா . ஆனா
கண்ணனுக்கு அந்தக்கொழந்தைய சுத்தமாப்புடிக்கல . அதை கடிச்சி கடிச்சி வைச்சான். கொழந்த திடீருண்ணு அழுகும் போய்ப்பாத்தா இவன் கடிச்சி வைச்சிருப்பான். கட்டுப்படுத்த முடியல கட்டிவைக்கிற அளவுக்குப்போயிட்டான்
சமாளிக்க முடியல ஆளுவேற மொரடனா வளந்து இருந்தான் ஆராலயும் புடிச்சி நிறுத்த முடியல அப்பத்தான் ஒருத்தர் சொன்னாரு இதுக்கு ஒரு ஹோம் இருக்கு அங்கக்கேட்டுப்பாருங்க நல்லா க்கவனிச்சிக்கிவாங்கன்னாரு. போயி விசாரிச்சிட்டு வந்ததுல நல்ல எடமாத்தெரிஞ்சது. கொண்டு போயிச்சேக்குறதுன்னு முடிவெடுத்தாக
இவன தூக்கமாத்திர குடுத்து தூங்கவைச்சி கொண்டுபோனாக . அங்க சேத்துக்கிட்டாக மாசா மாசம் பீஸ்கட்டனும். சனி நாயிறுல வந்து பாக்கலாமுன்னு சொன்னாக. அவனச்சேத்துட்டு வந்து ராத்திரிபூராம் அழுதுட்டு இருந்தா ரேவதி. அவளைச்சமாதானப்படுத்தினான் மணி சனிக்கெழமக்கிக்காத்திருந்து போயி பாத்தப்ப கொஞ்சம் மெலிஞ்சிருந்தான்
இவுகளைப்பாத்தவன்ன அழுதான் கையப்புடிச்சிட்டு விடமாட்டின்னுட்டான்
பாவமா இருந்துச்சு. ரேவதி கண்ணுலருந்தும் கண்ணீர் ஊத்துச்சு ஆனா என்ன பண்ண , அழுதுக்கிட்டே வந்தா. மணியால சமாதானப்படுத்த முடியல.
இப்ப அவனுக்கு 20 வயசு ஆகிப்போச்சு இதுக்குமேல அங்க இருக்கமுடியாதாம் பெரியவுகளுக்கான எடமிருக்காம் அங்க போயிச்சேக்கச்சொன்னாக அங்கபோயிப்பாத்தா மனசுதாங்கல எல்லாரையும் சங்கிலியால கட்டிப்போட்டுஇருந்தாக .கேட்டப்ப இது எல்லாருக்குமில்ல. கட்டுப்படுத்த முடியாதவகளைத்தான் ந்னாக. வேறவழியில்ல. அங்ககொண்டு போயிச்சேத்தாக. பணம் நெறயா வாங்குனாக. ஆனா அதுக்குதக்க கவனிப்பில்ல. ரெண்டுமாசம் கழிச்சி ப்போயிப்பாத்தப்ப அவனோட ஒடம்பெல்லாம் தழும்பு. ரேவதியால தாங்க முடியல.பாத்தவன்ன அடையாளம் கண்டுபிடிக்க முடியாதமாதிரி மாறி இருந்தான் . இவுகளைப்பாத்தவன்ன அழுதான் அடிக்கிறாங்கன்றமாதிரி ஏதோசொன்னான் பரிதாபமா இருந்துச்சு
கைகாலெல்லாம் தழும்பு சங்கிலல கட்டிப்போட்டமாதிரி தெரிஞ்சது. ஆனா அவங்க இல்லன்னாக.ரேவதியால தாங்கமுடியல .அன்னிக்கிம் ராத்திரிப்பூரம் தூங்கல . தேம்பிதேம்பி அழுதுட்டு இருந்தா.
கொஞ்சநாளாச்சி. அப்பப்போயிப்பாத்தப்ப அவனுக்கே இவுகளை அடையாளம் தெரியல அவன் பாட்டுக்கு எதோ பேசிட்டு இருந்தான். ஒடம்பெல்லாம் அடிவாங்குனதுகான காயம் சீழ்வைச்சிருந்தது. ரத்தம் கட்டி இருந்துச்சு
அவன் கொடுமைய அனுபவிக்கிறது நல்லாத்தெரிஞ்சிச்சி.
அடுத்ததடவ அவனப்பாக்க தனியாப்போனா. போயிட்டு வந்து ராத்திரிப்பூராம் பொலம்பிக்கிட்டே இருந்தா. மறுநாள் காலையில அங்க இருந்து செய்திவந்துச்சு. கண்ணன் ராத்திரி செத்துப்போனதா. மணிக்கி ஒன்னும் புரியல. ரேவதி பேசவே இல்ல
ஒருவழியாப்போயி பாடியவாங்கி அடக்கம் பண்ணிட்டு வந்தாக ஆனா அங்க எல்லாம் ரேவதி அழுகவே இல்ல.பிரம புடிச்சவ மாதிரியே இருந்தா. மகன் போன அதிர்ச்சி அதுனால இருக்கும் ந்னு நெனச்சான் . இவ தனியாபோயிட்டு வந்தது ஒருமாதிரியா இருந்துச்சு. என்னமோ இதுல விசயம் இருக்குறமாதிரி பட்டது.
ரேவதியோட மெளனம் என்னவோ பண்ணிச்சி. என்னதான் ஆச்சின்னு கேட்டான் . பதிலில்ல கோவத்துல ஓங்கி அறைவிட்டான் சொல்லித்தொலன்னு
அப்பத்தான் அவளுக்கு சுய நெனப்பு வந்து ஒப்பாரி வைச்சி அழுதா அய்யா ஏன் மகன நானே கொண்ணுட்டனே கொண்ணுட்டனேன்னு கொரலெடுத்து அழுதா. இவனாலயும் தாங்க முடியல
அப்பசொன்னா அவன் படுற வேதனைய என்னால தாங்கமுடியல நரகவேதனை அனுபவிச்சான் என் மகன் அதான் விடுதலை குடுத்துட்டேன்னு ஒரு மாதிரியாச்சிரிச்சா. இவனுக்கும் கண்ணீர் பொங்கிடுச்சு.....மகன் நெனப்பால இவளும் மகன மாதிரியே ஆயிட்டான்னு நெனைக்கிறப்போ நெஞ்சுவெடிச்ச மாதிரி இருந்துச்சு... அவளைப்பரிதாபமா பாத்து கண்ணீர்வழிய நின்னான்....அப்ப மக வந்து கேட்டுச்சு அம்மா ஏன் சிரிக்குது அழுதுக்கிட்டே ந்னா. அவளுக்கு எப்படிப்புரிய வைக்கிறதுன்னு தெரியாம கண்ணீர்வழிய நின்னான் மணியன்
கவிச்சிகரம் .முத்துவிஜயன்






No comments:

Post a Comment